சாப்பாட்டுப் புராணம்…


நண்பர் திருமலை ராஜன் மூலம் சமீபத்தில் சமஸ் எழுதிய ‘சாப்பாட்டுப் புராணம்‘ புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.  அருமையான புத்தகம். உடுமலையில் கிடைக்கிறது.  அதே புத்தகத்தைப் பற்றிய தனது அனுபவங்களை நண்பர் சொக்கன் இங்கு பகிர்ந்து கொள்கிறார்…

N. Chokkan

சமஸ்’ எழுதிய ‘சாப்பாட்டுப்  புராணம்’ என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களோ, தெரியாது. நான் மனப்பாடமே செய்திருக்கிறேன். தஞ்சை, சுற்றுவட்டாரங்களில் உள்ள அட்டகாசமான ‘சாப்பாட்டு’க் கடைகளைச் சுவாரஸ்யமான மொழியில் வர்ணனை செய்து அடையாளம் காட்டும் புத்தகம் அது.

சாப்பாட்டுப்  புராண’த்தைப் படித்தபின்னர் அந்தப் பக்கம் பயணம் செல்வது என்றாலே இதில் உள்ள கடைகளை லிஸ்ட் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டேஸ்ட் பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அநேகமாக ஒன்றுகூட சோடை போனதில்லை.

எனக்குத் தெரிந்து ‘சாப்பாட்டுப்  புராணம்’ இப்போது அச்சில் இல்லை. என்னிடம் இருந்த பிரதியையும் யாரோ கடன் வாங்கிச் சென்றுவிட்டார்கள். ஆகவே சமீபத்திய பயணங்களின்போது சாப்பாட்டு அம்சங்கள் குறைந்துபோயின.

போன வாரம் ஒரு திருமணத்துக்காக மன்னார்குடிக்குக் கிளம்பினோம். அந்தச் செய்தியை ட்விட்டரில் அப்டேட் செய்தேன். நண்பர் சந்தோஷ் குரு பதில் எழுதி ‘கும்பகோணம், மன்னார்குடியில் இருக்கும் சாப்பாட்டு புராணக் கடைகளை விட்றாதீங்க’ என்றார்.

’எனக்கும் ஆசைதான். ஆனா எந்தெந்தக் கடைன்னு மறந்து போச்சே!’ என்றேன்.

’சாப்பாட்டு விஷயத்தில் இப்படி மனம் வருந்தலாமா?’ என்று நெகிழ்ந்த சந்தோஷ் குரு உடனடியாக அந்தக் கடைகளைப் பட்டியல் போட்டு ஈமெயிலில் அனுப்பிவைத்தார். திருமணம், கோயில் பயணங்களுக்கு நடுவே அவர் அனுப்பியவற்றில் ஐந்து கடைகளைமட்டும் நேரில் சென்று பார்க்கமுடிந்தது. அந்தக் குறிப்புகள் இங்கே.

1. நீடாமங்கலம் – பால் திரட்டு

மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய ஊர் நீடாமங்கலம்.

வீரா’ படம் பார்த்தவர்களுக்கு இந்த ஊர் நன்றாக நினைவிருக்கும் Winking smile

நீடாமங்கலம் மேல ராஜ வீதியில் உள்ள ’கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்’ அலுவலகத்தில் மாலை 4 மணிக்குமேல் கிடைக்கும் என்று சமஸ் குறிப்பிட்டிருந்தார். நாலே முக்கால் மணிக்கு அந்தப் பக்கம் சென்று விசாரித்தோம். உடைந்து விழும் நிலையில் இருந்த ஒரு கட்டடத்தைக் காண்பித்து ‘ பின்னாடி போங்க’ என்றார்கள். போனோம். மாடு இருந்தது. பால் இருந்தது. ஆனால் பால் திரட்டு இல்லை.

விடுவோமா? நமக்குதான் நாக்கு நீளமாச்சே. அங்கிருந்த ஒருவரிடம் விசாரித்தோம். எங்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ‘இப்பல்லாம் பாலுக்கு ரொம்ப டிமாண்ட் ஆகிடுச்சுங்க, அதனால பால் திரட்டு போடறதை நிறுத்திட்டோம்’ என்றார்.

