புத்தக ஞாபகங்கள் – சுஜாதா தேசிகன்


நமது பாலஹனுமான் வாசகர்களுக்காக நண்பர் சுஜாதா தேசிகன் எழுதிய சிறப்புப் பதிவு இது.  “சுருக்கமாக எழுதுகிறேன். மற்றபடி மானே! தேனே! பொன்மானே! எல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி…

 காந்தளூர் வசந்தகுமாரன் கதை

சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் பயணத்தின் போது காந்தளூர் வசந்தகுமாரன் கதை பற்றி பேச்சு வந்தது. “அதனுடைய இரண்டாம் பாகம் ஒன்று எழுத முடிவு செய்திருந்தேன்” என்றார்.

“அட எப்ப சார் எழுதப் போறீங்க?”

“இப்ப முடியாது, கதை எனக்கே மறந்துவிட்டது” என்றார். ஆனால் இரண்டாம் பாகத்துக்கான சில விஷயங்களை முதல் பாகத்தின் கதை நெடுகிலும் விட்டிருப்பதாகச் சொன்னார்.

சென்னை வந்த பிறகு கதை முழுவதும் படித்துவிட்டு அவருடன் ஒரு சனிக்கிழமை ஒவ்வொரு பாகத்தின் கதைச் சுருக்கத்தையும் சொன்னேன். குதிரை வியாபாரி இடம் வந்த போது “இங்கே தான்” ஒரு சம்பவம் இருக்கு என்றார். முழுக் கதையும் கேட்ட பிறகு “சரி எழுதலாம்” என்றார்.

“இப்பவே ஆரம்பியுங்க”

“நிறைய படிக்க வேண்டும்… ”

“என்ன என்ன புத்தகம் ? என்ன குறிப்பு வேண்டும் என்று சொல்லுங்க நான் உதவி செய்கிறேன்” என்றேன்

சில சோழர் வரலாறு புத்தகங்கள், மற்றும் சில புத்தகங்கள் பற்றி சொன்னார். இதற்காக சில புத்தகங்களை வாங்கி அவை இப்போது குமுதம் நூலகத்தில் இருக்கு என்றார். பத்திரிகை நண்பருடன் இரண்டாம் பாகம் பற்றி பேசினேன். அவரும் நிச்சயம் இதை அந்தப் பத்திரிகையில் போடலாம் என்றார்.

ஆனால் அது நிறைவேறாது போனது நமக்கு துரதிர்ஷ்டம். இன்றும் கா.வ.க புத்தகத்தைப் பார்க்கும் போது அதன் இரண்டாம் பாகம் அதனுள் ஒளிந்து கொண்டு இருப்பது தான் எனக்கு ஞாபகம் வரும். யோசித்துப் பார்த்தால் எல்லா புத்தகங்களிலும் ஏதாவது ஒரு ஞாபகம் இருக்கிறது. ஞாபகம் இல்லாத புத்தகங்கள் நமக்கு தேவைப்படாது.

Desikan Narayanan

செ. செல்லமுத்து, நத்தக்காடையூர்.

? காந்தளூர் வசந்தகுமாரன் கதையின் இரண்டாம் பாகம் என்னவாயிற்று ?

! எனக்கு வேளையும்,  ‘மூடு’ ம் வரக் காத்திருக்கிறது.

சிவக்குமார், அரக்கோணம்.
? முன்பு போல் சரித்திர நாவல்கள் இப்போது எழுதப்படுவதில்லையே  ஏன்?  எழுத்தாளர்கள் இல்லையா அல்லது ரசிகர்கள் குறைந்து விட்டார்களா ?

! சரித்திரச் சம்பவங்கள் குறைந்து விட்டன.  இனிச் சரித்திர நாவல்கள் அடுத்த நூற்றாண்டில்தான் சாத்தியம்.

Picture 011

ஆர்.மோகன், திருவண்ணாமலை
? சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் பற்றி…?

யவன ராணியை ரசித்துப் படித்தேன். கடல் புறாவின் வர்ணனைகளையும்.

அ.ஆறுமுகம், கடவூர்
? தாங்கள் இதுவரை எழுதியுள்ள நாவல்கள் எத்தனை?

! எனக்கே ஞாபகமில்லை. என் அபிமான வாசகர் தேசிகனைக் கேட்டுச் சொல்கிறேன்.

டி.சுப்ரமணியன், மேலையூர்
? யார் அந்த உங்களுடைய, அபிமான வாசகர் தேசிகன் ?

! ஒரு கம்ப்யூட்டர் இஞ்சினியர்.

சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன.

ப்ரியா.
? கல்கிக்குப் பிறகு யாரும் வரலாற்று நாவல்கள் எழுதுவதில்லையே, ஏன் ? அப்படி எழுதினால் இக்கால மாணவர்களுக்கு வரலாற்றின் மேல் ஓர் ஆர்வம் வருமே !

