சுஜாதாவின் நகைச்சுவை உணர்வு — என்றென்றும் அன்புடன் பாலா


சுஜாதா அவர்களின் ‘கற்றதும் பெற்றதும்‘ தொடர் கட்டுரைகளைப் படிக்கும்போது, அறிவுபூர்வமான மற்றும் சுவையான பல விஷயங்களை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது.  அவர் இளமையாக சிந்திப்பதனால் தான், அவரது எழுத்தில் நகைச்சுவை உணர்வு என்றும் மிளிர்கிறது!  அவரது கட்டுரையில், பல இடங்களில் இதைப் பார்க்க முடிகிறது. உதாரணங்களாக, சிலவற்றை எடுத்து தந்திருக்கிறேன்.

1. அவர் சென்றிருந்த அனஸ்தீஸியா பற்றிய விளக்கக் கூட்டத்தில், தனக்கு ‘மயக்க மருந்துகளைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் கிடைத்தது’ என்கிறார்! கூறி விட்டு, ‘எப்படி சிலேடை?‘ என வினவுகிறார். நான் என்னவோ இத்தனை காலம், ” பெருங்காயம், பருகாத-தேன், என்-பேனா, மறுப்போர்” வகைப்பட்ட சொற்கள் மட்டுமே சிலேடை என எண்ணியிருந்தேன்!

2. அடுத்து, லேட்டஸ்ட்டாக வந்திருக்கிற PROPOFOL எடுத்துக் கொள்ளும்போது (அறுவை சிகிச்சையின் போது தான்!) நமக்கு ‘அய்யோ மிய்யோ‘ இருக்காதாம்” என்கிறார்!

3. ANAESTHETIST-ஐ ‘மயக்குநர்’ என்கிறார்! அதாவது, ஒரு ஆபரேஷனுக்கு, மருத்துவரும் தேவை, மயக்குநரும் அவசியம்.

4. தான் சென்றிருந்த ஒரு கிறித்துவக் குடமுழுக்கு விழாவை, “பிதா சுதன் பரிசுத்த ஆவியின் துணை புதிய பிறவிக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று ‘ஆஸ்ஸீர்வதிக்கும்’ விழா” என்று கூறுகிறார்! Subtle Humour! 

5. எளிமையான தமிழ்ச் செய்யுட்களுக்குக் கூட அர்த்தம் புரியாதோரை, ‘SMS தமிழர்கள்‘ என்கிறார்!

6. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது,

“உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே !”

என்ற கம்பரின் கடவுள் வாழ்த்துப் பாடலுக்கு அவர் வழங்கும் ‘சென்னைத்தமிழ்‘ பொழிப்புரையான
நாமெல்லாம் பொறக்க சொல்ல படச்சு காப்பாத்தி சாவடிக்கிறார் பாரு தல, அவுரு கால்ல உயு வாத்யாரே” என்பது தான்!!!
Deadly Translation Sir! 

இப்புத்தகத்தை பற்றி
சுஜாதாவுக்கு எப்போதுமே நான் அதிக அவகாசம் தந்ததாக நினைவில்லை. தொடர்கதையோ… ‘ஏன்… எதற்கு… எப்படி?‘ மாதிரியான தொடர்பகுதியோ… எதுவாக இருந்தாலும், ‘இது சுஜாதா செய்தால் சரியாக இருக்கும்’ என்று தோன்றிய நிமிடம், நான் தொலைபேசியில் அவரது எண்ணைச் சுழற்றிவிடுவேன். ஒருமுறைகூட அவர் மறுத்ததில்லை. உடனே கிளம்பி வருவார். ‘அவுட்லைன்‘ ஐடியா சொல்வார். விவாதிப்போம். அத்தனை ஆலோசனைகளையும் திருத்தங்களையும் ஏற்றுக்கொண்டு. அவர் புறப்படும்போதே அறிவிப்பு வெளியிட்டுவிடலாம்.என் பத்திரிகையுலக அனுபவத்தில், எனக்குக் கிடைத்த இனிய நண்பர்களில் முக்கியமானவர் சுஜாதா. அவரது படைப்புகளின் முதல் ரசிகன் என்ற பெருமிதம் எனக்கு எப்போதுமே உண்டு.ப‌ணியிலிருந்து ஓய்வுபெற்ற‌ பிற‌கும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌ ம‌னித‌ர். ராஜீவ்காந்தியுட‌ன் விமான‌த்தில் சுற்றிய‌வ‌ர். ர‌ஜினிகாந்த்துட‌ன் சினிமா பேசிய‌வ‌ர். அப்துல்க‌லாமுட‌ன் ந‌ட்பு பாராட்டுப‌வ‌ர். நாட்டுப்புற‌ப் பாட‌ல்க‌ளைத் தேடுவார். க‌ம்ப்யூட்ட‌ர் க‌ருத்த‌ர‌ங்குக‌ளில் உரையாற்றுவார். ப‌ல‌ தள‌ங்க‌ளில் இய‌ங்கிய‌ப‌டி த‌ன் வாழ்வினையும் த‌மிழ் வாச‌க‌ர்க‌ளையும் சுவார‌ஸ்ய‌ப்ப‌டுத்த‌த் தெரிந்த‌வ‌ர்.’க‌ற்ற‌தும்… பெற்ற‌தும்…‘ _ விக‌ட‌னில் சுஜாதாவின் வெற்றிக‌ர‌மான‌ தொட‌ர்க‌ளில் ஒன்று. அவ‌ருக்கே உரித்தான‌ குறும்புக‌ள், அறிவிய‌ல் தேட‌ல்க‌ள், சாம‌ர்த்திய‌மான‌ ச‌மூக‌ச் சாட‌ல்க‌ள், எதிர்கால‌க் க‌ன‌வுக‌ள், க‌வ‌லைக‌ள், அனுப‌வ‌ப் பாட‌ங்க‌ள் எல்லாமே இந்த‌த் தொட‌ரில் மின்ன‌ல் வேக‌ ந‌டையில் வாச‌க‌ர்க‌ளை வ‌சீக‌ரித்த‌து.

