9-எழுத்து-படிப்பு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

அன்பு.
? உங்கள் கதைகளில் பாத்திரங்கள் பேசுவது இயல்பாக இருப்பதற்கு என்ன காரணம் ?

! மக்களின் பேச்சு முறைகளை நீங்களும் சீரியஸாகக் கவனித்திருக்கிறீர்கள், உள் வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான்.

சுரேஷ்குமார்.
? உங்கள் கதைகள் எப்படி சிருஷ்டிக்கப்படுகின்றன ? உங்கள் அனுபவங்களினாலா ?

! அனுபவங்களுடன் கற்பனை கலந்து.

விமல்.
? சமீபத்தில் மிகவும் ரசித்துப் படித்த புத்தகம் எது ?

! Best American Essays 2001 என்கிற கட்டுரைத் தொகுதி. இம்மாதிரி ஒரு புத்தகத்தை யாரும் தமிழில் தொகுக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது.

இரும்பு குதிரைகள்

சுதா.
? தன் சுயசரிதைப் புத்தகத்தில்( Itharkuthaane Aasaipattai Balakumaraa ) பாலகுமாரன், நீங்கள்தான் எழுத்துக்கு குரு என்றும், சிறுகதை எழுதுவது குறித்து நீங்கள்தான் வழிகாட்டினீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா ? அவரது படைப்புகளில் உங்களுக்குப் பிடித்தது எது ?

! பாலகுமாரனுக்கு சொன்னதையே பலருக்கு சொல்லியிருக்கிறேன். அவர்களில் பாலகுமாரன் தான் சிறந்து வந்தார். ஆதாரமான எழுத்துத் திறமை இல்லையெனில் எந்த குருவும் சரிப்படாது. அவர் எழுத்தில் எனக்குப் பிடித்தது ‘இரும்புக் குதிரைகள்

சுதா.
? சார், சென்ற மாதம் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பது எப்படி என்று கேட்டதற்கு முதலில் டிக் ஷனரி வாங்குங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். வாங்கி விட்டேன். அடுத்து எங்கிருந்து தொடங்குவது ?

! எடுத்து அதில் Serendipity என்பதற்கு அர்த்தம் பாருங்கள்.

தியாகு, திருச்சி.
? சுஜாதா வீட்டு லாண்டரி கணக்கைக் கூட பிரசுரிப்பார்கள். ஆனால் எங்கள் படைப்புகளைப் பிரசுரிக்க மாட்டார்கள் என்று இளம் எழுத்தாளர்கள் கூறுகிறார்களே ?

! இது ரொம்ப ரொம்ப பழைய (1978) குற்றச்சாட்டு.

கல்யாண்.
? உங்கள் எழுத்துகளை 1973-லிருந்து விடாமல் படித்து வருகிறேன். என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

! உங்களை 73-லிருந்து தொடர்ந்து படிக்க வைத்த என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்களோ அதேதான்.

கேள்வி பதில் தொடரும்…

Advertisements

3 thoughts on “9-எழுத்து-படிப்பு – சுஜாதா

 1. venkat December 4, 2012 at 2:33 AM Reply

  அனைத்து பதில்களும் அருமை. கடைசி பதில் க்ளாசிக்… 🙂

 2. ரெங்கசுப்ரமணி December 4, 2012 at 6:01 AM Reply

  //எடுத்து அதில் Serendipity என்பதற்கு அர்த்தம் பாருங்கள்.// புரியவில்லையே. ஆங்கில அறிவு கொஞ்சம் கம்மி, யாராவது விளக்குங்கள் ப்ளீஸ்

  • BaalHanuman December 4, 2012 at 7:07 PM Reply

   Serendipity means a “happy accident” or “pleasant surprise”; specifically, the accident of finding something good or useful while not specifically searching for it. The word has been voted one of the ten English words hardest to translate in June 2004 by a British translation company. However, due to its sociological use, the word has been exported into many other languages.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s