பதினெட்டு-கதைகள்-சுஜாதா


சுஜாதாவின் முன்னுரை…


பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். “உங்கள் சிறுகதைகள் எல்லாம் வெவ்வேறு புத்தகங்களில் சிதறியிருக்கின்றன, அவைகளில் சிறந்தவற்றை ஒரு தொகுப்பாக வெளியிடுங்களேன்” — நல்ல யோசனைதான். இருந்தாலும் ஒரு சிக்கல்! சிறந்த சிறுகதை என்றால் என்ன ? அதற்கு பதில் கிடைத்து விட்டதென்றால் நான் இனி கதைகள் எழுத வேண்டியதில்லை. “இன்றைக்கு 9-05 க்குநான் ஒரு ‘சிறந்த சிறுகதை‘ எழுதினேன்” என்று எந்த எழுத்துக்காரனாலும் சொல்ல முடியாது. தன் எழுத்தில் உள்ள குறைகளையும் பாசாங்குகளையும் அடையாளம் கண்டு கொள்ளாதவன் நன்றாக எழுத முடியாது.

சிறந்த‘ சிறுகதையை விட்டுவிடுங்கள். ‘சிறுகதை‘ என்பதே என்ன என்று தீர்மானமாகச் சொல்ல முடியாதபடி இந்த இயல் அத்தனை விரிந்திருக்கிறது.  இன்றைக்கு எல்லாரும் ஒப்புக் கொள்ளும்படியாக சிறு கதையை அறுதியிட்டால் “சின்னதாக சொல்லப்பட்ட கதை
அவ்வளவுதான்! வேறு எந்த விதிகளும் இருந்து அதன் வீச்சைக் கட்டுப்படுத்துவதாகத் தெரியவில்லை. “சின்னதாக” என்பதும் ஒரு அளவுக்குத்தான். பெரும்பாலான கதைகள் மூவாயிரத்திலிருந்து ஏழாயிரம் வார்த்தைகளுக்குள் அடங்கி விடுவதால்தான்.

நான் பார்ப்பதையும் உணர்வதையும் என்னால் இயன்ற அளவுக்கு எளிமையாகவும் சிறப்பாகவும் சொல்வதுதான் என் குறிக்கோள்! என்று எர்னஸ்ட் ஹெமிங்க்வே ( Ernest Hemingway) சொன்னதுடன் எனக்கு சம்மதம். ஒரு எழுத்தாளன் கடவுள், அவநம்பிக்கை போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயலக் கூடாது. அவன் தொழில் கடவுளைப் பற்றியும் அவநம்பிக்கைகளைப் பற்றியும் நினைப்பவர்களை வர்ணிப்பது என்று செக்காவ் ( Chekov) ஒரு கடிதத்தில் எழுதியிருக்கிறார். அவரே மற்றொரு கடிதத்தில் “பிரச்னைக்குத் தீர்வு காண்பதையும் பிரச்னை என்ன என்று சொல்வதையும் குழப்பாதே;  ஒரு கலைஞனுக்குப் பின்னதுதான் கட்டாயமானது” என்கிறார்.

இந்தப் பதினெட்டு கதைகள் எவற்றிலும் நான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயலவில்லை. பிரச்னைகளை ஒழுங்காக விவரிப்பதில்தான் — சொல்லுவதில்தான் அக்கறை காட்டியுள்ளேன். இயன்ற அளவுக்கு எளிதாகவும், சிறப்பாகவும் என்னால் கவனிக்க முடிகிறது. காட்சிகளை வித்தியாசமாகப் பார்க்க முடிகிறது. அதைத் தமிழில் எழுத முடிகிறது. இந்த மூன்று தகுதிகளையுமே நான் முழுமையாகப் பெற்றிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். பெற்றுவிட்டால் எழுதுவது எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும். இல்லை. இவை சிறந்த கதைகள் இல்லை. சிறந்த கதைகளை நோக்கிய என் யோக்கியமான முயற்சிகளின் அத்தாட்சிகள்.

