அபார்ட்மென்ட் எண் : ஈ505 – சுஜாதா தேசிகன்


Desikan Narayanan

FM க்ருஷ் பெங்களூரில் வீடு வாங்கவில்லை என்றால் இந்தக் கதைக்குக் கூட தகுதியற்றவராக இருந்திருப்பார்.

சென்னை அண்ணாசாலை நடுராத்திரி கியூவில் நின்று, விசா கிடைத்தால் திருப்பதிக்கு குடும்பத்தோடு வருகிறேன் என்று வேண்டிக்கொண்டு, திருப்பதி பெருமாள் கருணையால் அமெரிக்கா சென்று முதல் காரியமாக பர்முடாவுக்கு மாறியதோடு அதற்கு ஏற்றாற்போல தம் பெயரையும் சுருக்கி க்ருஷ் என்று மாற்றிக்கொண்ட பல கிருஷ்ணமூர்த்திகளில் ஒருவர். ஃப்ரீமான்ட் பகுதியில் இருக்கிறார். அதனால் FM.

ஃபோனில், யாரு கிச்சாமியா?” என்று கேட்டுப்பாருங்கள்.

ய க்ருஷ்” என்று பதில் வரும்.

தற்போது இணையத்தில் FM க்ருஷ் என்ற பெயரில் அச்சுப்பிச்சு கவிதைகளை எழுதிக்கொண்டு இருப்பவர் இவர்தான். வருடத்துக்கு ஒருமுறை டிசம்பர் சீசனுக்கு இந்தியா வந்து அம்பிகா அப்பளம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு, கரப்பை பார்த்து பயந்து, ரிட்டர்ன் டிக்கெட் வாங்கிக்கொண்டு போகும் க்ருஷை அவருடைய மாமனார் ஸ்கைப்பில் தோன்றி உங்களோடு கொஞ்சம் பேசணும் மாப்ளே” என்றார்.

சொல்லுங்கோ”

அமெரிக்காவில் வேலை எல்லாம் எப்படி இருக்கு?”

இஸ் கோயிங் வெல்.”

போன வார எக்னாமிக் டைம்ஸில், அமெரிக்காவில் இந்த வருஷம் ஐ.டி.யில நிறைய பேர் இந்தியா திரும்ப வந்துட்டதா போட்டிருக்கான்…”

இருக்கலாம்… பட் ஐ டோன்ட் ஹாவ் ஏ பிராப்ளம்.”

அப்படியே இந்தியா வந்தாலும்… உங்களுக்கு பிராப்ளம் இல்லை. பெங்களூரில் இருக்கும் பார்க் எல்லாம் இப்ப டெக் பார்க்காகிவிட்டது.”

ஒ கூல்.”

இந்தியா வந்தால் உங்களுக்கு பெங்களூர்தான் சௌகரியப்படும், அதனால இங்கே ஒரு பிராபர்ட்டி வாங்கிடுங்கோ.”

குட் ஐடியா, பட்டோன்ட் ஹாவ் பிளான்ஸ் டூ இன்வஸ்ட் இன் இந்தியா. ஐயம் வெயிட்டிங் ஃபார் மை கிரீன் கார்ட்.”

உடனே இப்படி பதில் சொல்லாதீங்கோ, கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்கோ.”

அதற்குப் பிறகு, தன் பெண் சுமதியுடன் ஒரு மணி நேரம் சம்பாஷணையின் இடையில், மாப்பிள்ளையை யோசிக்கச் சொல்லு. எழுபது லட்சத்தில அமக்களமா த்ரீ பெட்ரூம் பிளாட். ஸ்விம்மிங் பூல், ஜிம், கிளப் ஹவுஸ்… இன்னும் என்னென்னமோ சொல்றான். டாலர் பேமென்ட்னா இன்னும் கம்மியாம். அவர்ட்ட நீ கொஞ்சம் பேசிப்பார்.”

மாமனார் பேசிய ஒரு மாதத்தில் லேயவுட், பிளான் என்று இமெயில் அனுப்பப்பட்டு பெங்களூர் மூலையில் தும்பரஹல்லி பக்கம் இருபது ஏக்கரில் எட்நூறு வீடுகளில் ஒன்றை பிளாக் செய்வதும் க்ருஷின் அந்த வருட பெங்களூர் வெக்கேஷனும் ஒன்றாக அமைந்தது.