’வேற எங்கேயாவது கிடைக்குமா?’

‘சான்ஸே இல்லை!’

ஓகே. முதல் விக்கெட் டவுன்!

2. மன்னார்குடி – குஞ்சான் செட்டி கடை

மன்னார்குடி கடைத்தெருவில் இருக்கும் தக்கனூண்டு கடை. இங்கே மிக்ஸர், காராபூந்தி, இன்னபிற வீட்டுப் பலகாரங்கள் பிரபலமாம்.

அநேகமாக எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் குஞ்சான் செட்டி கடையைத் தெரிந்திருந்தது. பேருந்து நிலையத்திலிருந்து சற்றுத் தொலைவில் வலதுபக்கம் திரும்பினால் கடைத்தெரு. அங்கே இரண்டு நிமிடம் நடந்தால் வலதுபக்கம் இந்தக் கூரை வேய்ந்த சிறிய கடை வருகிறது. கொஞ்சம் அசந்தால் மிஸ் செய்துவிடுவீர்கள்.

கடை வாசலில் சின்னக் கூட்டம். எட்டிப் பார்த்தபோது குவித்த பலகாரங்களுக்கு நடுவே சம்மணமிட்டிருந்த ஒருவர் மும்முரமாக எடை போட்டுப் பொட்டலம் கட்டிக்கொண்டிருந்தார்.

IMG_0689[1]

இங்கே அதிக variety இல்லை. ஆனால் அநேகமாக எல்லாப் பலகாரங்களும் சூப்பர் சுவை. குறிப்பாகக் காராபூந்தி, மைசூர்பாக்.

விலையும் மலிவுதான் (கிலோ ரூ 100/-). நீங்கள் ஐந்து ரூபாய்க்குக் கேட்டாலும் பொட்டலம் கட்டித் தருகிறார்கள். நான்கு நாள்வரை வைத்துச் சாப்பிடலாம் என்கிறார்கள்.

3. மன்னார்குடி – டெல்லி ஸ்வீட்ஸ்

குஞ்சான் செட்டி கடையிலிருந்து அரை கிலோமீட்டர் நடந்தால் இடதுபக்கம் டெல்லி ஸ்வீட்ஸ் வருகிறது. இதுவும் சின்னக் கடைதான். உன்னிப்பாகப் பார்த்தால்தான் கண்ணில் படும்.

IMG_0691[1]

According toசாப்பாட்டுப்  புராணம்’, இங்கே ஃபேமஸான ஐட்டம், முந்திரி அல்வா! நாங்கள் இங்கே நின்றிருந்த 10 நிமிடத்துக்குள் குறைந்தது ரெண்டு கிலோ முந்திரி அல்வா விற்றிருக்கும். இன்னும் பல பெரிய  டப்பாக்களில் சுடச்சுட அல்வா வந்தபடி இருந்தது.

முந்திரி என்றவுடன் என் மனைவி பயந்துவிட்டார். ‘அத்தனையும் கெட்ட கொழுப்பு, கலோரி-ரிச், உடம்புக்குக் கேடு, வாங்காதே’ என்றார்.

‘சரி, ஐம்பது க்ராம்மட்டும் வாங்கறேன், சும்மா டேஸ்ட் பார்ப்போம்’ என்றேன் மனமில்லாமல்.

வாங்கினோம். டேஸ்ட் பார்த்தோம். அது முந்திரி அல்வா இல்லை. வழமையான அல்வா, நெய்கூட இல்லை, எண்ணெயில் செய்ததுதான். ஆங்காங்கே முந்திரிகள் தென்பட்டன. அவ்வளவுதான்.

