4-எழுத்து-படிப்பு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

? எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா?

! நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும். எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது. எதைப்பற்றித் தெளிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.

? உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?

! ஆமாம், நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.

? நீங்கள் கற்ற பாடங்கள் ?

! நான் எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைக்கும். எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் நாற்பத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.

? உங்கள் எழுத்து மற்றும் எழுதும் சூழ்நிலை பற்றி…

! எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

? எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள எதாவது எளிய முறைகள் ?

! எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும். எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? – இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

கேள்வி பதில் தொடரும்…

Advertisements

3 thoughts on “4-எழுத்து-படிப்பு – சுஜாதா

 1. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை…

  நன்றி…

  • BaalHanuman November 29, 2012 at 6:06 PM Reply

   நன்றி தனபாலன் உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு…

 2. கிரி November 30, 2012 at 4:44 AM Reply

  “திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. ”

  நீளமாக எழுதியவற்றை திரும்ப படிக்கும் போது சுருக்கி விடுவேன். என்னுடைய கட்டுரைகள் கொஞ்சம்! பெரிதாக தான் இருக்கும் அது வேறு விஷயம்.

  “நீங்கள் கற்ற பாடங்கள் ?
  ! நான் எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைக்கும். எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் நாற்பத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்”

  100 சதவீதம் உண்மை. சில கட்டுரைகளை முன்பே (மூன்று நான்கு நாட்கள்) எழுதி விட்டு தாமதமாக வெளியிடுவேன். இடைப்பட்ட நாளில் அதை சரி பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் ஏதாவது மாற்றி அமைத்துக்கொண்டே இருப்பேன். முன்பு எழுதியது தவறாக தோன்றும்..சில நேரங்களில் எழுதியதை விட பெட்டராக ஏதாவது தோன்றும்.. மூன்று நாட்களிலேயே ஏகப்பட்ட திருத்தங்கள் செய்வேன். ஒரு கட்டத்தில் எனக்கே சலிப்பாகி வெளியிட்டு விடுவேன். ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டு இருக்கவே மனது கூறும். இதற்கு ஒரு முடிவே இல்லை.

  சுஜாதா ஒரு முறை கூறி இருந்தார் “நாம் முன்பு எழுதிய எழுத்துக்களில் உடன்பாடில்லாமல் அல்லது அப்போது சரி என்று நினைத்து எழுதி தற்போது தவறு என்று தோன்றினால் நாம் அனுபவம் பெற்றுக்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம் என்று கூறினார். மிகச் சரியான ஒன்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s