! கல்கி வரலாற்றில் பல்லவ, சோழர்களின் பொற்காலங்களை விலாவாரியாக எழுதிவிட்டார். எஞ்சியிருப்பது குறுநில மன்னர்களும், ஒரு சில பாண்டியர்களும்.

சுஜாதா தன் மறைவிற்கு முன்னால் இறுதியாக எழுதிய கேள்வி-பதில் தொடர் இதுவே. குங்குமத்தில் வாராவாரம் எழுதிய இந்த கேள்வி-பதில்களில் சுஜாதாவின் இளமை குன்றாத துள்ளலும் கூர்மையும் எங்கெங்கும் பரவியிருக்கின்றன. மருத்துவ மனையில் தனது இறுதி தினங்களில் மரணத்தோடு அவர் போராடிக்கொண் டிருந்த சந்தர்ப்பத்தில்கூட தன் பதில்களை அனுப்பி வைத்தார். எந்த நிலையிலும் எழுத்தை மட்டுமே பற்றி நின்ற நம்முடைய காலத்தின் மாபெரும் கலைஞனின் ஆளுமையின் இயல்பு அது.

பெ.பாண்டியன், காரைக்குடி.
? சரித்திரக் கதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதே..?

! சரித்திரக் கதைகள் என்ன, கதை எழுதுவோரின் எண்ணிக்கையே குறைந்து வருகிறதே… கவனித்தீரா ? தமிழர்கள் தொலைக் காட்சி மயக்கத்தில் கதை படிப்பதையே மறந்து வருகிறார்கள்.

 காந்தளூர் வசந்தகுமாரன் கதை

சுஜாதா எழுதிய இரண்டாவது சரித்திர நாவல் இது. சோழ பேரரசர்களின் காலத்தை சார்ந்தது. இதில் வரும் கணேசபட்டரும் வசந்தகுமாரனும் சுஜாதாவின் பிரபல நவீன பாத்திரங்களான கணேஷ் – வசந்த் சாயலில் இருப்பதை சிலர் கவனித்து குறிப்பிட்டுள்ளனர். இது முழுமையான ஆராயப்பட்ட சரித்திர சம்பவங்களைச் சார்ந்து எழுதப்பட்ட சுவையான நாவல்.

தொடர்புடைய பதிவு:

காந்தளூர் வசந்தகுமாரன் கதை – சுஜாதா

Kandhaloor Vasanthakumaran Kadhai

Advertisements

6 thoughts on “புத்தக ஞாபகங்கள் – சுஜாதா தேசிகன்

 1. நல்ல கேள்விகள்-பதில்கள்…

  நன்றி…

  • BaalHanuman November 7, 2012 at 2:35 PM Reply

   நன்றி தனபாலன் உங்கள் ரசனைக்கு…

 2. ரெங்கசுப்ரமணி November 7, 2012 at 7:47 AM Reply

  இக்கதையை படிக்கும் போது வசந்த குமாரனின் மீது ஒரு எரிச்சல்தான் வந்தது. என்னடா இவன் சரியான முட்டாளாக உள்ளானே, சும்மா சும்மா பெண்ணின் பின்னால் சுற்றுகின்றான் என்று. இதை இன்னும் பெரிதாக எழுத நினைத்து ஆரம்பித்து, நடுவில் அவசரமாக முடித்து விட்டார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

  • BaalHanuman November 7, 2012 at 2:34 PM Reply

   அன்புள்ள ரெங்கசுப்ரமணி,

   நீங்கள் கூறுவது உண்மைதான்.

   நண்பர் ப்ரூனோ கூறுவது போல,

   குமுதம் ஆசிரியராக சுஜாதா பொறுப்பேற்றவுடன் 1994ல் ஆரம்பித்து 1995 ஜூன் மாதம் குமுதத்தில் நிறைவு பெற்ற நாவல் இது

   சுஜாதா குமுதம் ஆசிரியராக விலகும் போது அவர் எழுதிய தொடர்கள் பலவும் திடீரென்று நின்றன (ஒரு வேற்று கிரக விஞ்ஞான படக்கதை உட்பட)

   அதில் இதுவும் சிக்கியது துரதிர்ஷ்டம் தான்

   வசந்தகுமாரனுக்கும் அவசர திருமணத்துடன் நிறைவு பெற்றது சற்றும் எதிர்பார்க்காதது.

   ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. இந்த நாவலுக்கு இரண்டாம் பாகம் எழுத நினைத்திருக்கிறார். அது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஏனெனில் இறுதி அத்தியாயம் முழுமையாக முற்று பெறவில்லை.

   இந்த நாவலின் இன்னொரு பாகம் ஏன் வெளிவரவில்லை என்ற ஏக்கம் தான், ஏனோ ஜீரணிக்க முடியாததாக இருக்கிறது.

 3. Harish Ragunathan November 14, 2012 at 8:39 PM Reply

  The book is a treasure for those keen on information about the particular time, what with information on the various types of horses or the distinction between a Roman coin and that of a Chola coin(as enumerated by Vasantha Kumaran) giving a rich tone to the story.

  An enjoyable read, indeed.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s