ஜெட் லாக் காரணமாக, நடுராத்திரி டி.வி.யில் சுதா சந்திரன் ஆஞ்சநேயர் டாலர் விற்பதை ஆர்வமாகப் பார்க்கும் போது…

என்ன மாப்ளே தூக்கம் வரலையா? நாளைக்கு பத்து மணிக்கு உங்க வீட்டைப் போய் பார்த்துட்டு வந்துடலாம்.”

இன்னும் கட்டவே இல்லையே…”

மாடல் ஃபிளாட் இருக்கு, உங்க பிளாக் எங்கே எப்படி இருக்குனு பார்த்தா உங்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்…”

காலை சிட்டி டாக்ஸி அவர்களை ஏற்றிக்கொண்டு அவுட்டர் ரிங் ரோடு வழியாக வரத்தூர் செல்லும் சாலையில் தும்பரஹல்லி என்று வலது பக்கம் சின்னதாக போர்டு போட்டிருக்க அதில் போன போது வழியில் இரண்டு பழைய சமாதி; ஒன்றின் மீது நாய் படுத்துக்கொண்டு இருந்தது. அரை கிலோ மீட்டர் உள்ளே சென்ற போது முழுக்க தென்னை மரங்கள் அடர்ந்து இருக்க கோகோநட் குரூவ் ஹாபிடெட்” என்று பெரிதாக எழுதியிருந்தது.

கதவைத் திறந்த செக்யூரிட்டி திரும்பிப் போகும் போது, ‘பத்து ரூபாய் கொடுத்துட்டுப் போங்க’ என்பது மாதிரி ஒரு சலாம் போட, கார் உள்ளே நுழைந்தது. மாடல் அபார்ட்மென்ட் முன்னால், தற்காலிக அலுவலகத்தில் டை கட்டிக்கொண்டு இருந்தவர், வெல்கம் சார்” என்றார்.

ஐ அம் க்ருஷ், ஃபிரம் யூஸ்… மை வைஃப் சுமதி”

வெல்கம் சார்… வெல்கம் மேடம்” என்றது டை.

இரண்டு நியூஸ் பேப்பர் அளவு வரை படத்தில் எங்கே என்ன வரப்போகிறது என்று இருபது நிமிஷத்தில் கட்டி முடித்தார்.

க்ருஷ் பொறுமை இழந்து… கேன் யூ ஷோ வேர் அவர் அப்பார்ட்மென்ட் ஈ505 இஸ் இன் திஸ்?”

வாங்க சார் லெட்ஸ் கோ” என்று டை அழைத்துக் கொண்டு போனார். சில இடங் களில் தென்னை மரங்கள் மார்க் செய்யப்பட்டு இருந்தன.

வை ஹேவ் யூ மார்க் ஆல் தீஸ்?”

சார் இங்கேதான் கிளப் ஹவுஸ் வரப் போகிறது” என்றார்.

கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, இங்கே தான் சார் ஈ-பிளாக்” என்றார். ஒரு நாவல் பழ மரமும், நிறைய தென்னை மரங்களும் இருந்தன.

மாமனார், உங்க பிளாட் ஈஸ்ட் ஃபேசிங், பால்கனி வெஸ்ட் ஃபேசிங். நான் புக் செய்யும் போதே பார்த்துட்டேன். எதிரே பாருங்க கோயில் கூட இருக்கு. ஹால் பால்கனியிலிருந்து கார்த்தாலே எழுந்தா பெருமாளை சேவிக்கலாம்” என்றார்.

நாவல் பழ மரத்தின் கிளையில் தேன்கூடு இருப்பதைப் பார்த்து, நாம உள்ளே போய் பேசலாம்” என்றார் க்ருஷ்.

வாட் ஆர் த நெக்ஸ்ட் ஸ்டெப்ஸ்” என்று க்ருஷ் கேட்க மார்கெட்டிங் ஆசாமி ஒரு பிரிண்ட் செய்த காகிதத்தை எடுத்துக் கொடுக்க அதில் ஸ்டேஜ் படி எப்படி பணம் கட்ட வேண்டும் என்று விளக்க… க்ருஷ் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

எனி டவுட்ஸ்?” என்று கேட்க,

பிராஜெக்ட் எப்ப முடியும்?”