ஆனால் சுவை அபாரம், இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொண்டோம் – இதுவும் விலை மலிவுதான், கிலோ ரூ 120/-

4. கும்பகோணம் – முராரி ஸ்வீட்ஸ்

மன்னார்குடியிலிருந்து கும்பகோணம் திரும்பி ரயில் ஏறுமுன் முராரி ஸ்வீட்ஸைத் தேடிச் சென்றோம். பெரிய கடைவீதியில் முதலாவதாக இருக்கிறது. எல்லா ஆட்டோ டிரைவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. நேராகக் கொண்டு இறக்கிவிடுகிறார்கள்.

IMG_0694[1]

முராரி ஸ்வீட்ஸ் நூற்றாண்டைத் தொடப்போகும் நிறுவனம். அவர்களது வளர்ச்சியைச் சிறு ஃபோட்டோ கண்காட்சிபோல் வைத்துள்ளார்கள். கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்க செம ஜாலியாக  இருக்கிறது – 70 வருடம் முன்னால் முராரி ஸ்வீட்ஸ் இன்றைய குஞ்சான் செட்டி கடைமாதிரிதான் இருந்திருக்கிறது!

முன்பு எப்படியோ, இப்போதைய முராரி ஸ்வீட்ஸில் வட இந்திய ஸ்வீட்ஸ் பிரபலம். குறிப்பாக, ’பாஸந்தி’தான் சாப்பாட்டு புராணத்தில் இடம் பெற்ற ஸ்பெஷல் இனிப்பு.

வழக்கமான பாஸந்திகளில் இனிப்பு ஓவராகக் கடுப்பேற்றும். ஆனால் இங்கே ஏதோ டயட் பாஸந்திபோல மெலிதான இனிப்பு, அட்டகாசமான சுவை, தவறவிடாதீர்கள் Smile (விலை? மறந்துபோச்சு!)

5. கும்பகோணம் – ரோஜா மார்க் இனிப்புகள்

கடைசியாக, கும்பகோணத்தின் ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை போன்றவை ‘ரோஜா மார்க்’ நிறுவனத்தில் வாங்கவேண்டும் என்று ‘சாப்பாட்டுப் புராணம்’ அருளியிருந்தது. தேடிச் சென்றோம்.

பிரம்மன் கோயில் தெருவில் ஒரு சின்ன ஓட்டு வீடு. அதுதான் ரோஜா மார்க் தயாரிப்பு நிறுவனம்.

அநேகமாக ‘ஜென்டில் மேன்’ படத்தில் வரும் அப்பள ஃபேக்டரி மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்களுடைய நேரம், ரோஜா மார்க் ஃபேக்டரிக்கு ஞாயிற்றுக்கிழமை லீவாம். ‘பெங்களூரிலிருந்து இதுக்காகவே வர்றோம்’ என்று ஐஸ் வைத்தும்கூட கதவைத் திறக்க மறுத்துவிட்டார்கள். ஆகவே ஃபோட்டோமட்டும் எடுத்துக்கொண்டு திரும்பினோம்.

IMG_0695[1]

ஆக, ஐந்துக்கு மூன்று பழுதில்லை. நன்றி சந்தோஷ் குரு. நன்றி சமஸ் Smile

***

என். சொக்கன் …

N. Chokkan

என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். நோக்கியா நிறுவனம் வெற்றிபெற்ற கதையை விரிவாக விவரிக்கும் நோக்கியா: கொள்ளை கொள்ளும் மாஃபியா‘ என்ற புத்தகம் இவரது சமீபத்திய ஹிட். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன.

சமஸ் அவர்கள் எழுதியது.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகள் தினமணி இணைப்பிதழான கொண்டாட்டத்தில், ஈட்டிங் கார்னர் பகுதியில் 2007-09 காலகட்டத்தில் வெளிவந்தவை. அப்போது சமஸுக்குக் கிடைத்த வாசகர்கள் ஏராளம். அவர்களுக்குக் கையேடுபோல் இப்போது இந்தப் புத்தகம் வெளியாகிறது.

Advertisements

One thought on “சாப்பாட்டுப் புராணம்…

  1. கிரி September 27, 2011 at 3:39 AM Reply

    சொக்கன் எழுதிய அவருடைய அனுபவம் கூட படிக்க நன்றாக உள்ளது 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s