சுஜாதா பற்றி சொக்கன்…


கேள்வி 1:  சுஜாதா என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது ?     (சுஜாதா பாணியில் ஒரு வார்த்தை / ஒரு வரி பதில் சொல்ல முடியுமா ? )

சொக்கன்:   சுவாரஸ்யம். எடுத்தால் கீழே வைக்கமுடியாத புத்தகங்களைதான் அவர் கடைசிவரை எழுதிக்கொண்டிருந்தார்,   அவருடைய படைப்புகளில் யாருக்கு எந்த விமர்சனங்கள் இருந்தாலும், ஒரு (இரண்டு?) தலைமுறையையே வாசிக்கவைத்தவர்  என்பதை மறுப்பதற்கில்லை.   என் தலைமுறைக்கு, கிரிக்கெட்டில் டெண்டுல்கர்,  இசையில் இளையராஜாபோல், புத்தகம் என்றால் சுஜாதா! அவரைப்போல் எழுதியவர்கள் தவிர, அவர் இல்லாவிட்டால் எழுத வந்திருக்கமாட்டார்கள் என்றே ஒரு தனிக் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருவன்.

கேள்வி 2:   சுஜாதாவின் படைப்புகளில் உங்களை பாதித்த படைப்பு எது ?

 நிலா நிழல் வாய்மையே சில சமயம் வெல்லும்

சொக்கன்:   நிலா நிழல், வாய்மையே சிலசமயம் வெல்லும்.

Desikan Narayanan

கேள்வி 3: மற்றவர்களிடம் இருந்து சுஜாதா வேறுபடுவது எப்படி ?

சொக்கன்:   வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருந்தவர், அதைப் பகிர்ந்துகொண்டே இருந்தவர். அவருடைய எழுத்துகளாலேயே அவருக்கு ஓர் ஆட்டோபயக்ரஃபி எழுதிவிடமுடியும், தேசிகன் போன்றோர் முயற்சி செய்யலாம்.

கேள்வி 4:    சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைத்துறை இதில் உங்களுக்கு பிடித்த சுஜாதா யார் ?

சொக்கன்:   நீங்கள் கேட்டிருக்கும் அதே வரிசையில் எனக்கு அவரைப் பிடிக்கும்.

கேள்வி 5:    சுஜாதாவிடம் கேட்க விரும்பிய ஒரு கேள்வி ?

அ. நீங்கள் எழுதுவது ஒரு பாணி, நீங்கள் சிபாரிசு செய்வதெல்லாம் இன்னொரு பாணி, இந்த முரணை எப்படி இத்தனை வருடம் சமாளித்து, ஜெயித்துக்கொண்டும் இருந்தீர்கள்?


ஆ. இன்னொரு சுஜாதா எங்களுக்கு நிச்சயம் கிடைக்கப்போவதில்லை, எல்லாவற்றுக்கும் நன்றி!

–நன்றி தமிழோவியம்

பா.ராகவனின் நிரந்தர விருப்பத்துக்குரிய நூல்களின் பட்டியலில்’நிலா நிழலும்’ இடம் பெற்றிருக்கிறது.

http://www.writerpara.com/paper/?p=385

சுஜாதா கூறுகிறார்… (கற்றதும் பெற்றதும் – பாகம் II )

நிலா நிழல்’ தொடர் கதையாக வந்தபோது, ஓர் அத்தியாயம் இல்லாமலே வந்திருக்கிறது. புத்தகமாக வந்தபோதும் முதல் பதிப்பில் யாரும் கவனிக்கவில்லை (நான் உள்பட). மனுஷ்யபுத்திரன் புதிய பதிப்புப் போடும்போது சுட்டிக் காட்டினார். விட்டுப் போன அத்தியாயத்தை மறுபடி மனதில் கொண்டுவந்து எழுதிக் கொடுத்தேன். உலகிலேயே ஓர் அத்தியாயம் மட்டும் பத்து வருஷம் கழித்து எழுதப்பட்ட முதல் தொடர்கதை என்பதற்கு கின்னஸில் ஏதாவது இடமிருக்கிறதா தெரியவில்லை.