இன்னும் இரண்டு வருஷம்… 2009 எண்ட். நீங்க பொசஷன் எடுத்துக்கலாம்.”

க்ருஷ் அமெரிக்கா சென்ற பிறகு பெங்களூர் ரியல் எஸ்டேட் சரிந்து 2009-ல் முடிக்க வேண்டிய பிராஜெக்ட் 2010 முழுக்க ஆவுது ஆவுது” என்று இழுத்தடித்து கடைசியாக 2010 டிசம்பரில் முடித்தார்கள். இன்னும் பால்கனி பூச்சு வேலை பாக்கியிருந்தது. முழுமையாகக் கட்டி முடிக்காத வீட்டில் சிலர் பிடிவாதமாக பால்கனியில் பனியன் அண்டர்வேர் காயப் போட்டிருந்தார்கள்.

வீட்டை வாடகைக்கு விடலாமா என்று யோசிக்கும் போது, க்ருஷ் வேலை செய்த கம்பெனி நஷ்டத்தில் இயங்க, உங்களுக்கு உள்ள எக்ஸ்பீரியன்ஸுக்கு, உங்களைக் கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க. வீடோ இங்கே இருக்கு, பேசாம வந்துடுங்களேன்,” என்றார் ஸ்கைப் மாமனார். பே ஏரியா தமிழ்ச் சங்கம் இவருக்குப் பாராட்டு விழா நடத்தி, அந்த மாசம் ‘தென்றல்’ பத்திரிகையில் ஒரு பக்கத்துக்கு இவருடைய கவிதை இரண்டையும் பிரசுரித்து க்ருஷ்ஷை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஒரு மாசத்தில் மாமனார், வீட்டு மர வேலைகளை முடித்து, கண்திருஷ்டி விநாயகர் படத்தையும் வாங்கி மாட்டி விட்டார்.

க்ருஷ் பெங்களூருவுக்கு வந்து சேர்ந்த அந்த வாரமே கிரஹப்பிரவேசம் முடிந்து, பக்கத்து பிளாட் கவுடாவுடன் நண்பராகி, அவர் உதவியுடன் மார்த்தஹல்லியில் இருக்கும் கடையில் வீட்டுக்கு வேண்டிய எல்லாம் வாங்கி அடுக்கிவிட்டார்கள்.

ஒரு திங்கட்கிழமை காலை அலுவலகத்துக்குக் கிளம்பும்போது விநோத சத்தம் பால்கனி எதிரில் இருக்கும் கோயிலிலிருந்து வந்தது. பார்த்தபோது, முழுசாக ஒரு சேவலை தலைகீழே பிடித்து அருவாளால் வெட்ட, ரத்தம் பீச்சி வெட்டியவரின் மூஞ்சியில் அடிக்க க்ருஷுக்கு ஒரு நிமிஷம் அடிவயிற்றை ஏதோ செய்தது. கோயிலைச் சுற்றி நிறைய ஆடுகளும் கட்டப்பட்டிருந்தன.

அன்று மாலை அசோஸியேஷனுக்குச் சென்று இதைப் பற்றிப் புகார் கொடுக்க, எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. பேசாம விட்டுடுங்க” என்று அட்வைஸ் கொடுத்தார்கள்.

கவுடா அங்கிள் இது வனகாளி கோயில். முன்னாடி இந்த இடம் காடா இருந்தப்ப அமாவாசை அன்னிக்கு மட்டும் வெட்டுவாங்களாம். விடுங்க.. கொஞ்ச நாள்ல சரியாகிவிடும்… கவுன்சிலர் கிட்ட பேசறேன்” என்றார்.

கார்த்தாலே சுப்ரபாதம் கேட்கும் என்று வாங்கினால் இப்படி ஆகிவிட்டது” என்று மாமனார் வருத்தப்பட்டார்.

