எழுதுவதையே நிறுத்தி விடலாம் போல் இருக்கிறது – சுஜாதா


சுஜாதா சற்றுத் தளர்ந்து இருக்கிறார். நிகழ்ந்தவற்றில் மனது வெறுப்புற்று இருக்கிறது. முகம் அதனைச் சட்டென்று காட்டுகிறது. வீட்டில் இருந்து இரவு ஒன்பதுக்கு சாப்பிடுவதற்காக ஆஃபீஸர்ஸ் கிளப்பிற்குப் போகையில்,

“முதன் முறையாக நானும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்” என்கிறார் சுஜாதா.

“உங்களுக்கு யார்மீதும் கோபம் இல்லையே?”

“நிச்சயமாக இல்லை.”

“நிகழ்ச்சிகளினால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா?”

“இல்லை. ஆனால் வருத்தம் ஏற்பட்டு இருக்கறது.”

“வருத்தம் தீர்மானங்களை உண்டு பண்ணுமே.”

“ஆம். எழுதுவதை நிறுத்திவிடலாமா என்கிற யோசனையே தீர்மானமாக ஏற்பட்டுள்ளது.”

இது கொடுமை. வனவாசத்திற்கு நிகரான கொடுமை. அப்படி ஏற்படின் நஷ்டமடைவது ப்ரிய வாசகர்களும் வாசகிகளுமே. ரீல் சுத்துகிற ஊதாரிகள் இதில் குளிர் காயலாம்.

“சாப்பாடு முடிந்து வீடு திரும்பல். டேபிள் முழுக்கக் கண்ணீர்ப் பூக்களுடன் கடிதங்கள். நாடார் சமூகத்தின் இளைஞர் தனராஜ் உங்கள் வேதனையை நான் அறிவேன். எனக்குக் கதறி அழ வேண்டும் என்று தோன்றுகிறது.”

“தெற்கு நோக்கிப் புரவியை உறையூர் வழியாகச் செலுத்தினார் பெரும்பிடுகு முத்தரையர் என்கிற சரித்திரங்களே எமக்கு சாசுவதம். அவற்றில் இருந்து விமோசனமே கிடையாது” என்கிறார் அடையாறு காமராஜ் அவின்யூ ரகுநாதன்.

நிகழ்ச்சிகள் தீவிரமுற்று நாளின் முன்னிரவு சென்னை செல்கிற தன் இரு பையன்களையும் ஸ்டேஷனுக்கு அனுப்ப சிட்டி ஸ்டேஷனுக்கு வருகிற சுஜாதா துணை தேடுகிறார். ஏ.சி. ஸ்லீப்பர் கோச்சில் எதிர் பர்த்தில் சென்னை போகும் இஞ்சினியர் மாணிக்கம் (சுஜாதாவிடம் மைக்ரோ ப்ராஸஸர்ஸ் கற்றுக் கொள்கிறவர்) நான் அழைத்துப் போய் சேர்ப்பிக்கிறேன் என்று பொறுப்பை ஏற்கிறார். ஒரு சிறு குறிப்பு: மாணிக்கம் மதுரையைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் திரு. சண்முகக்கனி நாடார்!

நான் அறிந்து, தவறு அவர்கள் மேல் இல்லை. நிகழ்ச்சிகளை இறை வணக்கத்துடன் ஆரம்பித்தவர்கள் பப்பட் ஷோ நடத்தித் தற்காலத்திற்கு சந்தோஷமுற்று இருக்கிறார்கள். சூத்ரதாரிகளுக்கு இதயம் என்று ஒன்று இருந்தால் அது பேசும்.

இந்தப் புத்தகத்தில் நானே எழுதிய கட்டுரைகள் சிலவும் உள்ளன.  விளையாட்டு, நகைச்சுவை, புத்தக விமர்சனம், சினிமா விமர்சனம் போன்றவை பல்வேறு தருணங்களில் எழுதியவை.  ஒரு கட்டுரை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு.  கார்த்திகேயன் பற்றிய கட்டுரை இரவிச்சந்திரன் எழுதியது. இந்தப் புத்தகத்தை ஒட்டு மொத்தமாகப் படித்தால் கிடைக்கிற வடிவம் என் நிஜவாழ்வின் வடிவத்தைவிட கொஞ்சம் பெரிசானது.
– சுஜாதா

தொடர்புடைய பதிவு:

[-H.JPG]

திரு சுஜாதாவின் கடிதம்

Advertisements

5 thoughts on “எழுதுவதையே நிறுத்தி விடலாம் போல் இருக்கிறது – சுஜாதா

 1. Mohan Kumar October 17, 2012 at 4:42 AM Reply

  Felt so sad while reading this; I have not read this book yet

  • BaalHanuman October 17, 2012 at 10:47 PM Reply

   ஜனவரிக்குள் உங்களுக்கு இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கா விட்டால் என்னுடையதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…

 2. R. Jagannathan October 17, 2012 at 8:57 AM Reply

  Though I knew of the incident, I didn’t realise that Sujatha was hurt so much to feel giving up writing. Thank God, he recovered from the unfair hit from a few vested interests and continued to entertain millions of his devoted fans. He also replied to his distractors that he won’t be cowed down for long! Thanks for sharing and thanks to Sri Rathnavel Natarajan.

  • BaalHanuman October 17, 2012 at 10:51 PM Reply

   உண்மைதான் ஜெ.

   தமிழக நாடார் வரலாறு புத்தகத்தை சுஜாதாவுக்கு கொடுத்து, அவர் ரத்தம் ஒரே நிறம் எழுதக் காரணமாக இருந்த திரு. ரத்னவேல் நடராஜன் அவர்களுக்கு நாம் அனைவரும் கடமைப் பட்டவர்களே…

 3. Ramanujam Govindan October 17, 2012 at 7:45 PM Reply


  தமிழ் இலக்கிய வட்டாரத்தில் ‘வாசிப்பு இன்பம்‘ என்ற சொல் அடிக்கடி புழங்கும்.எந்த சூழ்நிலையிலும் வாசிக்கத் தக்க, ஆரம்பத்திலிருந்து இறுதி வரை வாசிப்பைச் சுவாரஸ்யம் ஆக்கும் படைப்புக்களை உருவாக்குவது அருங்கலை.

  கச்சேரிகளைக் குறிப்பிடும் போது ‘களைகட்டி விட்டது‘ என்று கூறுவோம்.அது போல் எப்போதும் சோடை போகாத எழுத்துக்கள் சிலருக்குத்தான் வாய்க்கும்.

  ஆங்கிலத்தில் வுட் ஹௌஸ், ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றவர்கள் எழுத்து அவ்வகையானது. தமிழில் கல்கிக்குப் பின் அந்த இடத்தை வெகுகாலம் ஆக்கிரமித்தவர் சுஜாதா என்று தயங்காமல் கூறலாம்.எந்த விஷயத்தையும் அவரது அபார நடைமூலம் சுவாரஸ்யமாகச் சொல்லிவிடுவார்.ஒரு முறை ஜெட் லாக் பற்றிக் குறிப்பிடும் சுஜாதா ‘நாளை கிளம்பி நேற்று வந்து சேர்ந்தோம்‘ என்று குறிப்பிடுகிறார்.

  அவரது எழுத்துக்கள் கனமானவை அல்ல மேலோட்டமானவை என்ற விமர்சனங்கள் இருக்கின்றன.இருப்பினும் அந்த எழுத்துக்களை வாசிப்பு இன்பத்திற்காக இன்றும் வாசிக்கலாம்.

  http://www.facebook.com/ramanujam.govindan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s