நூற்றுக்கு மேற்பட்ட கதைகளிருந்து இந்த பதினெட்டு கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் வாசகர்கள். பத்திரிகைகளில் வெளிவந்தபோது அதிகமான வாசகர்களை அதிகமாக பாதித்த கதைகள் இவை. இருபது வருஷத்துக்கு முன்பு எழுதிய கதைகள் சிலவும், இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. இருந்தும் வாசகர்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்கும்போது இந்தக் கதைகளை நினைவு வைத்துக்கொண்டு என்னை சிலாகிக்கிறார்கள், சில சமயம் திட்டுகிறார்கள். எப்படியோ ஒரு விதத்தில் பத்திரிகை அவசரங்களைக் கடந்துவிட்டன இக்கதைகள். என்னைச் சந்தித்தால் ஞாபகம் வைத்துக் கொண்டு விமர்சிக்க வைத்திருக்கின்றன அவர்களை இக்கதைகள். அதனால்தான் இவைகளை நான் இந்த தொகுப்புக்குத் தேர்ந்தெடுக்கிறேன்.

என் எழுத்தைப் பற்றி நீங்கள் ஏதாவது தீர்மானிக்கும் முன் இவைகளைப் படித்துவிட்டுத் தீர்மானியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். 1971-ல் நான் பெங்களூருக்கு வந்த புதிதில் நான் பிரபலம் என்னும் மாய வெளிச்சத்தின் ஓரத்தில் இருந்தபோது என் வீட்டுக்கு வந்து என் சிறு கதைகளை தொகுப்பாக வெளியிட நண்பர் வீரராகவன் (குமரிப் பதிப்பகம்) சம்மதித்தார்.  அதன்பின், இந்த பதினான்கு வருஷங்களில் என்னுடைய ஐம்பது புத்தகங்களை வெளியிட்ட பின் அவைகளிருந்து பறித்தெடுக்கப்பட்ட இந்த சிறுகதைத் தொகுப்பை அவரே வெளியிடுவது பொருத்தமே. 

இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள்:
1- தனிமை கொண்டு

தனிமை கொண்டு‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் 20-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில் மொத்தம் 60 கதைகள்)

இந்த ‘தனிமை கொண்டு‘ சிறு கதையைத் தான் பின்னர் விரிவாக ‘நைலான் கயிறு’ என்ற நாவலாக–எழுதினார்.

2. நிலம் 
நிலம்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்–முதல் தொகுதியில் 18-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. (இத்தொகுப்பில்–மொத்தம் 50 கதைகள்)
நிலம்’ கதை சுஜாதாவின் சமூகத்தைப் பற்றிய எள்ளல் தொனியுடன் கூடிய விமர்சனம் தான். வசதி படைத்த மனிதர் ஒருவர் ஒரு ஆன்மீகக் கட்டிடம் கட்டுவதற்கு உரிய நிலம் ஒன்றை மாநகராட்சி ஒதுக்கீடு மூலம் பெறுகிறார். ஒதுக்கப்பட்ட நிலம் மிகவும் வசதியாக இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் அந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்காமல் அவருக்கு பேரதிர்ச்சியாக ஒரு அறிவிப்பு வருகிறது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிலம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது. அதை எப்படியேனும் தடுக்க தன் நண்பர் ஒருவரை நாடுகிறார். நண்பர் அந்த நிலம் கிடைக்க செய்யும் பிரம்மப் பிரயத்தனங்கள் தான் மீதிக் கதை.
நிலம்‘ சிறுகதை பற்றி பாரதி மணி கூறுகிறார்….


