1-எழுத்து-படிப்பு – சுஜாதா


https://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

(விகடன் – கழுகார் பதில்)

? புத்தகம் படிக்கும் பழக்கத்தை எப்படிக் கொண்டுவர வேண்டும்?

! படிக்கும் பழக்கம் முதலில் சலிப்பைத் தரும்.  அதற்காக எழுத்தாளர் சுஜாதா வழியைக் கண்டுபிடித்துச் சொன்னார்.

அவர் ஒரே நேரத்தில் நான்கைந்து புத்தகங்களைப் படிக்க வைத்திருப்பார். வரவேற்பரையில் ஒன்று… படிப்பறையில் ஒன்று… படுக்கை அறையில் ஒன்று… என.   அப்போதைய மனநிலைக்குத் தகுந்த புத்தகத்தின் சில பக்கங்களை எடுத்துப் படிப்பார். இதைப் பின்பற்றிப் பாருங்கள்!

பஞ்சவர்ணம், போளூர்.
? நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?

! நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.

கீழாம்பூர் எஸ்.ராமையா, புதுவை.
? உங்கள் குடும்பத்தில் உங்களைத் தவிர வேறு எழுத்தாளர்கள் இருக்கிறார்களா ?

! என் இரு மகன்களும் எழுதுகிறார்கள், ஆங்கிலத்தில்.

செந்தில் வேலவன், திண்டிவனம்.
? கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ?

! ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ?

மைதிலி வேணுகோபால், சென்னை.
? சிறுகதை எழுதுவது எளிதா ? நாவல்கள் எழுதுவது எளிதா ?

! 100 மீட்டர் ஓட்டம் எளிதா ? 25 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டம் எளிதா ?

ஜே.மோசஸ், சிதறால்.
? இளம் எழுத்தாளர்களிடம் உள்ள பலம் – பலவீனம் என்ன ?

! பலம் – புதிய புதிய வார்த்தைப் பிரயோகம், நவீன சிந்தனை.
பலவீனம் – மற்ற எழுத்தாளர்களைப் படிக்காமல் எழுதுவது.

கே.அரவிந்த்.
? நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா ? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா? இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே?

! கவனிக்கும்போது இரண்டுமே இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பிறகு எழுத்தாகும்.

வெங்கடாசலம்.
? நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து ஃபீல்டில் இருக்க முடிகிறது ?

! தொடர்ந்து படிப்பதால்.

ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி.
? ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?

! கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.

மு.வணங்காமுடி, சென்னை.
? எழுத்தாளர்களுக்கு இப்போது எது தேவை ?

! தன்மானத்தை இழக்காமல் கிடைக்கும் சன்மானம்.

ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
? ஓர் எழுத்தாளன் எப்போது உயர்வான் ?

! தன் எழுத்தின் குறைகளை அறியும்போது.

டி.சுப்பிரமணியன், மேலையூர்.
? இலக்கியத் துறையில் உங்கள் இமாலய இலக்கு எது ?

! கடைசி வரை எழுதிக்கொண்டிருப்பது.

சுமதி ராஜேந்திரன், அரக்கோணம்.
? சாப்பிடும்போது புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா ?

! இல்லை. மற்ற எல்லா சமயங்களிலும் படிப்பேன்.

கேள்வி பதில் தொடரும்…

Advertisements

5 thoughts on “1-எழுத்து-படிப்பு – சுஜாதா

 1. Mohan Kumar November 23, 2012 at 2:05 AM Reply

  ஒரே இதழில் இத்தனை கேள்விகளுக்கு பதில் சொன்னாரா? வெவ்வேறு இதழிலா ? நிறையவே கொஞ்சம் சீரியஸ் பதிலா இருக்கு இல்ல?

  • BaalHanuman November 23, 2012 at 2:14 AM Reply

   அன்புள்ள மோகன் குமார்,

   நீங்கள் கூறுவது உண்மைதான். கொஞ்சம் சீரியசான பதில்கள்தான்.


   சுஜாதா அம்பலம் இணைய இதழுக்குப் பொறுப்பேற்றபோது, அப்போது அதில் அவருடன் பணிபுரிந்த திருப்பூர் கிருஷ்ணன், சந்திரன், ரஞ்சன் இவர்களுடன் சேர்ந்து அளித்த பதில்கள் இவை.

   சுஜாதா பதில்கள் என்று மூன்று தொகுதிகளாக உயிர்மை வெளியிட்டுள்ளது.

 2. நல்ல பதில்கள்…

  தொகுப்பிற்கு நன்றி…

 3. BaalHanuman November 23, 2012 at 2:21 AM Reply

  நன்றி தனபாலன். கேள்வி பதில்கள் தொடரும் 🙂

 4. R. Jagannathan November 23, 2012 at 11:27 AM Reply

  100 மீ / மாரதான் – எது எளிது என்று கேட்டு சிந்திக்க வைத்துவிட்டார்! இரண்டுக்கும் தேவை வெவ்வேறு தகுதிகள் இல்லையா?

  கடைசிவரை எழுதிக்கொண்டு இருந்து தன் இமாலய இலக்கை எட்டிவிட்டார் சுஜாதா.

  அவர் ‘கண்டதையும்’ எழுதினார், கற்பனையில் ’கண்டதை’யும் சேர்த்து எழுதினார்!

  இவ்வளவு காலம் ஃபீல்டில் இருந்தது அவர் தொடர்ந்து படித்ததாலும், வாசகர்கள் அவரைத் தொடர்ந்து படித்ததாலும்!

  தொகுப்புக்கு நன்றி! – ஜெ.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s