1-கம்பராமாயணம் – சுஜாதா


இந்த விழாவில் (கோவை கம்பன் கழக விழா) பேசியவர்கள், பேசப் போகிறவர்கள் எல்லாரும் என்னைவிட அதிகமாக கம்பனைப் படித்து ஆராய்ந்து தேர்ந்தவர்கள். இவர்களுக்கிடையில் அரைகுறையான என்னை அழைத்துப் பேச வைத்திருப்பது, அதுவும் கம்பனைப் பற்றி பேச வைப்பதிலிருந்து நான் எவ்வளவு தூரம் தப்பாக மதிக்கப் பட்டிருக்கிறேன் என்பது தெரிகிறது. இருந்தும் இந்தச் செயலை, இந்தப் பெரியவர்களின் பெருந்தன்மைக்கு உதாரணமாகக் கொண்டு தெரிந்ததைப் பேசுகிறேன்.

“கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்”
(படிக்காதவர் படித்தவர் முன் பேசாமல் இருப்பதே நல்லது)

என்று வள்ளுவர் எச்சரித்தாலும் “அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள் தரையில் கீறினால் தச்சரும்” காயமாட்டார்கள் என்று கம்பனே உத்தரவாதமாய் சொல்வதால் “ஆசை பற்றி” அறைகிறேன்.

கம்பராமாயணத்துடன் என் அறிமுகம் மற்ற எல்லா தமிழ் மாணவர்கள் போல பள்ளிப் பாடத்தில் தான் கிடைத்தது. எஸ்.எஸ்.எல்.சி. அப்போது இண்டர்மீடியட் கட்டாயப் பாடங்களில் கம்பராமாயணத்தின் சில உபத்திரவமில்லாத படலங்கள் திரும்பத் திரும்ப பாடமாக வைக்கப் படும். எனக்கு அயோத்தியா காண்டத்தில் கைகேயி சூழ் வினையும் குகப் படலமும் கிடைத்தது. மற்ற பேர் போல் “ஆழி சூழ் உலகமெல்லாம்” போன்ற பாடல்களை நெட்டுருப் போட்டாலும் எனக்கு வாய்த்த தமிழாசிரியர்கள், குறிப்பாக செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் ஐயம்பெருமாள் கோனார் கம்பனைப் பாடிப் பாடி சொல்லித் தருவார் இனிமையாக. அதனால் கம்ப ராமாயணத்தின் மற்ற பாடல்களைத் தேடித் பிடித்துப் படிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அதனுடன் அப்போது நான்-டீடைல்டு பாடமாக “ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்” என்னும் புத்தகம் வைக்கப் பட்டிருந்தது. அதில் யுத்த காண்டத்தின் பல சிறந்த பாடல்கள் மேற்கோள்களாக காட்டியிருந்தது, அந்தச் சின்ன வயசிலேயே கம்பராமாயணம் ஒரு வித்தியாசமான நூல் என்பதை உணர வைத்தது. டி.கே.சி.யின் கம்பர் தரும் ராமாயணமும் கல்கி பத்திரிகையில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தது. அப்போது யாராவது ஜோசியர், அந்த இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்னும் நூலை எழுதிய பேராசிரியர் அ.ச.ஞா. அவர்களுடன் ஒரே மேடையில் நாற்பது வருஷம் கழித்துக் கம்பனைப் பற்றிப் பேசப் போகிறாய் என்று சொல்லியிருந்தால் எனக்கு ஜோஸ்யத்தில் நம்பிக்கை வந்திருக்கும்.

கம்பனின் சொல்லாக்கமும் சந்தமும் உவமைத் திறனும் தமிழில் இன்று எழுதும் அதனை எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் எதாவது ஒரு விதத்தில் பாதித்திருப்பதை என்னால் நிரூபிக்க இயலும்.

ஆனால் அறிவியல் பயின்றவன் என்கிற ரீதியில் கம்பனில் உள்ள அறிவியல் கருத்துக்கள் என்னை வசீகரிக்கின்றன. அவைகளைப் பற்றிக் கொஞ்சம் பேசுவது பொருத்தமாகும் எனத் தோன்றுகிறது.

தொடரும்…

கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதும் பிடித்த விஷயம். கட்டுரைகளில் தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி வெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே. அதற்குக் காரணம் கட்டுரைகளை பலர் கடினமாக எழுதும் பழக்கம். இன்றும் நிலவுகிறது.

4 thoughts on “1-கம்பராமாயணம் – சுஜாதா

 1. அடடா தொடரும் போட்டீங்களே!..அடுத்து எப்போ வரும்?

  • BaalHanuman November 4, 2012 at 5:24 PM Reply

   உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. விரைவில் அடுத்த பகுதிகள் வெளி வரும் 🙂

 2. Karunaharamoorthy November 6, 2012 at 9:21 PM Reply

  I see only Codes and not Text.

 3. BaalHanuman November 7, 2012 at 1:53 AM Reply

  Dear Karunaharamoorthy,

  It seems we have this problem only with yahoo mail. No issues with gmail. Will get back to you on this. Thanks for your patience.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s