அணிலும் எலியும் – பகவான் ரமண மகரிஷி


பகவான் ரமணர் உரைகேட்கப்
பக்தர் இருந்தார் அமர்ந்தபடி
அகமும் முகமும் மலர்ந்தபடி
அருளுரை சொன்னார் கனிந்தபடி

அணில்போல் இருங்கள்; தவறில்லை!
ஆனால் எலிபோல் கூடாது!
மணிமொழி இதனை உதிர்த்தபடி
மவுனமானார் நம் ரமணர்!

காரணம் வேண்டிப் பக்தர்கள்
காத்துக் கொண்டே இருந்தார்கள்
பூரண ஞானி விடைசொன்னார்
புன்னகை ஒன்றைத் தந்தபடி!

உண்ணும் அணிலைப் பாருங்கள்;
உண்டது போதும் என உணர்ந்தால்
கொண்ட கனியை அதன்பின்னர்க்
கொறிப்பதில்லை; ஓடிவிடும்;

ஆனால் எலியோ பதுக்குவதில்
ஆசை கொள்ளும்; மறுபடியும்
தானாய் வந்து பொருள்தேடும்
தனக்கு மீறிச் சேர்த்துவிடும்

போதும் என்ற மனம் இன்றிப்
பொருளைச் சேர்க்கக் கூடாது
நீதி இதுதான், எனச்சொல்லி
நிறுத்தி அருளினார் ரமணமுனி!

Advertisements

2 thoughts on “அணிலும் எலியும் – பகவான் ரமண மகரிஷி

 1. Arvind December 11, 2012 at 7:39 AM Reply

  இதைப் பற்றி தேவராஜ முதலியாரின் நாட் குறிப்பில் படித்திருக்கிறேன். இந்தக் கவிதை மிகச் சிறப்பாக இருக்கிறது. குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு மிக எளிமையாகவும் கூட.

  • BaalHanuman December 11, 2012 at 11:57 PM Reply

   அரவிந்த் சார்,

   “அணிலும் எலியும்” என்ற இந்தக் கவிதையை எழுதியவர் கவிமாமணி இளையவன். இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார். ( இந்தக் கவிதையை “சந்த வசந்தம்” என்ற குழுவில் 2009-இல் இட்டவர் திரு.சு.பசுபதி அவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s