தெய்வத்தின் குரல்!


‘தெய்வத்தின் குரல்’ ரா.கணபதியின் மறைவையொட்டி அவரைப் பற்றிய தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

”படித்திருக்கிறேன் பகவான்!””பால்குமார் ‘தெய்வத்தின் குரல்’ படித்திருக்கிறாயா?” – என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் கேட்டார்.

ஆறாவது பாகம் மங்களாரம்பம் படித்திருக்கிறாயா? அது ரொம்ப முக்கியம். பலமுறை படித்து மனதில் இருத்திக்கொள்வது அவசியம்!”

அன்று பலமுறை இதையே என் குருநாதர் யோகி ராம்சுரத்குமார் சொல்லிக்கொண்டு இருந்தார். ஏதோ ஒரு முறை கேட்டுவிட்டு, முடிந்தால் படி என்கிற விஷயம் இல்லை என்பதை என்னுள் இறக்குவதற்காக உள்ளே சொற்களை வேகமாக ஆணி அடித்துக்கொண்டு இருந்தார்.

நான் படிப்பதாக வாக்களித்தேன்.

”பால்குமார், ஸ்ரீ ரா.கணபதியை அறிவாயா?”

”இல்லை பகவான்!”

”ஸ்ரீ ஆச்சார்யாள் சொன்னதை உள் வாங்கி, வாக்கியப் பிழை ஏதும் இன்றி அதை எழுத்தாக்கி, அச்சாகியதைச் சரி பார்த்து ஸ்ரீ ரா.கணபதி கொடுத்து   இருக்கிறார். இது மகத்தான பணி. ஒரு தபஸ்வியினால்தான் இந்தப் பணியைச் செய்ய முடியும். ஸ்ரீ ரா.கணபதி ஒரு தபஸ்வி. சென்னை போனால் அவரைச் சந்திக்கப் போ… அவருக்கு இந்தப் பிச்சைக்காரனின் மரியாதையைத் தெரிவித்துவிடு.”

நான் குருவின் கட்டளையை உடனே நிறைவேற்றினேன்.

நான் யோகி ராம்சுரத்குமாரின் அன்பைச் சொல்ல, ஸ்ரீ ரா.கணபதி தாமரையாக மலர்ந்தார். ”இது வெறும் நார். பூவால் மணக்கறது. ஞானிகள் ஆசீர்வாதம் கிடைக்கிறது.”

ஸ்ரீ கணபதி என்னைவிட வயதுஅதிகம், படிப்பில் உயர்வு, கல்வி கேள்விகளின் ஞானம். ஆயினும் அது குழந்தை உள்ளம்.

ஆறு ஏழு முறை சந்தித்தேன். பிறகு இடம் மாறினார். விட்டுப் போயிற்று. ஆனால், மனசுக்குள் அவர் குரல் பதிந்து போயிற்று. அவரை  ‘நத்திங்’ என்று சொன்ன உபன்யாசிகளை எனக்குத் தெரியும். ஆனால், அவர் செய்த சாதனையில் நூறில் ஒரு பங்குகூட செய்ய இயலாதவர்கள் அவர்கள்.

அவர் இறந்த இடத்தில் அறையில் யோகி ராம்சுரத்குமார் படங்கள் பலதும் இருந்தன. பெரிய படமாக பகவான் ஸ்ரீ ரமணருடையது இருந்தது. சமயச் சடங்குகள் நிறைந்த மடத்தின் அதிபதி மகா பெரியவாளை வணங்கி அணுக்கமானவராக இருந்தாலும், பகவான் ரமணருள் ஸ்ரீ ரா.கணபதி லயித்து இருக்கிறார். அவர் வாழ்வுப் பாதை அவர் குருவால் சரியான திசை நோக்கி போயிருக்கிறது. சரியான இலக்கை அடைந்திருக்கிறது!

–நன்றி விகடன்

தொடர்புடைய பதிவு:

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s