அவரிடமிருந்து நான் பெற்ற ஒரே பாராட்டுவார்த்தை: பஞ்சபூதங்களைப்பற்றி’நிலம்,நீர், நெருப்பு…‘ வரிசையில் சிறுகதைகள் எழுதினார். அதில்’நிலம்‘ சிறுகதை தில்லியில் ஒரு ஆஸ்திக சமாஜத்துக்கு–DDA–மூலம் அலாட் செய்த நிலம் கந்தா நாலா (கூவம் மாதிரி சாக்கடை) பக்கத்தில் எருமைமாடுகளுக்கிடையே இருக்கும். பூமிபூஜைக்கு நாள் குறித்தபின் Liaison Officer–ஆன கதாநாயகன் படித்த வித்தை பதினெட்டும் செய்து (இதில்–Call Girl-ம் அடக்கம்)–DDAஅதிகாரிகளை மடக்கி மயக்கி,–வேறு நல்ல இடத்தில் நிலம் அலாட் பண்ண வைப்பான். பூமிபூஜையன்று யாரோ மைக்கில்’பகவான் ஸர்வவியாபி! அவருக்கு கிடைத்த இடம் பிடிக்காமல், அவரே மாத்தினுட்டார்.
பகவான்–Omnipresent இல்லியோ’ என்று சொல்வதில் கதை முடியும். பாலு மகேந்திரா எடுத்த’கதை நேர‘ த்தில் இதுவும் ஒன்று. பிறகு சுஜாதாவை சந்தித்தபோது, ‘மணி, இந்தக்கதைக்கு,–You are my inspriration‘ என்று சொன்னார்.–That is the best compliment I got from Sujatha!
3. காற்று 
காற்று‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்–தொகுதியில் 19-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
4. ரேணுகா 
ரேணுகா‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்–தொகுதியில்–25-ஆவது கதையாக–இடம் பிடித்துள்ளது.
ரஞ்சனி‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்–தொகுதியில்–3-ஆவது கதையாக–இடம் பிடித்துள்ளது.

‘ஒரே ஒரு மாலை’சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்–தொகுதியில்–2-ஆவது கதையாகஇடம் பிடித்துள்ளது. 

சுஜாதா கூறுகிறார்… (விமர்சனங்கள் – என் அனுபவம்)

ரொம்ப நாள் முன்னால் என் சிறு கதையான ‘ஒரே ஒரு மாலை‘ ஆனந்த விகடனில் வெளி வந்த போது, மூத்த விமர்சகரான க.நா.சுப்ரமண்யம்–(நமது பாரதி மணியின்–மாமனார்)அந்தக் கதையைக் குறிப்பிட்டு, ‘இந்தக் கதை என்னைப் பிரமிக்க வைத்தது. இந்த எழுத்தாளர் பிற்காலத்தில் பெரிய ஆளாக வருவார்’ என்று எழுதி விட்டார். அதற்கு பல பேர் அவரைக் கோபித்துக் கொண்டிருக்க வேண்டும் — ‘என்ன விமர்சகன் நீ! சுஜாதா கதையைப் போய் நன்றாக இருக்கிறது என்கிறாயா ? மஹா பாவம் அல்லவா ?’ என்று. அதன்பின் க.நா.சு. என்னைப் பற்றி எழுதுவதையே நிறுத்திவிட்டார். டில்லியில் எதாவது கூட்டத்தில் பார்த்தால், அவர் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

இன்றும் பல க.நா.சுக்கள் இருக்கிறார்கள்.

சுஜாதா கூறுகிறார்…. (கற்றதும் பெற்றதும்…)

ஒரே ஒரே மாலை‘ கதையில் ஒரு புதிய உத்தியைக் கடைப்பிடித்தேன். கதையின் சோகமான முடிவை பாதியில் குறுக்கே புகுந்து சொல்லி விட்டு கதையைத் தொடர்ந்தேன். அதனால் அந்தக் கதையின் பிற்பகுதியின் உருக்கம் அதிகமாகியது. இருவரும் செத்துப் போகப் போகிறார்கள். ‘உனக்கு எத்தனை சம்பளம்…? என்ன கலர் பிடிக்கும்?’  என்றெல்லாம் அற்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்களே என்ற ‘ஐயோ பாவம்’ கிடைத்தது.

