சர்வக்ஞன்!


ஒருவர் ஒரு மூட்டை கருணைக் கிழங்கை மடத்துக்குக் கொடுத்தார். அதை எடுத்து மசியல் செய்தாயிற்று. சாப்பிட வந்தவர்கள் சிறிது வாயில் போட்டதுமே இலையில் அப்படியே ஒரு பக்கம் ஒதுக்கி விட்டனர். நாக்கில் அரிப்பு தாங்க முடியவில்லையே.. எப்படி சாப்பிடுவார்கள் ? இது பெரியவாளுக்குத் தெரிய வந்தது.


சமைத்தவர் கையைப் பிசைந்து கொண்டு, “எனக்குத் தெரிந்த வரையில் கழு நீரில் அலம்பி, புளிவிட்டுக் கொதிக்க வெச்சுத் தான் பண்ணினேன். அதுக்கெல்லாம் மசியவில்லையே – அதான் மசியல் வீணாகி விட்டது!” என்றார்.

பெரியவா சொன்னார், ‘கருணைக் கிழங்கு வேகறச்சே அதோடு கொஞ்சம் வாழைத் தண்டை வெட்டிப் போடு. அரிக்காது!” என்றார். அதன்படியே மறுநாள் செய்யப்பட்ட கருணைக் கிழங்கு எல்லோரும் விரும்பிச் சாப்பிடும்படி அமைந்தது.

பெரியவா வேத வேதாந்தம், பாஷ்யம் முதலியன தெரிந்து சொல்வது போலவே, எளிய சமையல் கலையும் தெரிந்து வைத்திருக்கும் சர்வக்ஞன் என்பதற்கு இது ஒரு சான்று.

–“கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனிவர்”(விகடன் பிரசுரம்) – எஸ்.கணேச சர்மா

பிடி கருணைக் கிழங்கை வைத்து மசியல் செய்வது எப்படி ?

Desikan Narayanan
சுஜாதா தேசிகன் தனது அம்மாவின் ரெசிபியை இங்கே நம்முடன் பகிர்கிறார்…

போனஸாக உங்களுக்கு ‘Life of Pi‘ விமர்சனம் மற்றும் எஸ்.ராஜம் பற்றிய ஆவணப் படம் டிவிடி விவரங்கள்…

( நன்றி: கூடு )

கருணைக் கடல் காஞ்சி முனிவர் வாழ்ந்த காலத்திலேயே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து உள்ளம் சிலிர்ப்பவர் பலர்.

அந்த மகானை தரிசித்தவர்களும் அவருடைய அருளுரைகளைக் கேட்டவர்களும் தங்களை புண்ணியம் செய்தவர்களாகவே இன்று வரை கருதி வருகிறார்கள்.

பரமாச்சாரியாருடன் ஏற்பட்ட அனுபவங்களை விவரிக்கும்போது யாருமே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி நெக்குருகிப் போவதுண்டு.

நூலாசிரியர் எஸ்.கணேச சர்மா, காஞ்சிப் பெரியவரின் நெருக்கத்தில் இருந்தவர். அவரின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர். அவர் புகழைப் பேசவும் கேட்கவும் பாடவும் சந்தர்ப்பங்கள் பலவும் தனக்குக் கிடைத்திருப்பதை புண்ணிய பலனாக எண்ணி வருபவர்.

காஞ்சி மகானின் புண்ணிய சரிதத்தை ஏழு காண்டங்களாக அமைத்து கணேச சர்மா செய்த உபன்யாசங்களின் தொகுப்பே இந்த நூல்.

பக்தர்களுக்கு காஞ்சி முனிவருடன் ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களை சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்த அவதார புருஷர் அருள்பாலித்த பல சம்பவங்களை கோவையாக எடுத்துரைக்கிறார்.

நூலைப் படிக்கும்போது அந்த மகானை நேரில் தரிசிப்பது போன்ற உணர்வும், அன்னாரின் அருளுரைகளைக் கேட்டு மகிழ்வது போன்ற அனுபவமும் ஏற்படும்.


இந்த நூலைப் படித்து, அந்த கருணை தெய்வத்தின் அருள் கடாட்சத்தைப் பெற பிரார்த்திப்போம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s