3-எழுத்து-படிப்பு – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

அசோக்குமார்.
? ஸ்பீட் ரீடிங் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?

! 1. தலையை இடம் வலமாக அசைக்காமல் வார்த்தை வார்த்தையாக மனசுக்குள் படிக்க வேண்டும்.

2. நாவல்களில் பாராக்களின் முதல் வரிகளையும், உரையாடல்களையும் மட்டும் படித்தால் கதை புரிந்து விடும்.

3. தெரிந்த விஷயத்தை விளக்கும் வரிகளை, முன்னுரை, நன்றியுரை எல்லாவற்றையும் தாவிவிட வேண்டும்.

வெங்கடேஸ்வரன்.
? எப்படி உங்களால் நேரம் காண முடிகிறது ? அதே இளமை வேகத்துடன் இருக்கிறீர்களே…?

! நேரம் காண்பது அனாவசியங்களைத் தவிர்ப்பதால். இளமை லோரியால் ( l’oreal ) உபயம்.

விவேக்.
? எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?

! முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.

கே.அரவிந்த்.
? நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்கள் பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?

! 1962-லிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதி கூட இல்லையேல் வெட்கம்.

Front Cover

ராம்.
? மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க யோகாவைத் தவிரவும் வேறு வழிகள் உள்ளன என்று பதிலளித்திருக்கிறீர்கள். அவைகளைச் சொல்லி எனக்கு உதவ இயலுமா?

! ஒரு வழி – நல்ல புத்தகங்கள் படிப்பது. பால் டேவிஸின் Superforce படித்துப் பாருங்கள்.

சுரேஷ்.
? தங்களின் எழுத்துலக வாரிசு…?

! எழுத்து என்பது என் பரம்பரைச் சொத்தல்ல. இதற்கெல்லாம் வாரிசுகளை நான் நியமிக்க முடியாது.

கல்யாண்.
? எழுத்தில் உள்ள உங்களது நகைச்சுவை உணர்வு நிஜ வாழ்க்கையில் குறைவாமே, அப்படியா ?

! நிஜ வாழ்வில் நகைச்சுவையாக இருப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணம் உங்கள் மேலதிகாரியைக் கேலி செய்ய முடியுமா ?

சபீர்.
? சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது எப்படி ?

! என் முறை இது. எடுத்த காரியத்தை ஒத்திப் போட மாட்டேன். இன்று இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு சிறு பட்டியல் எழுதி வைத்து, மறு தினம் அதில் செய்து முடித்தவைகளை அடித்து விடுவேன்.

கேள்வி பதில் தொடரும்…

4 thoughts on “3-எழுத்து-படிப்பு – சுஜாதா

 1. venkat November 28, 2012 at 1:19 AM Reply

  சிறப்பான கேள்வி – பதில்கள். தொடரட்டும்….

  • BaalHanuman November 29, 2012 at 6:07 PM Reply

   நன்றி வெங்கட்.. உங்கள் விருப்பப்படி கேள்வி பதில்கள் தொடரும்…

 2. கலக்கல் பதில்கள்…

  நன்றி…

 3. கிரி November 30, 2012 at 4:36 AM Reply

  படிக்க சுவாரசியம். சுஜாதா எழுத்து சுவாரசியமாக இருக்கும். அதே கேள்வி பதில் என்றால் இன்னும் அருமை தான்.

  இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இவர் கூறும் பல விசயங்களை நான் செய்து வருகிறேன்.

  “தெரிந்த விஷயத்தை விளக்கும் வரிகளை, முன்னுரை, நன்றியுரை எல்லாவற்றையும் தாவிவிட வேண்டும்.”

  “எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?
  ! முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.”

  இதை தான் நானும் பின்பற்றுவேன். ஒரு கட்டுரை எழுத உட்கார்ந்தால் சரசரன்னு எழுதிடுவேன். தவறு இருந்தாலும் சரி செய்ய மாட்டேன். பிறகு draft பண்ணும் போது பொறுமையாக சரி செய்து விடுவேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s