குட்டிக் கதை – வீணாகச் சுமக்காதீர்கள்!


அடுத்த வருடம் பொதுத்தேர்வு. அதை நினைத்து எப்போதுமே கவலையாக இருக்கிறது” என்று வகுப்பில் யுவராஜ் தன் நண்பனிடம் வருத்தமாகப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டபடி ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.

யுவராஜைப் பார்த்து, நீ பலசாலியா? நோஞ்சானா?” என்று கேட்டார்.

நான் தினமும் ஜிம்முக்குப் போகிறேன். சந்தேகமில்லாமல் பலசாலிதான்” என்றான். சக மாணவர்களிடம் தன் ஜிம் பெருமையைப் பகிர்ந்துகொண்ட சந்தோஷம் அவன் குரலில் தெரிந்தது.

தன் மேஜைமீது வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய பாட்டிலைப் பார்த்தார் ஆசிரியர். பின்னர், யுவராஜ், இந்த பாட்டிலை ஒரு நிமிடம் உன் கையில் தூக்குவாயா?” என்றார்.

அவ்வளவுதானே? இதோ வருகிறேன் சார்” என்றபடி ஆசிரியர் இருக்கும் இடத்துக்கு வந்தான் யுவராஜ். அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு நின்றான். ஏதோ அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கிக்கொண்டிருப்பது போல இருந்தது அவனது தோற்றம்.

அப்படியே ஐந்து நிமிடங்கள் இருப்பாயா?”

நிச்சயம் இருப்பேன் சார்.”

ஒருமணி நேரம் இருப்பாயா?”

இருப்பேன்” என்று யுவராஜ் கூறினாலும் அவன் மனதில் சந்தேகம் எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தது. கை வலிக்குமே!

இரண்டு நாட்கள் இப்படியே இருப்பாயா?”

யுவராஜின் முகம் வெளிறிப்போனது. வகுப்பு மாணவர்களில் ஒருவன், ‘சார், அவன் கை அவ்வளவு தான். மருத்துவமனைக்குக் கொண்டுபோக வேண்டியதுதான்’ என்றபோது பலரும் சிரித்தனர்.

பாட்டிலின் கனம் மாறவில்லை. ஆனாலும் தொடர்ந்து சுமக்கும்போது அதன்விளைவு பயங்கரமானதாக இருக்கிறது இல்லையா? கவலையும் அப்படித்தான். கவலைகளை நீண்ட நேரம் மனதில் சுமந்துகொண்டிருந்தால் நம் உடல் நலம், மனநலம் இரண்டுமே கெட்டு விடும். எனவே கவலைகளை அவ்வப் போது உதறிவிடவேண்டும்” என்றார்.

பாட்டிலை மேஜைமீது வைத்த யுவராஜ் தன் இருக்கைக்கு உடனே சென்றுவிடவில்லை. தன் மற்றொரு சந்தேகத்தை வெளிப்படுத்தினான். கவலை பெரிதாக இருந்தால் அதைநீக்குவது கஷ்டம் இல்லையா?”

ஆசிரியர் சில கணங்கள் யோசித்தார். பின்னர் தன்னிடம் இருந்த சாக்பீஸை இரண்டு துண்டுகளாக்கினார். அதில் சிறிய துண்டு சாக்பீஸை அவனிடம் கொடுத்து, இதைக் கண்ணுக்கு மிகவும் அருகில் வைத்துக்கொள்.. இப்போது இந்த சாக்பீஸ் துண்டு சிறியதாக இருக்கிறதா? பெரியதாக இருக்கிறதா?” என்று கேட்டார்.

அந்த சாக்பீஸைக் கண்ணுக்கு வெகு அருகே கொண்டுவந்தபோது அது மிகவும் பெரியதாக தோன்றியது யுவராஜுக்கு. அதைக் கூறினான்.

பிறகு, சாக்பீஸை இந்த மேஜையில் வைத்துவிட்டு, உன் இருக்கையில் இருந்து பார்த்தால் எப்படி இருக்கிறது என்று சொல்” என்றார் ஆசிரியர்.

அப்படியே செய்தான் யுவராஜ். இப்போது சாக்பீஸ் மிகவும் சிறியதாகக் காட்சி அளித்தது.

இப்படித்தான். கவலையை மனதிலேயே அசைபோட்டால் அது பெரியதாகத் தெரியும். கொஞ்சம் ஒதுக்கி வைத்துப் பார்த்தால் அதுவே சிறியதாக தோற்றம் தரும்!”

–நன்றி கோகுலம்

Advertisements

9 thoughts on “குட்டிக் கதை – வீணாகச் சுமக்காதீர்கள்!

 1. அப்பாதுரை November 14, 2012 at 2:23 AM Reply

  எளிமையான செய்தி.
  கோகுலம் இன்னும் வருகிறதா என்ன?

  • BaalHanuman November 14, 2012 at 3:42 AM Reply

   என்ன அப்பாதுரை சார் இப்படிக் கேட்டு விட்டீர்கள் ? கோகுலம் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளி வருகிறது…

   http://www.kalkionline.com/default.php

 2. அறிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள் அருமை…

  நன்றி…

  • BaalHanuman November 14, 2012 at 3:43 AM Reply

   நன்றி தனபாலன்…

 3. அப்பாதுரை November 14, 2012 at 5:27 PM Reply

  அப்படியா? நீங்க சொல்றது கல்கி பத்திரிகை கோகுலமா இல்லே அதே பெயரில் வேறேயா? இந்தியா போனப்ப கண்ல படவே இல்லையே? கோகுலம் நின்னுடுச்சுனு நினைச்சேன்.. பிள்ளைப்பிராய நினைவுகளில் கோகுலமும் உண்டு.

 4. அப்பாதுரை November 14, 2012 at 5:27 PM Reply

  இப்பத் தான் லிங்க் பார்த்தேன் 🙂

 5. rathnavelnatarajan November 15, 2012 at 7:31 AM Reply

  அருமை.
  நன்றி.

 6. கிரி November 19, 2012 at 1:30 PM Reply

  இதில் வரும் விஷயங்கள் எல்லாம் ஏற்கனவே படித்தது தான் என்றாலும், தற்போது இது எனக்கு Refreshing ஆக இருந்தது. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s