10-எழுத்து-படிப்பு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

 ஆ..!

ஆர்.தியாகராஜன்.
? மறு பிறப்பில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா ? ‘மெனி லைவ்ஸ் மெனி மாஸ்டர்ஸ்’ புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ?

! படித்திருக்கிறேன். ‘‘ என்று ஒரு கதை எழுத அது வசதியாக இருந்தது. மற்றபடி மறு பிறவி இருந்தாலும் ஞாபகத் தொடர்ச்சி இல்லையென்றால் அது மறுபிறவியே அல்ல என்பது என் வாதம்.

செந்தில் முருகன்.
? ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ அனுபவங்களைச் சொல்லுங்களேன். மணிரத்னத்துடன் இணைந்து பணிபுரிவது எப்படி ?

! முழுவதும் அற்புதமான அனுபவம். அதில் இரண்டு ‘சீன்’களை சிறுகதையாகவே எழுதச் சொன்னார். செல்வி, சிவரமணியின் புதுக் கவிதை வரிகளைப் பயன்படுத்த அனுமதித்தார்.

முத்துகுமார்.

? பல எழுத்தாளர்கள் குடிக்கிறார்கள். அதை மறைப்பதும் இல்லை. இது பற்றி உங்கள் கருத்து என்ன ?

! குடித்தால்தான் எழுத வரும் என்று சொல்லாத வரை சரி.

சந்திரசேகரன் ஆர்.பிள்ளை, கிளீவ்லேன்ட்.
? நீங்கள் பேச்சுத் தமிழில் எழுதுவதன் மூலம், தமிழ் மொழி இலக்கணம் பாதிப்படைய காரணமாய் இருக்கிறீர்கள் அல்லவா ?

! இலக்கணம் முதலில் வராது. இலக்கியத்தை விவரிப்பதுதான் இலக்கணம். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் தமிழின் பேச்சு மொழியில் டாக்டரேட் பண்ணுகிறார்கள்.

சீனிவாசன்.
? வெறும் ஒரு தமிழ் எழுத்தாளராய் இருந்து பிழைக்க இயலுமா ?

! முடியும் சிலரால்.

கணேஷ்.
? ஜோதிகாவின் தொப்பையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

! கிண்டல் வேண்டாம். சீக்கிரமே அதற்கு ஒரு கோயில் வரலாம்.

ச.ராஜாராமன்.
? சமீபத்தில் தமிழகம் வந்திருந்தேன். நண்பர் ஒருவர் ‘வா மலையேறிட்டு வரலாம்’ என்றார். எனக்குப் புரியவில்லை. ‘மலையேறுவது’ என்றால் மது குடிப்பதாம். எங்கே போகிறது தமிழ் ?

! நல்ல வேளை. அவர் உங்களை ‘சால்னா சாப்பிடலாம் வா’ என்றழைக்கவில்லை. அது சரி, ‘ஹீட்டர் போடுவது’ என்றால் என்ன தெரியுமா ?

கேள்வி பதில் தொடரும்…

Advertisements

7 thoughts on “10-எழுத்து-படிப்பு – சுஜாதா

  1. venkat December 5, 2012 at 12:31 AM Reply

    ஹீட்டர் போடுவது… ? தலைவர் இப்படித்தான்… :)))

  2. R. Jagannathan December 5, 2012 at 9:04 AM Reply

    //
    ? ஜோதிகாவின் தொப்பையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

    ! கிண்டல் வேண்டாம். சீக்கிரமே அதற்கு ஒரு கோயில் வரலாம் //

    Enna oru kindal!

    //‘ஆ‘ என்று ஒரு கதை எழுத..// It’s a series of stories, all ending with ‘Ah’, right?

    -R. J.

    • BaalHanuman December 5, 2012 at 4:01 PM Reply

      ‘ஆ..!’ 1992-ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது அவனுக்குக் கட்டளையிடுகிறது. வசப்படுத்த முயற்சிக்கிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. இதைத் தொடர்ந்து ஸ்பிலிட் பர்சனாலிடி, முற்பிறவி, ஆவி என அலைக்கழிக்கப்பட்டு, கொலை, கைது, கோர்ட் விசாரணை என்கிற சமயத்தில் கதைக்குள் கணேஷ், வஸந்த் நுழைகிறார்கள்.

  3. Suresh December 6, 2012 at 9:04 PM Reply

    Hello BaalHanuman, ஹீட்டர் போடுவது… ? endral enna?

    • BaalHanuman December 6, 2012 at 10:04 PM Reply

      தெரியவில்லையே 😦
      சுஜாதாவைத் தான் கேட்க வேண்டும் 🙂

  4. rathnavel natarajan December 9, 2012 at 1:23 AM Reply

    அருமை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s