தொடர்புடைய பதிவு:

சுஜாதாவின் ‘நிலா நிழல்’

வாய்மையே சில சமயம் வெல்லும் – சுஜாதா

 நிலா நிழல்

குடும்பம், கிரிக்கெட்,கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் முகுந்தனைக் கொண்டு செலுத்தும் ஆதார உணர்ச்சி எது? சுஜாதாவின் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான நிலா நிழல், குழந்தைப் பருவத்தை இழந்து இளமையை அடையும் காலத்தின் வேட்கையையும் கனவையும் கவித்துவத்துடன் வரைந்து செல்கிறது.

 வாய்மையே சில சமயம் வெல்லும்

வாய்மையே சில சமயம் வெல்லும்’ முதலில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்த போது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இந்த எதிர்ப்புகள் வலுவிழந்துவிட்ட நிலையில் கதையின் அடிப்படையில் உள்ள மனித நேயமும் சமூக யதார்த்தங்களும் மாறவில்லை.

10 thoughts on “சுஜாதா பற்றி சொக்கன்…

 1. என். சொக்கன் December 7, 2012 at 6:42 PM Reply

  அட! எங்கிருந்து கண்டுபிடித்தீர்கள் ஐயா இதை? தமிழ் இணைய ஜேம்ஸ் பாண்ட் பட்டத்தை உங்களுக்குத் தந்துவிடலாம்போல! :)))

  நன்றி!

 2. BaalHanuman December 7, 2012 at 6:52 PM Reply

  நன்றி சொக்கன் சார்… தன்யனானேன் 🙂

  இந்தப் பதிவில் ஒரு சிறப்பிருக்கிறது கவனித்தீர்களா ? என் அபிமான எழுத்தாளர்கள் பலரை ஒன்றிணைக்கும் பதிவு இது…

  சுஜாதா, பாரா, சொக்கன் மற்றும் சுஜாதா தேசிகன் 🙂

 3. vidya (@kalkirasikai) December 7, 2012 at 7:22 PM Reply

  அவர் இல்லாவிட்டால் எழுத வந்திருக்கமாட்டார்கள் என்றே ஒரு தனிக் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருவன். திரு சொக்கன் இந்த வகை.

  அவர் இல்லாவிட்டால் எழுத வந்திருப்பார்கள் என்றே ஒரு தனிக்கூட்டம் உண்டு. ஆம், சுவாரஸ்யமாக எழுதுவது எப்படி என்பது பற்றிய அவரது நட்பான அறிவுரைகளாலும், அவரைப் பார்த்ததால் ஏற்பட்ட பிரமிப்பாலும் நமக்கு இதெல்லாம் வராது என்று ஆர்வக் கோளாறை அடக்கிக் கொண்டு எழுத்தாளர்களாகாமல் ஒதுங்கிய கூட்டம் ! (நான் இந்த வகை. ஹிஹி.) இரண்டு வகையிலும் தமிழ் காப்பாற்றப்பட்டது.

 4. vidya (@kalkirasikai) December 7, 2012 at 7:25 PM Reply

  நிலா நிழல் படித்து கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்து போன குழந்தைப் பருவத்தை எண்ணி மனம் கனத்தது. ஒவ்வொரு வாசகருக்கும் அது ஒரு கண்ணாடி மாதிரி.

  • BaalHanuman December 8, 2012 at 6:50 AM Reply

   உண்மைதான் வித்யா நீங்கள் கூறுவது…

 5. rathnavel natarajan December 8, 2012 at 1:22 AM Reply

  அருமையான பதிவு.
  நன்றி.

  • BaalHanuman December 8, 2012 at 6:51 AM Reply

   உங்கள் வருகைக்கு நன்றி ரத்னவேல் சார்…

 6. GiRa ஜிரா December 8, 2012 at 6:37 AM Reply

  அருமை.

  நாகாவோடு எந்தத் தலைப்பிலும் பேசலாம். அவருக்குப் பிடித்த சுஜாதா பற்றிப் பேசினால் இப்படித்தான் சுவாரசியங்களைக் கொட்டுவார்.

  தேசிகன் இப்போது எழுதுகிறாரா? முன்பு வலைப்பூக்கள் பிரபலமாக இருந்த போது பெங்களூரில் அவரோடு தொடர்பு இருந்தது. இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரோடு தொடர்பே இல்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s