ஒரு வாரத்துக்கு அப்பார்ட்மென்ட் கூகிள் குழுமத்தில் இதைப் பற்றி விவாதித்து, அந்த ஞாயிற்றுக்கிழமை அசோஸியேஷன் மீட்டிங்கில் இதைப் பற்றிக் கொஞ்சம் பேசினார்கள். அதிலிருந்த ஒருவர் மிருகவதை அமைப்புக்கு எழுதிப் போட அவர்கள் போலீஸுடன் வந்து கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கும் குடிசை மக்களுடன் பேசினார்கள். அசோஸியேஷன் சார்பில் லெட்டர் ஒன்று எழுதி அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.விடம் கொடுக்க, அங்கே ஏதாவது நியூஸ் கிடைக்குமா என்று நின்றுகொண்டு இருந்த போட்டோகிராபர், போட்டோ எடுத்துவிட்டு என்ன விசேஷம்?” என்று க்ருஷிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள, அடுத்த நாள் ‘பெங்களூர் மிரர்’ மூன்றாம் பக்கம் ‘காட்டுமிராண்டிகள்’ என்ற தலைப்பில் பெட்டிச் செய்தியாக க்ருஷின் போட்டோவுடன் பிரசுரித்திருந்தது.

அதற்கு அடுத்த நாள் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர், நாம எப்படி அவங்களைக் காட்டுமிராண்டிகள்னு சொல்லலாம்? நாமும் கொசு மருந்து அடிக்கிறோம், கோத்ரெஜ் கம்பெனியைக் கூப்பிட்டு கரப்பு மருந்து வைக்கிறோம்… தேனீக்கள் எல்லாம் அருகிய இனம்னு அரசே அறிவிச்சிருக்கற நிலைல காலனில இருக்கற மரங்கள்ல தேன்கூடுகளை அழிக்கறோம். ஏன் அந்த அப்பார்ட்மென்டில் கூட அழித்திருப்பார்கள்” என்று வக்கணையா வாதம் செய்தார். அடுத்த நாள் போலீஸ், அப்பார்ட்மென்டுக்கு வந்து விசாரித்தது. உங்க போட்டோதானே சார் பேப்பர்ல வந்திருந்தது?” என்று க்ருஷை அடையாளம் கண்டுகொண்டார் இன்ஸ்பெக்டர். ஃபிளாட் நோட்டீஸ் போர்ட்டில் யாரும் தேனீக்களை அழிக்கக் கூடாது” என்று அறிவிப்புப் போட சிபாரிசு செய்தார்.

நவராத்திரிக்கு மாமனார் வந்தவுடன் சுமதி, அப்பா இவருக்கு இந்த வீடு துளி கூட பிடிக்கலை. கசாப்புக் கடை முன்னாடி வீடு என்று சொல்லிண்டு இருக்கார். பேசாம வாடகைக்கு வேற இடத்துக்கு போகலாம் என்று சொல்லிண்டு இருக்கார்… ”

சரி…பார்க்கலாம்.”

அடுத்த வாரம் கோயில் களைகட்டியது. ஒரே மேளதாளம் என்று அமர்க்களப்பட்டது.

இன்னிக்கு என்னத்தை வெட்டப் போகிறார்களோ என்று அலுத்துக்கொள்ளும் போதே, விஷயம் தெரியுமா க்ருஷ்?” என்று கவுடா அங்கிள் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தார்.

என்ன?”

நேத்து ராத்திரி திடீர்னு காளிக்குப் பக்கத்துல ‘சஷ்யஹரி விநாயகர்’ தோன்றியிருக்கார். அதனால ஊரே கூடியிருக்கு.”

திருவிழாவுக்கு அந்த ஃபிளாட்டில் இருப்பவர்களுக்கும் அழைப்பு வந்திருந்தது.

புதுப் பிள்ளையாரைப் பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று மொத்த அப்பார்ட்மென்டும் அங்கே குழுமி இருக்க, அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. எல்லோருக்கும் ‘கேசரி பாத்’ விநியோகித்துக் கொண்டு இருந்தார்.

திருவிழா முடிந்து அடுத்த அமாவாசை காலை க்ருஷுக்கு ஒரே ஆச்சர்யம்; கோழி, ஆடுகளுக்குப் பதில் பூசாரி இளநீர் வெட்டிக் கொண்டு இருந்தார். கவுடாவிடம் கேட்டதற்கு ‘சஷ்யஹரி’ என்றால் கன்னடத்தில் வெஜிடேரியன் என்றார்.

அப்பா, விஷயம் தெரியுமா? பால்கனி கோயில்ல ஆடு, கோழி வெட்றதை விட்டுட்டாங்க” என்று சுமதி உடனே போன் செய்தாள்.

அப்படியா?”

பிள்ளையார் வந்த வேளை!”