Click Here Enlarge

க.நா.சுப்பிரமணியம் அவர்கள் இந்தக் கதையைப் படித்துவிட்டு ஒரு விமரிசனக் கட்டுரையில் இதைக் குறிப்பிட்டு ‘இந்தப் பையன் பின்னால் பெரிசாக வருவான்‘ என்று எழுதியிருந்தார். அதன்பின் க.நா.சு. அவர்களைக் கவரும்படியான கதைகளை நான் எழுதவில்லை. நல்ல எழுத்தும் ஜனரஞ்சகமான எழுத்தும் விரோதிகள் என்ற பிடிவாதமான எண்ணம் கொண்டவர்களில் ஒருவர் அவர். மக்களுக்குப் பிடித்தால், அது நல்ல இலக்கியமல்ல என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஓர் எழுத்தாளன் எப்போதும் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு நான்கு நாள் தாடியுடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது எனக்குச் சரிப்பட்டு வரவில்லை.

7. நிபந்தனை  

நிபந்தனை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில்36-ஆவது கதையாக–இடம் பிடித்துள்ளது. 

8. கரை கண்ட ராமன்
கரை கண்ட ராமன்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்தொகுதியில் 34-ஆவது கதையாகஇடம் பிடித்துள்ளது. 
9. முரண்
 
முரண்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்தொகுதியில்16-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
10. வீடு
வீடு‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில்4-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
11. இளநீர்
 
‘இளநீர்’ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 15-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
12. நகரம்    
 
நகரம்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 8-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. 
மிகச் சிறந்த கதையாக தேசிய அங்கீகாரம் பெற்றது, ‘நகரம்’. பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டப்பட்ட கதையும்கூட.

 [sk.JPG]

சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை ‘நகரம்‘. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?”

சுஜாதா: “மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது.”

எஸ். ராமகிருஷ்ணனின் நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்தக் கதையும் (நகரம் -சுஜாதா) உண்டு.

13. பார்வை    

‘பார்வை‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதியில் 9-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது. 

14. காணிக்கை
காணிக்கை‘ சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் தொகுப்பில் முதலாவது கதையாக இடம் பிடித்துள்ளது.(மொத்தம் 34 கதைகள்)
15. ஜன்னல்
ஜன்னல்‘சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்தொகுதியில்37-ஆவது கதையாகஇடம் பிடித்துள்ளது.
 
16. நியாயங்கள் 
நியாயங்கள்‘சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல்தொகுதியில்38-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
17. ஒரு லட்சம் புத்தகங்கள்   
ஒரு லட்சம் புத்தகங்கள்‘ சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதியில் 17-ஆவது கதையாக இடம் பிடித்துள்ளது.
சுஜாதா கூறுகிறார் (கற்றதும் பெற்றதும்…)

விகடனில் நான் எழுதிய ‘ஒரு லட்சம் புத்தகங்கள்‘  கதையை இன்னமும் ஞாபகம் வைத்துக் கொண்டு என்னை வழி மறித்துப் பாராட்டுபவர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்குக் குழாயில் தினமும் நல்ல தண்ணீர் வரவும் கூட்டமில்லாமல் பஸ்கள் கிடைக்கவும் பிரார்த்திக்கிறேன்.

ஒரு லட்சம் புத்தகங்கள்‘ கதைச்சுருக்கம் மட்டும் இங்கே.
அ.ராமசாமி எழுத்துகள்

சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்’ என்ற வரியைத் தனது கதைக்கான அடிக்கருத்தாக சுஜாதா தெரிவு செய்திருந்தார். சுஜாதாவின் கதைப்பின்னணியாக யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட ஆகஸ்ட் கலவரத்தில் அரசின் ஆதரவுடன், அதன் போலீஸ்காரர்களால் நூலகம் சிதைக்கப்பட்டதும், தென்கிழக்கு ஆசியாவிலேயே பெரியதான அந்த நூலகத்தின் ஒரு லட்சம் புத்தகங்கள் எரிக்கப் பட்ட நிகழ்வும் இருந்தது. அதை வாசிக்கும் போது சிங்கள அரசின் தமிழ் விரோதம் பளிச்சென வெளிப்படாமல் போகாது. தமிழ் அடையாளத்தின் ஆன்மாவாக இருக்கும் நூலகத்தை எரிப்பது மூலமாக தமிழர்களின் தனி நாடு கோஷத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என அந்நாட்டு அரசு கருதியதும் அக்கதைக்குள் விவாதிக்கப் பட்டிருந்தது. அக்கதையை முதலில் வாசிப்பவர்களுக்கு சிங்கள அரசின் தமிழ் விரோதமே முதலில் தோன்றும் என்றாலும், சுஜாதாவின் முதன்மையான நோக்கம் அதுவல்ல என்பதை இன்னொரு முறை வாசிக்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

