சாப்பாட்டு ரசிகர் சாவி…


சுவையான சாப்பாடு, மணக்கும் காஃபி இரண்டுமே சாவிக்கு ரொம்பப் பிடித்தவை. ‘நான் சாப்பாட்டு ரசிகன்; சாப்பாட்டு ராமன் அல்ல‘ என்று சொல்வார் அவர். ரொம்பவும் குறைவாகத் தான் சாப்பிடுவார். சாப்பாடு சுவையாக இருக்க வேண்டும். ருசியாகச் சமைக்கவும் தெரியும் அவருக்கு. ரவா உப்புமா பற்றி ‘வாஷிங்டனில் திருமணத்‘தில் ஒரு வர்ணனை வரும். அதைப் படிக்கும்போதே நாக்கில் ஜலம் ஊறும். அவ்வளவு ரசனையோடு எழுதியிருப்பார். ரவா உப்புமா என்றால் அதற்கு என்னென்ன போட வேண்டும், எவ்வளவு போட வேண்டும் என்பதை அவர் மிக நேர்த்தியாகச் சொல்வார். அவரோடு நான் ஜப்பான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குப் போயிருந்தபோது சமையல் பற்றிய அவரது நுணுக்கமான அறிவைக் கண்டு வியந்து போயிருக்கிறேன்.


ஹாங்காங்கில் நண்பர் பாலன் சச்சித் அவர்கள் வீட்டிலும், சிங்கப்பூரில் நண்பர் யாகப் அவர்களின் வீட்டிலும் “இப்படிச் செய்… அப்படிச் செய்…” என்று அவர் சொல்லச் சொல்ல நான் சாம்பார், உருளைக் கிழங்கு வறுவல் எல்லாம் செய்திருக்கிறேன். மணக்க மணக்க கிச்சடியும், ரவா உப்புமாவும் கிண்டிய நாட்கள் மறக்க முடியாதவை.

– ராணி மைந்தன் சாவி – 85   
சாவி-85  நூலின் ஆசிரியர், திரு. ராணிமைந்தன், ஒரு கால் நூற்றாண்டு காலம், அமரர் சாவியோடு, நெருங்கிப் பழகி, பணியாற்றியவர்.

ராணி மைந்தன் குறிப்பிட்ட ரவா உப்புமா பற்றிய சாவி அவர்களின் வர்ணனை இதோ வாஷிங்டனில் திருமணத்திலிருந்து…
வாஷிங்டனில்  திருமணம்
கிச்சனுக்குள் இருந்த வந்த கம்மென்ற வாசனை உள்ளே ரவா உப்புமா தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

‘மொத்தமாக ரவா உப்புமா கிண்டுகிறபோது, வருகிற வாசனையே அலாதிதான்’ என்று மூக்கை உறிஞ்சி இழுத்தார் அம்மாஞ்சி.

கறிவேப்பிலை, இஞ்சி, எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு இந்த ஐந்தும் சேருகிறபோது ‘அடடா‘ என்று நாக்கில் தண்ணீர் சொட்டக் கூறினார் சாம்பசிவ சாஸ்த்ரிகள்.

‘பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினு மினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது , அதில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்!’  என்றார் அம்மாஞ்சி.

‘வாஷிங்டன் நகரத்திலே வாழை இலை போட்டுச் சாப்பிடறது அதை விட விசேஷம்!’ என்றார் சாம்பசிவ சாஸ்த்ரிகள்.

Advertisements

One thought on “சாப்பாட்டு ரசிகர் சாவி…

  1. nathnaveln October 8, 2011 at 3:11 PM Reply

    வாஷிங்டனில் திருமணம் படித்திருக்கிறேன்.
    திரு சாவியின் நகைச்சுவை, வர்ணனை அருமை.
    நன்றி ஐயா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s