சஷ்யஹரி பிள்ளையார்னு சொல்லு, கிட்டத்தட்ட எட்டாயிரம் செலவாச்சு.”

என்னப்பா சொல்றீங்க? ஏதாவது வேண்டுதலா?”

முள்ளை முள்ளால தான் எடுப்பது போல, நான் சாமியை சாமியால எடுத்தேன். காவேரி எம்போரியத்துல பிள்ளையார் வாங்கி… ‘சஷ்யஹரி’ விநாயகர்னு நாந்தானே பேர் பொறிச்சேன்” என்றார்.

Desikan Narayanan

–நன்றி சுஜாதா தேசிகன்,  கல்கி

Advertisements

22 thoughts on “அபார்ட்மென்ட் எண் : ஈ505 – சுஜாதா தேசிகன்

 1. vidya (@kalkirasikai) November 19, 2012 at 3:24 AM Reply

  அப்படியே வாத்தியார் ஸ்டைல்

 2. ரெங்கசுப்ரமணி November 19, 2012 at 8:51 AM Reply

  எல்லாம் சரி, 2007ல் ஸ்கைப் அவ்வளவு பிரபலமாக இருந்தா என்ன?

 3. R. Jagannathan November 19, 2012 at 11:03 AM Reply

  People can’t even read Desikan’s stories without thinking of Sujatha! Sure Desikan won’t mind it, rather like the comparison! Indeed the writing style grips us rather than the story itself. – R. J.

 4. paravasudevan November 19, 2012 at 11:12 AM Reply

  ஜெட் லாக் காரணமாக, நடுராத்திரி டி.வி.யில் சுதா சந்திரன் ஆஞ்சநேயர் டாலர் விற்பதை ஆர்வமாகப் பார்க்கும் போது… 🙂 🙂

 5. Rathnavel November 19, 2012 at 12:26 PM Reply

  Wonderful

 6. கிரி November 19, 2012 at 1:29 PM Reply

  //பேசாம வந்துடுங்களேன்,” என்றார் ஸ்கைப் மாமனார்.//

  ஸ்கைப் மாமனார் 🙂 🙂 கதை நல்லா இருக்கு ஆனால், முடிவில் கொஞ்சம் வித்யாசமாக எதிர்பார்த்தேன்.

 7. ஒரு ஹிந்துத்துவனாக இக்கதையின் சமூக உள்ளீட்டையும் வனவாசி சமூக பண்பாட்டு வெறுப்பையும் கடுமையாக எதிர்க்கிறேன். ஆய்ச்சியர் குரவையும் வேட்டுவவரியும் ஒன்றாக ஒலிக்கும் பூமி இது. மாட்டிறைச்சி தின்னும் வெள்ளைக்காரன் தூக்கி எறியும் பணத்துக்கு அவனுக்கு சேவகம் செய்வார்களாம். அந்த பணத்தில் இங்கே வந்து நம் வனவாசி சமூகத்தவர் வாழும் இடங்களில் நிலத்தை வாங்கி அவர்களின் சடங்குகளை அவர்களுடன் உறவுடைய மத நம்பிக்கைகளையே பயன்படுத்தி அழிப்பார்களாம்… என்ன கொடுமை இது. எத்தகைய மனிதாபிமானமற்ற கேவலம் இது. பிள்ளையாரை தன் சின்னத்தில் வைத்து பத்திரிகை நடத்திய கல்கி அதே பிள்ளையாரை இப்படி கேவலமான நியோ-ஐய்யங்கார் தந்திரத்துக்கு பயன்படுத்தும் கதையை பிரசுரிக்க எப்படி துணிந்தது? ஒரு இலக்கியமாக கூட மூன்றாம் தர ஜெஃப்ரி ஆர்ச்சர் கதைக்கு மேலே செல்ல இயலாத ஒரு அவலமான கதை இது.

 8. KK November 20, 2012 at 7:53 AM Reply

  Useless Story

 9. neermoor November 20, 2012 at 7:18 PM Reply

  Nice story, liked it – need more like this

 10. Srirangam Varathachari November 21, 2012 at 2:04 AM Reply

  கதை எழுதுவதற்கு மட்டும் அல்ல, கதை படிப்பதற்கும் ஒரு நுண்மான் நுழைபுலம் அவசியமாகிறது.

