செல்லப் பிராணி – சுஜாதா


செல்லப் பிராணி

பண்ணையில் ஒருவன் நாய்க்குட்டி வளர்த்தான். அதை மடியில் வைத்துக் கொள்வான். அது துள்ளிக் குதித்து விளையாடியது. எஜமானன் மிகவும் சந்தோஷப்பட்டான் . இதைப் பார்த்த பண்ணைக் கழுதை, நாமும் அவ்வாறு குதித்தால் எஜமான் மகிழ்ச்சியுறுவான் என்று அவன் மேல் துள்ளிக் குதித்தது. அவனுக்கு அந்த பாரம் தாங்காமல் காயம்பட்டு கெட்ட கோபம் வந்து கழுதையை அடித்துத் துரத்தி விட்டான்.

நீதி: தமாஷ் பண்ணவும் சில தகுதிகள் வேண்டும்.

செல்லப் பிராணி (நவீன வடிவம்)

அமெரிக்காவில் சாண்டாகிளாராவில் ஒரு சாப்ஃட்வேர் இஞ்சினியரிடம் ஒரு மேசைக் கணிப் பொறி இருந்தது. அது பெரிசாக இருக்கிறது என்று ஒரு லாப்டாப் வாங்கினான். அதை மடியில் வைத்துப் போற்றி, மெயில் பார்க்க பாத்ரூமுக்கெல்லாம் எடுத்துச் சென்றான். ரொம்ப சந்தோஷப்பட்டான். இதைப் பார்த்த மேசைக் கணினி தைரியம் பெற்று, தன் பவர் கனெக் ஷனைப் பிடுங்கிக் கொண்டு அவன் மடியில் பொத்தென்று குதித்தது. அதனால் அவன் தொடை எலும்பில் இரண்டு இடத்தில் முறிவு ஏற்பட்டு டைட்டேனியம் ப்ளேட் வைக்கும்படி ஆகிவிட்டது. மேசைக் கணிப்பொறியைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டான்.

நீதி: அதேதான்.

சுஜாதாவின் புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள் அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும் இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச் சொல்லும் இக்கதைகள் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத் தருகின்றன.

Advertisements

3 thoughts on “செல்லப் பிராணி – சுஜாதா

  1. Mohan Kumar November 15, 2012 at 8:03 AM Reply

    Interesting. Have not read this before

    • BaalHanuman November 16, 2012 at 6:17 AM Reply

      நன்றி நண்பரே…

  2. வித்தியாசமான நீதிக் கதைகள்… நன்றி…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s