4-கம்பராமாயணம் – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

இவ்வாறு பல அறிவியல் பூர்வமான கருத்துக்களை – செய்திகளை – சொல்லிக் கொண்டே போகலாம். மருந்து இருக்கிறது. எப்படிப்பட்ட மருந்து ?

“மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
உடல் வேறு வகிர்களாக
கீண்டாலும்  பொகுந்துவிக்கும் ஒருமருந்தும்
படைக்கலங்கள் கிளைப்பது ஒன்றும்
மீண்டேயும் தம்உருவை அருளுவதும் ஓர் மெய்ம் மருந்தும் உள வீர
ஆண்டேகி கொணர்தி”
லைஃப் சேவிங் டிரக்ஸ், பிளாஸ்டிக்  ஸர்ஜரி என்று பல கருத்துக்கள் தென்படுகின்றன இதில்.

கம்பன் காவியத்தில் தூரங்கள் யோசனைகளாக கணக்கிடப்பட்டன. யோசனை என்பது எத்தனை கிலோ மீட்டர் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசனை செய்யலாம்.
“எம் மலைக்கும் பெரிதாய வடமலை”

என இமயமலையைக் குறிப்பிட்டு,
“அம் மலையின் அகலம் எண்ணின்
மொய்ம்மறந்த திண் தோளாய்,
முப்பத்து ஈராயிரம் யோசனைகள்”
என்கிறார்.
மேருவிலிருந்து ஒன்பதாயிரம் யோசனை நீலகிரி, அதிலிருந்து நாலாயிரம் யோசனை மருந்து வைகும் கார்வரை என்னும்போது, எளிய  ஸர்வே முறைகள் அவர் காலத்திலிருந்திருக்க வேண்டும். இல்லையேல் முப்பத்து இரண்டாயிரம் என்று அதனை சரியாகச் சொல்ல முடியாது.

பிரம்மாஸ்திரத்தை வர்ணிப்பது அணு ஆயுதம் போல் தான் தெரிகிறது.
“கோடி கோடி நூறாயிரம் சுடர்க்கணைக் குழாங்கள்

மூடி மேனியைச் முற்றுறச் சுற்றின மூழ்க”
என்னும்போது மிகப் பெரிய ஆயுதம்தான் அது.
அதுபோல் இராமன் திரும்பும் புஷ்பக விமானத்தில் பல பேருக்கு இடம் இருக்கிறது.  போயிங் 747-ஐ விட பெரிசாக இருந்திருக்க வேண்டும்.
“சூரியன் மகனும் மன்னு வீரரும் எழுபது வெள்ள
வானரரும் கன்னி மாமதில் இலங்கை மண்ணோடு
கடற் படையும் துன்னினார் நெடும் புட்பக மிசை
ஒரு சூழல்”
என்று அந்தப் பெரிய விமானத்தில் இன்னமும் இடம் இருக்கிறதாம்.
“பத்துநால் என அடுக்கிய உலகங்கள் பலவின்
மெத்துயோனிகள் ஏறினும்  வெளியிடம்
 மிகுமால்…”
என்ன Space Station அளவுக்குச் சொல்கிறார்.
அனுமன் மருத்துவ மலையை எடுத்து வரச் செல்லும்போது நிஜமாகவே அல்ட்ராஸானிக் வேகத்தில்தான் சென்றிருக்க வேண்டும்.
“தோன்றினான் என்னும் அந்தச் சொல்லின்
முன்னம் வந்த ஊன்றினன்”
என்கிறார்.
இவ்வாறு பல கருத்துக்களைக் கொண்ட கம்பராமாயண காலத்தில் இந்தச் சாதனங்கள் எல்லாம் இருந்தன என்று சொல்ல வரவில்லை நான். அபார கற்பனை மிக்க ஒரு இலக்கிய கர்த்தாவால் எதிர்காலத்தை நோக்க முடியும் என்பதே என் வாதம்.
நாங்கள் எழுதும் ‘சைன்ஸ் ஃபிக் ஷன்’ எல்லாமே அதுதானே? கம்பன்தான் முதல் Science fiction எழுத்தாளன் என்பேன்.
கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி வெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.
Advertisements

One thought on “4-கம்பராமாயணம் – சுஜாதா

  1. R. Jagannathan November 10, 2012 at 7:23 AM Reply

    Is Sujatha saying that the descriptions of weapons / transport units only are fiction or the entire Ramayana is a fiction? – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s