2-கம்பராமாயணம் – சுஜாதா


இதன் முந்தைய பகுதி…

முதலில் என்னைக் கவர்வது கடவுள் தத்துவம். கம்பன், ஒவ்வொரு காண்டத்தின் ஆரம்பத்திலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடலை வைத்திருக்கிறார். காவ்யம், ராமன் என்று அவதாரப் புருஷனைப் பற்றி இருந்தாலும், எம்பெருமான் பின் பிறந்தோர் இழைப்பரோ பிழைப்பு என்று இராமனை பெருமான் ஸ்தானத்திற்கு போற்றி அடிக்கடி ஏற்றிச் சொன்னாலும், இந்தக் கடவுள் வாழ்த்துக்களில் கூறப்படும் கடவுள்கள் எல்லாம் மிகப் பொதுப் படையாகவே இருக்கின்றனர்.

“உலகம் யாவையும்” என்னும் முதல் பாட்டு உலக பிரசித்தம். எல்லாருக்கும் தெரியும். அதை விட மற்ற காண்டங்களின் அறிமுகப் பாடல்கள் அந்த அலகிலா விளையாட்டுடைய தலைவரை
“வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும் ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன்” என்றும்,
“வேதம் வேதியர் விரிஞசன் முதலோர் தெரிகிலா
ஆதி தேவர்”
என்றும், ஒரு காண்டத்தில் அதை விட,
“ஒன்றே என்னின்  ஒன்றே ஆம்
பலவென்று உரைக்கின் பலவே ஆம்
அன்றே என்னின் அன்றே ஆம்
ஆமே என்றின் ஆமே ஆம்
இன்றே என்னின்  இன்றே ஆம்
உளதென்றுரைக்கின் உளதே ஆம்”
போன்ற வரிகள் நவீன  க்வாண்டம் இயற்பியலின் இறுதி சிந்தனையாக வெளிப்படும் எதிர் மறைகளின் ஒருமைப்பாடாக வெளிப்படும் கடவுள் தத்துவத்துக்கு ஒத்துப் போகிறது.
“தன்னுளே உலகங்கள் எவையும் தந்து அவை தன்னுளே நின்றுதாம் அவற்றுள் தங்குவான் பின்னிலன்  முன் இவன் ஒருவன் பேர்கிலன்” என்று சொல்லும் போது நவீன இயற்பியல் கருத்துக்களுக்கு வெகு அருகில் உள்ளது.
கம்பராமாயணத்தில் அன்றாட அறிவியல் செய்திகளும் அங்கங்கே கிடைக்கின்றன. அயோத்தி நகரத்து மதில்களை வருணிக்கும்போது “நால்வகைச் சதுரம் விதி முறை நாட்டிய” ஆர்க்கிட்டெக்சர்  கட்டிட இயல் இருக்கிறது. அப்போது தற்காப்புக்காகப் பயன்படுத்தப்பட்ட கருவிகளின் பட்டியல் இருக்கிறது.
“சினத்து அயில், கொலைவாள், சிலை, மழு, தண்டு, சக்கரம், தோமரம், உலக்கை, கனத்திடை உருமின் வெருவரும் கவண்கல்” என மேகத்தைத் தொடும் ராக்கெட்டுகள் கூட இருக்கிறது. கூர்ந்து கவனித்து பட்டியலிட்டிருக்கிறார். ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும். குறிப்பாக உலக்கையை எப்படிப் பிரயோகித்தார்கள் என்று யோசிக்கலாம்.
சீதையின் திருமணத்தின் போது திருமணச் சடங்கில் மணலை விரித்து தருப்பை சாரதி மென்மலர் கொண்டு நெய் சொரிந்து எரிமுன் மூட்டி தாரை வார்த்தல், தீவலம் வருதல், அம்மி மிதித்தல், அருந்ததி காணல் என்று விரிவாக உரைத்திருந்தாலும் தாலி பற்றி ஒரு வார்த்தை இல்லை. அது ஏன் என்றும் மேற்படி ஆராய்ச்சியாளர்கள் யோசிக்கலாம்.
தசரதனுக்கு வருவது ‘ஹார்ட் அட்டாக்’  என்று நம்ப இடம் இருக்கிறது.
“வேய் உயர் கானம் தானும் தம்பியும்
மிதிலைப் பொன்னும்
போயினான் என்றான் என்ற போழ் தத்தே
ஆவி போனான்”
என்று பொசுக்கென்று போய்  விடுகிறார்.
“நோயும் இன்றி நோன்  கதிர் வாள்
வேல் இவை இன்றி மாயும்”
என்று விரைவான மரணத்தை கம்பர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஏரோப்ளேன் டேக் ஆஃபும் இருக்கிறது ஆரண்ய காண்டத்தில்.
“மண்ணின் மேல் அவன் தேர் சென்ற சுவடெலாம் மாய்ந்து
 விண்ணின் ஓங்கியது ஒரு நிலை”
என ராவணன் தேர் தரையில் ஓடி ஜிவ்வென்று எகிறிப் பறந்ததின் சுவடுகள் தெரிகின்றன.

தொடரும்…

கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி வெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம் இன்றும் நிலவுகிறது.

One thought on “2-கம்பராமாயணம் – சுஜாதா

  1. R. Jagannathan November 5, 2012 at 9:49 AM Reply

    I have read somewhere that ‘Thaali’ was not there in the ancient days and was an addition at a later time. Sujatha was a great writer because he was a great reader with a very good memory for the best writings – whether it was by Kambar or Aazwars or Scientists or by budding poets! – R. J.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s