3-தேவன்-பற்றி-சுஜாதா…


மே மாதம் 5-ம் தேதி தேவனின் நினைவு நாள். தமிழின் மிகச் சிறந்த மூன்று நகைச்சுவை எழுத்தாளர்கள் எஸ்.வி.வி., கல்கி, தேவன். தேவனின் பல திறமை ஏறக்குறைய கல்கிக்கு ஈடாகச் சொல்லக் கூடியது. விஸ்தாரமான சரித்திரக் கதைகளைத் தவிர மற்றதெல்லாம் முயன்றிருக்கிறார்.

***
தேவனின் நகைச்சுவைக்கு உதாரணமாக அவரது ‘உயர்தர பாடங்க‘ளில் ஒன்று இது:
***
இந்தியா: இதை ஏன் கண்டம் என்று சொல்லக் கூடாது? இந்தியா வாழைப்பூவைப் போல் இருக்கிறது. இங்கிலாந்து ஒரு பாட்டி காலை நீட்டிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. மேற்படி பாட்டி முற்கூறிய வாழைப்பழத்தின் கும்பாரத்தை மட்டும் ஒடித்து எடுத்து விட்டது போலும் இருக்கிறது.
***
விளைபொருள்கள்: வெயில் காலத்தில் வெய்யில், பனிக் காலத்தில் பனி, மிராசுதார்கள் துயரம், வாஜபேய-யாகங்கள்.
***
இறக்குமதி: பெரிய பெரிய வெள்ளைக்கார உத்தியோ கஸ்தர்கள், சீமையில் விலை போகாத வஸ்துக்கள், ஐ.சி.எஸ்.படிக்கச்-சென்றவர்கள்.
***
ஏற்றுமதி: தங்கம், வெள்ளி, சுதேச ராஜாக்கள்.
***
30-6-1935-ல்–தேவன் இவ்வாறு எழுதியுள்ளார்.

***

தேவனின் நூல்களில் என்னுடைய செல்லம் ‘ஸ்ரீமான் சுதர்சனம்.

-கற்றதும் பெற்றதும் -பாகம் – 1

 

வாழ்க்கையின் சிக்கலான தருணங்களைக்கூட நகைச்சுவையாகச் சொல்லும் தேவனின் முக்கியமான படைப்புகளுள் ஒன்று ஸ்ரீமான் சுதர்சனம்.

குடும்பம், அலுவலகம் சார்ந்த உலகம் -இரண்டும் கலந்த ஒரு சராசரி ஆபீஸ் குமாஸ்தாவின் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்கள் அவனை வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்கு எப்படி உயர்த்துகிறது? குமாஸ்தா சுதர்சனம் எப்படி ஸ்ரீமான் சுதர்சனமாகிறான்?

ஸ்ரீமான் சுதர்சனமாக அவன் படும் கஷ்டங்களும், குடும்பத்தினரிடம் மாட்டிக் கொண்டுபடும் அவஸ்தைகளும் தேவனின் நடையில் ஹாஸ்யமாக வந்து விழுகின்றன.

பொதுவாக, நகைச்சுவைக் கதைகளின் ஆயுள்காலம் மிகவும் சொற்பம். உலக அளவில் எடுத்துக் கொண்டால் கூட, இன்று வரை நீடித்து நிற்கும் நகைச்சுவைக் கதைகளின் பெயர்களை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். தேவனின் ஸ்ரீமான் சுதர்சனம் அந்தப் பட்டியலில் மிகச் சுலபமாக வரும்.

தொடர்புடைய பதிவு:

1-தேவன்-பற்றி-சுஜாதா…

2-தேவன்-பற்றி-சுஜாதா…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s