கம்பன் காலத்திலும் அடகுக் கடை உண்டு – புலவர் கீரன்


ராமாயணத்தில் இந்திரஜித்து வீசிய பிரம்மாஸ்திரத்தால் இலக்குவன் முதலானோர் மூர்ச்சையுற்றதும், எல்லோரும் உயிர் பிழைக்க வேண்டுமாயின் அனுமார் சென்று சஞ்சீவி கொண்டு வர வேண்டும் என்று ஜாம்பவான் கூறியதும் அனைவரும் அறிந்த கதை.

ஜாம்பவான் ஒவ்வொரு மூலிகையைப் பற்றியும் விளக்கமாகக் கூறுகிறான் அனுமானிடம்.

இறந்தவர்களை எழுப்புவது சஞ்சீவ கரணி; அறுந்த உறுப்புகளை மீண்டும் உடலோடு பொருத்துவது சந்தான கரணி; உடம்பில் பொருந்திக் கொண்ட அம்பு முதலியவற்றின் சிதறல்களை வெளிக்கொணர்வது விஸல்ய கரணி; முதுமையால் மாறிய உடல் உறுப்புகளை மீண்டும் இளமையாக்குவது சாவர்ண்ய கரணி. இவ்வாறு ஒவ்வொரு மூலிகையின் பெயரையும் ஜாம்பவான் அனுமானுக்குக் கூறி இவை உள்ள மலைக்குப் போய் அம்மூலிகைகளைக் கொண்டு வருமாறு சொன்னான்.

அனுமான் வேகத்துடன் புறப்பட்டுச் சென்று இமயம், கயிலை, மேரு, ஏமகூடம் ஆகிய மலைகளைக் கடந்து உத்தரகுருவைத் தாண்டி ஜாம்பவான் சொன்ன மலையை அடைந்தான்.

ஆனால் போன இடத்தில் தனித்தனியே ஜாம்பவான் கூறிய மூலிகைகளின் பெயர்கள் அனுமானுக்கு மறந்து விட்டன.

உடனே அனுமான், ‘மருந்துகளின் பெயர்களை எண்ணிக் கொண்டிருந்தால் காலம் வீணாகி விடும்’ என்று கருதி மலையையே பெயர்த்துக் கொண்டு வந்தான்.

இலக்குவன் முதலானோர் மீண்டும் உயிர் பெற்ற பிறகு அம்மலையைப் பத்திரமாக எளிதில் அடையாளம் கண்டு பிடிக்கும்படி வைத்துவிட்டு வந்தான்.

மீண்டும் தொடர்ந்து நடந்த போரில், ராவணன் விபீஷணனை நோக்கி ஒரு ஆயுதம் விட, அதைப் போய் இலக்குவன் தன் மார்பில் தாங்கிக் கொண்டு மூர்ச்சித்து விழுந்தான்.

அப்போது ராமன் மிகவும் கலங்கிப் போனான். உடனே ஜாம்பவான், ‘அனுமான் இருக்கும் போது என்ன கவலை? அவன் மருந்து மலையைக் கொண்டு வரட்டும்’ என்றான்.

இரண்டாவது முறை அனுமான் பறந்து மிகக் குறுகிய காலத்தில் மருந்து மலையைக் கொண்டு வந்து விட்டான். இரண்டாம் முறை அனுமான் மிக விரைவாக அம்மலையைக் கொண்டு வந்ததற்குக் காரணம், முதலில் அம்மலையை அடையாளமாக வைத்து விட்டு வந்தது தான். பல மலைகளுக்கு இடையில் சஞ்சீவி மலையை அடையாளமாக வைத்ததால் அனுமான் மிக எளிமையாகக் கொண்டு வந்தான். இதற்குக் கம்பர் ஒரு நல்ல உதாரணம் கூறுகிறார்.

அனுமான் பல மலைகளுக்கிடையில் உள்ள சஞ்சீவி மலையைக் குறிப்பாக எடுத்து வந்தது, அடகுக் கடையில் பல பொருள்களுக்கு இடையில் உள்ள ஒரு பொருளைக் குறியீட்டு எண்ணால் உடனே எடுப்பது போல என்று கம்பர் குறிப்பிட்டார்.

“பொய்த்தல் இல் குறிகெடாமே
பொதுவற நோக்கிப் பொன்போல்
வைத்தது வாங்கிக் கொண்டு
வருதலில் வருத்தம் உண்டோ?”

(கம்ப ராமாயணம்: யுத்த வேல் ஏற்ற படலம்- 41)

கம்பன் காலத்திலும் அடகுக் கடை உண்டு என்பதற்கு இப்பாடல் சரியான சான்று.

தினமணி கதிர் 17-12-76 வெள்ளிக்கிழமை

Advertisements

7 thoughts on “கம்பன் காலத்திலும் அடகுக் கடை உண்டு – புலவர் கீரன்

 1. என். சொக்கன் October 18, 2012 at 2:27 AM Reply

  Wonderful. Thanks for unearthing this brilliant story from 36 years back 🙂

  • BaalHanuman October 19, 2012 at 4:41 AM Reply

   கம்பனின் காதலனுக்கு எதோ என்னால் முடிந்தது 🙂

 2. அந்தக்காலத்தில் படித்த ஞாபகம்…

  நன்றி…

  • BaalHanuman October 19, 2012 at 4:39 AM Reply

   உங்களுக்கு அபார ஞாபக சக்தி போலிருக்கிறது 🙂

 3. R. Jagannathan October 18, 2012 at 12:14 PM Reply

  Nice one and nice pictures! Thank you! – R. J.

  • BaalHanuman October 19, 2012 at 4:38 AM Reply

   Thanks J for your encouraging words…

 4. rathnavelnatarajan October 20, 2012 at 7:52 AM Reply

  அருமை.
  நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s