கதை நடக்கும் வெளி ஒரு கருத்தரங்க மாநாட்டுக் கூடம். கருத்தரங்கத்தின் பிற்பகல் அமர்வு தொடங்குவதற்கு முன்பு கதை அந்த அமர்வு நடந்து கொண்டிருக்கும் போது கதை முடிந்து விடுகிறது. கதையில் பெயர் குறிப்பிடப் படாமல் பல பாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை எதுவும் கதைக்கு முக்கியமில்லை. கதையில் பெயர் குறிப்பிட்டு இடம் பெறும் ஆறேழு பாத்திரங்களும் கூட முக்கியமில்லை. முக்கியமான இரண்டு பாத்திரங்கள் டாக்டர் நல்லுசாமியும் செல்வரத்னமும் மட்டும் தான்.

பாரதி பற்றிய சிறப்புக் கருத்தரங்கில் தலைமை தாங்க வந்துள்ள டாக்டர் நல்லுசாமி. அறியப்பட்ட தமிழறிஞர். பாரதியின் கவிதைகளில் தோய்ந்த புலமையாளர். தமிழ் சார்ந்த மாநாடுகளில் கட்டுரைகள் வாசிப்பதற்காகப் பல நாடுகளுக்கும் சென்று வந்தவர். இந்தக் கருத்தரங்கின் முடிவில் சிறப்புரை ஆற்ற வரும் அமைச்சர் அவரது செயல்பாட்டைப் பார்த்து விட்டு அங்கேயே அவரைப் பாரதி பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்க உள்ளதாகச் செய்தி அந்த அரங்கில் பரவி உள்ளது. கருத்தரங்கிற்கு வந்த பலரும் அதனை அறிந்து பாராட்டிக் கொண்டிருக் கிறார்கள். அந்த நேரத்தில் தான் அந்த இளைஞன் செல்வரத்னமும் வருகிறான்.

முதலில் அவருக்கு அவனை அடையாளம் தெரியவில்லை என்ற போதிலும், அவர் இலங்கை வந்த போது தனது வீட்டிற்கு வந்தது; விருந்துண்டது; இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இரண்டாம் தரக்குடிகளாகக் கருதப்படும் நிலை பற்றி உரையாடியது எனப் பழையனவற்றைச் சொன்னபின் நினைவுகள் திரும்பியவராய் அன்புடன் அளவளாவுகிறார். அவனது குடும்பம் பற்றியும்,வீட்டிற்குப் போன போது நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்ற பாரதியின் கவிதையைப் பாடலாகப் பாடிய அவனது தங்கச்சியையும் விசாரிக்கிறார். அங்கே நடந்த கலவரம் பற்றி அறியாமல் இருந்த அவருக்கு யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது; இளைஞர்கள் கொல்லப்பட்டது; இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டது பற்றிச் சொன்ன அவன், அந்தக் கலவரத்தில் அவன் குடும்பத்தில் அவன் மட்டுமே மிச்சமிருப்பதாகவும், அவன் தங்கை நடுவீதியில் துகிலுரியப்பட்டதையும் ஆவேசத்துடன் சொல்கிறான்.

கேட்டவர் பரிதாபப்பட்டு உங்களுக்கு எந்த வகையிலாவது எனது உதவிகள் தேவையா? எனக் கேட்கிறார். அதற்கு எனது சொந்த சோகத்தை விடவும் தமிழ் மக்களின் துயரமே இங்கு சொல்லப்பட வேண்டும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அந்த நிகழ்வுகளைச் சொல்ல விரும்புகிறேன். தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டிருக்கும் பற்று உண்மை யானதல்ல; வெறும் பேச்சளவில் தான் அவர்களது பற்று உள்ளது. உண்மையில் தமிழகத் தமிழர்களின் ஈழப்பற்று என்பது சுயநலம் சார்ந்தது; எதிர்பார்ப்புகளுடன் கூடியது. இதையும் அவன் சொல்லப் போவதாகவும், சொல்லி முடித்தபின் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சொல்லையும் செயலையும் பிரித்து வைத்திருக்கும் விநோதத்தைச் சுட்டிக் காட்டி இந்தக் கருத்தரங்க மலரை தனது பேச்சின் முடிவில் எரிக்கப் போவதாகவும் கூறுகின்றான்.