  சுஜாதா தேசிகனின் இந்தக் கதை நகர நாகரிகமானது இயற்கைச் சூழலை நேரடியாக அழிப்பதையும், சாதிய மேட்டிமை கிராமியப் பண்பாட்டை மறைமுகமாக அழிப்பதையும் நுணுக்கமாக விவரிக்கிறது. இந்தக் கதையின் மூலம் சட்ட வலைக்குள் சிக்க முடியாத கலாச்சாரக் கற்பழிப்புக்களை சுஜாதா தேசிகன் வாசகரின் பார்வைக்குக் கொண்டு வருகிறார்.

  இந்தக் கதை எவற்றைக் கண்டனம் செய்கிறதோ, அவற்றை ஆதரிப்பதாகப் புரட்டு விமரிசனங்கள் செய்வது கூடக் கலாச்சாரக் கற்பழிப்பில் அடங்கும்.

  தேவை இல்லாமல் கதை ஆசிரியரின் சாதி, கதை ஆசிரியரின் அபிமானத்துக்கு உரியவரின் சாதி, மரபியல்பாக இந்தச் சாதிக்கு வந்துவிடும் மேட்டிமை வாதம், இத்தகைய கதைகளை வெளியிடும் கல்கியின் மறைமுக நோக்கம் என்றெல்லாம் கோர்த்துவிட்டு தனது சாதி வெறியை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை இத்தகைய விமர்சனங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

  கோஷங்களைத் தாண்டிச் செல்ல முடியாத கோஷதாரிகளுக்கும், வேஷங்கள் போட்டு பிரபலம் அடைய விரும்பும் வேஷதாரிகளுக்கும் அடிப்படை நேர்மை கிடையாது.

  அடிப்படை நேர்மை இருப்பவர்கள் மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும் என்று கட்டாயம் செய்யவும் முடியாதுதான். அதனால்தான் கழிப்பறைச் சுவர்களில் பிரபலங்கள் பற்றியும், பக்கத்து வீட்டுப் பெண்கள் பற்றியும் விமர்சனங்கள் படிக்கக் கிடைக்கின்றன.

  இந்த விமர்சனங்களின் மூலம் விமர்சிக்கப்படும் பிரபலங்கள் பெண்கள் பற்றி அறிந்துகொள்வதை விட, விமரிசகனின் தேவைகள் என்ன என்பதை உடனடியாக அறிந்துகொண்டுவிடலாம்.

  கழிவறைகள் அவசியமானவை. கழிவுகளால் கூட பலன்கள் உண்டு. கழிவறை விமர்சனங்கள் நல்ல பொழுதுபோக்கு.

  பொழுதுபோக்கினால் பிரபலம் ஆகிவிடலாம் என்பது கோஷதாரிகளுக்கும் வேஷதாரிகளுக்கும் நன்கு தெரியும். அதனால், பொதுக் கழிவறைகளின் தரைகள் உடற்கழிவுகளாலும், சுவர்கள் மனக்கழிவுகளாலும் நிறைகின்றன.

  இத்தகைய நிறைவைத் தரும் விமரிசனங்களை அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு போன்ற கோஷதாரி-வேஷதாரிகள் தொடர்ந்து தருவார்கள். நம்புங்கள். அவர்கள் நம்பிக்கை தரும் சிந்தனையாளர்கள்.

 11. ஏதோ ஒரு கால இயந்திரம் அந்த பிளாட் காரரை வீட்டோடு அப்படியே தூக்கி ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு சென்று கங்கை ஆற்றங்கரையில் வைத்து விட, அவர் பால்கனியிலிருந்து பார்கிறார், ஒரு அம்மணி ஆயிரம் மது குடங்களுடன், நல்ல பதப்படுத்திய இறைச்சியுடன் ஆற்றை வழிபட்டுக் கொண்டிருக்கிறாள். நம்மவர் ’சரியான காட்டுமிராண்டி பொம்பளையா இருக்கும் போலிருக்கு’ என்ற படி அந்த பெண்ணை பார்த்த பாவம் தீர வால்மீகி ராமாயணம் படிக்கிறார், அயோத்தியா காண்டத்தின் ஸ்லோகங்களை. தம் தருமத்தின் பெயர் தாங்கிகளான சாத்திய வைணவர்களை எண்ணி எங்கேயோ ஸ்ரீ ராமானுசர் சிரிக்கவா அழவா என தெரியாமல் பரிதவிக்கிறார். சுபம். ( 2:52: 87-88)

