12-எழுத்து-படிப்பு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300sujathavaik_kelungal

ரேவதிப்ரியன், ஈரோடு.
? நாற்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறீர்கள். அன்றைய வாசகர்களுக்கும், இன்றைய வாசகர்களுக்கும் ரசனை உயர்ந்துள்ளதா…?

! ரேவதிப்ரியன், நீங்களும் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாகக் கேள்விகள் கேட்டு வருகிறீர்கள். அவைகளில் மாற்றங்கள் செய்திருக்கிறீர்களா ? வாசகர்கள் அப்போதும் இப்போதும் எப்போதும் நன்றாக எழுதினால் ரசிக்கிறார்கள். இன்று புதிய வாசகர்கள் நாற்பதாண்டுகளுக்கு முந்தைய கதைகளைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பிரச்னை வாசகர்கள் அல்ல, தமிழ் படிக்க வைப்பதே.

அம்பூரணி ச.நாராயணன், திருநெல்வேலி.
? இப்படி ஒரு அறிவியல் சாதனம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்பும் சாதனம் என்ன ?

! மனவேகத்தில் அவசர அவசரமாக உள்ளிடும் கதை, கட்டுரைகளை உடனே பிழை திருத்தி, ஒற்றுப் புள்ளிகள், முற்றுப் புள்ளிகள் அமைத்து, ஒரு வார்த்தையை இரண்டு தடவைக்கு மேல் பயன்படுத்தியிருந்தால் அதைக் குறிப்பிட்டு மாற்று வார்த்தைகள் சிபாரிசு செய்து, வல்லினம் மிகும், மிகா இடங்களைச் சரி பார்க்கும் நல்ல தமிழ் ‘ஸ்பெல் செக்கர்’ பிழை திருத்தி. இதுவரை வந்திருப்பதெல்லாம் அடாசு.

பிரபுராம், சென்னை.
? தமிழ் எழுத்துலகில் நகைச்சுவைக்கு சரியான இடம் இல்லாதது ஏன் ? இதற்குக் காரணம் வாசக ரசனையா ? தமிழின் இயலாமையா ? (அடிக்க வருவார்கள்!) வேறு காரணங்களா ?

! இன்று தமிழில் எழுதும் எல்லா எழுத்தாளர்களிடமும் நகைச்சுவை நிச்சயம் இருக்கிறது. நகைச்சுவையை அவ்வப்போது தொட்டுக் கொள்ளாவிட்டால் என்னால் இதனை ஆண்டுகள் நீடித்திருக்க முடியாது. தேவன், எஸ்.வி.வி. போன்ற நகைச்சுவை எழுத்தாளர்கள் இன்று இல்லைதான். நகைச்சுவை இடம் மாறி, பட்டிமன்றங்களில் ஒதுங்கி விட்டது. ஆனால் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைவு என்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன். அன்றாடக் கவலைகளில் சிரிக்க மறந்திருக்கிறார்கள். லாரி வந்ததும் சிரிப்பார்கள்.

வெ.கலையரசன், கோவை.
? சுஜாதாவைப் பற்றி ரங்கராஜன் என்ன நினைக்கிறார் ? ரங்கராஜனைப் பற்றி சுஜாதா எனும் எழுத்தாளர் என்ன நினைக்கிறார் ?

! இருவரும் ஒரே சமயத்தில் ஒரே அறையில் இருப்பதே இல்லை. இவர் வந்தால் அவர் போய் விடுவார். அவர் வந்தால் இவர். நான் அம்பி இல்லை.

தி.ராஜி, திருநெல்வேலி.
? உருது எழுத்து மட்டும் ஏன் உல்ட்டாவாக எழுதப்படுகிறது ?

! குழந்தையின் கையில் பென்சில் கொடுத்து எழுதச் சொன்னால், முதலில் வலது பக்கம் தான் எழுத ஆரம்பிக்கும். இயற்கையாக வலது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு இதுதான் சௌகரியம். உருது, அரபிக் எல்லாம் உல்ட்டா இல்லை. நாம்தான் உல்ட்டா. மொஹஞ்சதாரோ, சிந்து வெளி நாகரிகத்தின் பட எழுத்துக்கள் வலதிலிருந்து இடது பக்கமாக எழுதப்பட்டவை என்பதை எழுத்துக்களின் நெருக்கத்திலிருந்து கண்டுபிடித்தார்கள். ஜப்பானிய மொழி மேல் கீழ், இடம் வலமாக மூன்று வகை லிபிகளில் எழுதப் படுகிறது. எனினும் அவர்கள் முன்னேற்றத்தைப் பாருங்கள்.

sujathavaik_kelungal

கேள்வி பதில் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s