பெரியவாளை தரிசனம் செய்த முஸ்லிம் தையற்காரர்…


Sri Sri Sri Maha Periyava

ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை எதோ ஒரு பத்திரிகையில் பார்த்தாராம். அதுமுதல், சகலமும் பெரியவாள் தான் அவருக்கு.

அவரோ திருச்சியில் இருந்தார்; பெரியவாளோ ஊர் சுற்றிகொண்டிருந்தார். எங்கே சந்திப்பது? அத்துடன், ஸ்ரீமடம் சிப்பந்திகள் பெரியவாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிப்பார்களோ மாட்டார்களோ?

தையற்காரருக்கு அதிர்ஷ்டம்! பெரியவாள் திருச்சி மலைகோட்டையில் முகாம்!

“நான் டெய்லர். சட்டை, கோட்டு எல்லாம் நல்லா தைப்பேன். சாமிக்கு சட்டை- கோட்டு தெச்சு கொடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைபட்டுகிட்டு இருக்கேன். சாமி அளவு கொடுத்தால் – பழைய சட்டை கூட போதும் – நாளைக்கே புது சட்டை கொண்டாந்திடுவேன். கோட்டு தைக்க, ரெண்டு மூணு நாள் ஆகும்…”பெரியவாள், பரிவுடன், அவரையே பார்த்துகொண்டிருந்தார்கள். அவர் ஸ்ரீமடத்துக்கு ஏதாவது செய்ய ஆசைபடுகிறார் என்பது, பக்திபூர்வமான அவர் பேச்சிலேயே தெரிந்தது.

“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போடுகிறதில்லை. தையலே இல்லாத ஒத்தைத் துணி! மடத்து யானை மேலே அலங்காரமாக போடுகிற மாதிரி, பெரிய துப்பட்டா – நெறைய வேலைபாடுகளோட செய்து கொடு…”

டெய்லருக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பெரியவாள் அவரை மதித்து, பொருட்படுத்தி, அவர் கோரிக்கையை (கொஞ்சம் மாறுதலுடன்) ஏற்று கொண்டு விட்டார்கள் என்பதை உணர்ந்து புளகாங்கிதம் அடைந்தார்.

நான்கு நாட்கள் கழித்து ஸ்ரீமடத்து யானையின் அளவுக்கேற்ப – இரண்டு பக்கங்களிலும் நன்றாக தொங்கும்படி – வண்ண வண்ண வேலைபாடுகளுடன் ஒரு துப்பட்டா கொண்டு வந்து சமர்ப்பித்தார். அதை பிரித்து காட்ட சொல்லி, நுணுக்கமாக பார்த்துவிட்டு, கையை தூக்கி ஆசிர்வதித்தார்கள்.

“பட்டையன் (யானை பாகன்) கிட்டே கொடுத்து இன்னிக்கே போட சொல்லு…”

பெரியவா சரணம் – கண்ணன்….

2 thoughts on “பெரியவாளை தரிசனம் செய்த முஸ்லிம் தையற்காரர்…

  1. R. Jagannathan November 21, 2012 at 4:39 PM Reply

    Maha PeriyavaaL is revered so only for such kindness. As the religious head, he had to follow some restrictions but never treated other religions or followers of other religions with hate or contempt. He was for the mankind. – R. J.

  2. rathnavelnatarajan September 27, 2013 at 1:35 AM Reply

    அருமை..
    நெகிழ வைக்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s