 12. vidya (@kalkirasikai) November 21, 2012 at 9:35 AM Reply

  இத இப்படியே மெயின்டெய்ன் பண்ணுடா சூனா பானா என்று சொல்லிக் கொண்டு கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பீட்டாங்க!
  கனவான்களே, கதைய கதையா மட்டும் பாத்து படிங்க, பிடிக்கலியா, படிக்காதீங்க.
  பால் ஹனுமான்,
  இணையத்தில் இந்த ஒரு இடம் தான் சண்டை சச்சரவின்றி சுகமாக இளைப்பாறும் இடமாக இருக்கிறது. சாதி சண்டையை இழுந்து வந்து தயவு செய்து அதையும் கெடுத்து விடாதீர்கள். தயவு செய்து இது போன்ற சண்டைக்கோழிகளை இங்கு அனுமதிக்காதீர்கள். தளத்தின் தன்மையே மாறிவிடும். அப்புறம் உங்களுக்கும் சாதி, மத முத்திரைகள், அர்ச்சனைகள் இலவசமாகக் கிடைக்கும். பின்னூட்டப் போரைத் தவிர எதற்கும் நேரமே இருக்காது.

  • BaalHanuman November 23, 2012 at 1:32 AM Reply

   உண்மைதான் வித்யா நீங்கள் கூறுவது 🙂

 13. R. Jagannathan November 21, 2012 at 10:58 AM Reply

  Seems this post has received the maximum comments! There are points of view and counter points of view. The story has one view – you can take it is of the fictitious character or that of the author himself as you see it fit; and you can differ from what is written or implied. We will try to object softly and decently. Though Desikan won’t respond to this exchange of opinions, Baalhanuman may try to get his feed back! – R. J.

  • BaalHanuman November 23, 2012 at 1:35 AM Reply

   அன்புள்ள R.J,

   இந்த சர்ச்சையில் தேவையில்லாமல் சுஜாதா மற்றும் கல்கி பத்திரிகையையும் வம்புக்கு இழுப்பதுதான் மனதிற்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது…

 14. Ranjith November 21, 2012 at 1:33 PM Reply

  Nice story!!! Excellent !!!

 15. K.S.Venkataraghavan November 21, 2012 at 4:31 PM Reply

  சுஜாதா தேசிகனை நான் அதிகமாக படித்ததில்லை..

  முக-நூல்களில் வலம் வந்த இந்த பெயரை கேட்டவுடன் ஆர்வத்துடன் பார்த்ததில் பெரிதாக எனக்கு உடன்பாடில்லாத கருத்தைத் தான் பதித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. திரு அரவிந்தன் நியோ-அய்யங்கார் என்கிற அடையாளம் அவருக்குச் சூட்டியது மிக நன்றாக பொருந்துகிறது..முக்கியமாக “கண் திருஷ்டி பிள்ளையார் படம் மாட்டுவதிலிருந்து” வெளி-நாடு சென்று பணம் சம்பாதித்து அதை இந்த நாட்டில் இருக்கும் நம் ஹிந்து சகோதரர்களை தம் சொந்த கலாச்சார தெய்வ நம்பிக்கைகளை ஏளனம் செய்வது முதல்.

  அஹோபலத்தில் ஜ்வாலா நரசிம்மர் சன்னிதி இன்னும் செஞ்சுகள் தான் நிர்வகிக்கின்றனர் அங்கே நடக்கும் மிருக பலியை எவரும் தடுப்பதில்லை என்பதை இந்த காலத்து நியோ அய்யங்கார்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.. அவர்களுக்கு ஒப்புதல் இல்லை எனின் அந்த இடத்தை விட்டு வேறிடம் சென்றிருக்க வேண்டுமே ஒழிய இந்த தகாத/ஒவ்வாத செயல் செய்திருக்கக் கூடாது. இதை சாடி இருந்தால் சுஜாதா தேசிகனுக்கு ஒரு மாலை சூட்டி இருக்கலாம் அதை செய்யாமல் விட்டது தவறு.