அவருக்கு அது உவப்பானதாகப் படவில்லை. காரணம் அவரது பேச்சு மட்டுமே அன்று சிறப்பானதாகக் கவனிக்கப்பட வேண்டும் எனக் கருதுகிறார். இடையில் இவன் இப்படிப் பேசி எதையாவது செய்வதால், கருத்தரங்கம் திசை மாறி அமைச்சர் கோபம் கொள்ளக் கூடும். அதனால் தனக்குக் கிடைக்க இருக்கும் துணைவேந்தர் பதவி கூடக் கிடைக்காமல் போகும் வாய்ப்பிருக்கிறது எனக் கருதுகிறார். தனது மென்மையான பேச்சின் வழியாக அதைத் தடுக்கும் விதமாகப் பேசிப் பார்க்கிறார். நடப்பது பாரதிபற்றிய கருத்தரங்கம்; அதனால் அவனைப்பற்றிய கருத்துக்களைப் பேசுவதே சரியாக இருக்கும். இந்த மேடையை உங்கள் ஆவேசத்திற்குரியதாக மாற்றி விட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறார். ஆனால் அவன் பாரதியின் மனிதநேயக் கருத்துக்களை- பிஜித் தீவு மக்களுக்கும், பெல்ஜியத்திற்கும் புதிய ருஷியாவிற்கும் வரவேற்பு சொன்ன சர்வதேசக் கவிஞன். அவன் இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்காகக் கதறவே செய்திருப்பான். ஒரு லட்சம் புத்தகங்கள் எரிந்து விட்டது.நாடற்றவர்களாக நிற்கும் ஆறு லட்சம் மனிதர்கள் எங்கே போவார்கள். எனவே இங்கே சொல்வதே சரியானது என உறுதியாகச் சொல்லி விட்டுச் செல்கிறான்.

டாக்டர் இப்போது அதைத் தடுத்தாக வேண்டும் என நினைக்கிறார். மறைமுகமாக அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி அடைகிறார். அவரது மனைவிக்குத் தொலைபேசியில் பேசி, அவளது அண்ணனை வைத்துப் போலீசுக்குப் பேசி,செல்வரத்னம் அவனது உரையை நிகழ்த்தாதவாறு தடுத்து விடுகிறார். அடுத்த நாள் செய்தித்தாளில் டாக்டர் நல்லசாமியை பாரதி விழாக் கூட்டத்தில் துணைவேந்தராக அறிவித்த செய்தி வந்திருக்கிறது. ஆனால் செல்வரத்னத்தின் விசா ரத்து செய்யப்பட்டு உடனடியாகத் திருப்பி அனுப்பப் பட்ட செய்தி வரவில்லை என்பதாகக் கதையை முடித்துள்ளார்.
அ.ராமசாமி எழுத்துகள்
உயிர்மையில் வெளிவந்த அ.ராமசாமியின் முழுப் பதிவும் இங்கே….

18. யாகம் 
யாகம்‘  சுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பில் 33-ஆவது கதையாக இடம் பெற்றுள்ளது.
சுஜாதாவின் யாகம் பற்றி ஜெயமோகன் கூறுகிறார்…

இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ‘யாகம்‘  ஓர் அறிவியல் கதை அல்ல. ஆனால் நமது சிறந்த சிறுகதைகளுள் ஒன்று. கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் கலாச்சார மீட்பு நவீன யுகத்தில் கொள்ளும் பரிணாமங்களைப்பற்றிய ஆழமான சிந்தனையை உருவாக்கக் கூடிய கச்சிதமான கதை இது.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s