 16. K.S.Venkataraghavan November 22, 2012 at 12:37 AM Reply

  ஒரு சிறிய திருத்தம் அது பாவன நரசிம்மன் சன்னிதி என நினைக்கின்றேன் ஜ்வாலா இல்லை அங்கு தான் மிருக பலி பௌர்ணமி அன்று கொடுக்கப்படுகிறது. அதை எவரும் தடுக்கவோ மாற்றவோ செய்வதில்லை.சிலர் சனிக்கிழமையிலும் அது நடப்பதாகக் கூறுகின்றனர் .. இம்முறை அஹோபலம் சுமார் 19 வருடங்களுக்குப் பின் சென்ற நான் பாவன நரசிம்மனையும் பார்கவ நரசிம்மனையும் உக்ரஸ்தம்பத்தையும் ஸேவிக்கவில்லை.

 17. K.S.Venkataraghavan November 22, 2012 at 4:29 AM Reply

  தவறான பதிவாக வருகிறது .. இந்த பதிவில் இவ்வாறு இருக்க வேண்டும் இருமுறை அஹோபலம் சுமார் 19 வருடங்களுக்குப் முன் சென்ற நான் பாவன நரசிம்மனையும் பார்கவ நரசிம்மனையும் உக்ரஸ்தம்பத்தையும் ஸேவிக்கவில்லை.

 18. Charumathy November 23, 2012 at 5:58 AM Reply

  Obviously, the author has written this as a story. He is not opining his views or beliefs here. No one has any right to comment on any caste over here.
  Mr. Aravindan Neelakandan has strongly opposed / blamed the author for not respecting or insulting the other religions / caste / culture. However I don’t see how different is the objector.
  As Vidya rightly said “read this as a story” and enjoy if you like or ignore if you don’t.
  For all those whose BP is shooting up over this story, please get out of your house there are lot more things to boil on.

 19. Tamil November 23, 2012 at 6:17 PM Reply

  Style of the story is an imitation of his guru Sujatha. It is quite natural for an infatuation to finally become embedded. Desikan needs to break free from the grips of the guru. He may blossom into a writer on his own.

  The story cant be brushed aside as a mere fiction to read and relish. Such stories make deep inroads into the psyche of the readers, so Arvavindian Neelakantan is fairly correct to say the story is politically or religiously or socially incorrect.

  The story presents two sides: one the classes; the other the masses. The masses are of the lowest in social hierarchy. The classes want to have a life of their own and the masses become a nuisance on their way to pursuit of pleasure. But it is not possible to weed out through fair means. The dad in law does it through indirect and unfair means. His concern is for his daughter too. He commits it in order to help the son in law to get a life he wants, thereby the family boat wont be rocked jettisoning her daughter”s welfare..

  Usurpation of places and driving the indigenous tribes away is universal and historical. And further it is the Darwin theory of Survival of the fittest. Here, the fittest survive through crooked and unfair means. U need brilliant brain to expropriate the innocent through such means. The robber needs to be cleverer than the police.

  Aravindan Neelakantan, although justified in voicing his concern for …read my second para.., yet he sees the wood for the trees: i.e. the story cages the classes and pillories them showcasing their wily nature in attempting piggy back ride on the weak masses. But he sees it is a gratuitous attack on the masses. Partly true.

  Sujatha has done this style of attack on classes. His chela finely imitated it.

  So, for the fine imitation, congrats. Keep it up.

 20. Johny Enlgish November 24, 2012 at 9:55 AM Reply

  Dear readers,

  I am very much in debt now to Mr. Aravindan Neelakandan. He has lighted my life.

  I am going to use the same method Mr. Aravindan Neelakandan has used to resolve his crisis of identity and become popular also.

  I wanted to do a lot of businesses successfully with cheap publicity stunts. For becoming successful I need to become popular. So, I am going to use this same method that Mr. Aravindan Neelakandan has used and condemn those aspects in this story that are of my business interests, except the caste business, which is the business area of Mr. Aravindan Neelakandan.

  So, I will be writing big fat self-righteous pungent articles against the author of the story and his elitist attitude demeaning construction business, travel business, movers and shakers, house warming ceremony business, poultry business, lumber business, kesari bath business, MLA business, father-in-law business, and honey bee business that are mocked in this story. How dare you Desikan !

  By the method of condemnation, I will project that I am the only person who is the saint and nobody else has any rights or freedom to write about people who are doing any of these businesses that I am interested.

  Sujatha Desikan, you are doomed. Our livelihood now depends upon damning you and your caste.

  Probity is dead ! Long Live Aravindan Neelakandan !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s