இல‌க்கிய‌ம் முத‌ல் இன்ட‌ர்நெட் வ‌ரை வாராவார‌ம் விக‌ட‌னில் வ‌ந்த‌ அவ‌ர‌து உல‌க‌த்துக்குள், இப்போது ஒரே மூச்சில் உலாப் போக‌ உங்க‌ளை அழைக்கிறேன். ‘இந்த‌த் தொகுப்பு உங்க‌ளுக்கு நிறைய‌வே க‌ற்றுத் த‌ரும்’ என‌ உறுதியாக‌ ந‌ம்புகிறேன்.

இப்புத்தகத்தை பற்றி
காலத்தின் கண்ணாடி என்பார்களே… அதற்கு நல்ல உதாரணம் ‘கற்றதும்… பெற்றதும்…‘!எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும் நேர்த்தியோடும் சுருக்கமான வாக்கிய அழகோடும் எழுத்தாளர் சுஜாதா படைத்த தொடர்கட்டுரைதான் ‘கற்றதும்… பெற்றதும்…‘!மொத்தமாக இந்தக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நிகழ்காலத் தகவல் களஞ்சியமாகவே அவை உருப்பெற்றிருப்பதை உணர முடியும்.’க‌ச‌ப்பு மாத்திரையை இனிப்பு த‌ட‌விக் கொடுப்ப‌துபோல்…’ என்றொரு சொல‌வ‌டை த‌மிழில் உண்டு. ஆனால், சுஜாதாவின் கையாளும் நேர்த்தி கார‌ண‌மாக‌ எவ்வ‌ள‌வு க‌ச‌ப்பான‌, க‌டின‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள்கூட‌ முழுக்க‌ முழுக்க‌ச் சுவைக்க‌த் த‌குந்த‌ இனிப்புப் ப‌ல‌கார‌மாக‌வே மாறிவிடுவ‌து ஒரு அதிச‌ய‌ம்தான்.’க‌ற்ற‌தும்… பெற்ற‌தும்…‘ _ விக‌ட‌னில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி என்ப‌து முத‌ல், இன்றும் அது தொட‌ர்ந்து கொண்டிருப்ப‌து வ‌ரையிலான‌ முழு நீள‌ வ‌ர‌லாற்றை, இதே புத்த‌க‌த்தில் சுஜாதாவின் முன்னுரையில் அறிந்து கொள்ள‌லாம்.

முன்னுரையில் தொட‌ங்குங்க‌ள்… முடியும்வ‌ரை நிறுத்த‌ மாட்டீர்க‌ள்!

 

இப்புத்தகத்தை பற்றி
தமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர்.அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் ‘கற்றதும்… பெற்றதும்…‘ தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது.நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான ‘கற்றதும்… பெற்றதும்…‘ கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில்!

இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும். படித்துப் பாருங்கள்… புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்!

 

இப்புத்தகத்தை பற்றி
ஆனந்த விகடனில் ‘கற்றதும்… பெற்றதும்‘ பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏராளமான வாசகர்கள் வாரந்தோறும் காத்திருந்தன‌ர்.சமூக நிகழ்வுகளின் மீது விமர்சனம் வைத்து கட்டுரைகள் எழுதிய‌ சுஜாதா, இடைவிடாமல் பல புத்தகங்களைப் படித்த‌தோடு, தினந்தோறும் பலரையும் சந்தித்தார். அந்த‌த் தகவல்களைக் கட்டுரையில் தந்த‌போது, அந்த அனுபவ‌ப் பகிர்வு பலருக்கும் அரிய பொக்கிஷமாக இருந்தது. ஆதலால், பிறர் எழுதிய கட்டுரை, கதை, கவிதை, பொன்மொழி, மேற்கோள்கள் போன்றவற்றில் அவருக்குப் பிடித்ததையும் கட்டுரைகளில் குறிப்பிட்டு எழுதினார்.சுஜாதாவின் கருத்தால் பெற்ற அங்கீகாரத்தால் இளம் படைப்பாளர்கள் பலன் பெற்றனர். கற்றதும்… பெற்றதும்… பகுதியில் வெளிவந்த கட்டுரைகள் நான்காம் தொகுப்பு என இந்த நூலாக வெளிவந்திருப்பது, அக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் தரும் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது.

அரசியல்வாதிகளின் செயல்பாடு, பார்த்த சினிமாக்கள், கேட்ட பாடல்கள், படித்த புத்தகங்கள், நடந்த நிகழ்வுகள் போன்றவற்றை விமர்சித்தும், பாராட்டியும் எழுதியது வாசகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், சென்னை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது? கருத்து சுதந்திரம் என்பது என்ன? பொது வாழ்வில் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும்? வன்முறையையும் லஞ்சத்தையும் வெல்லக்கூடிய சக்தி எது? போன்றவை பற்றியும் அலசும் கட்டுரைகள் பல இந்நூலில் உள்ளன.

இப்புத்தகத்தின் இறுதியில் 2006ம் ஆண்டில் தொலைக்காட்சி, சினிமா, இசை, அரசியல், பத்திரிகை, விளம்பரம், இலக்கியம், விளையாட்டு போற்ற துறைகளில் சிறந்தவர்கள் யார் யார்? என்ற ‘சுஜாதா அவார்ட்ஸ்’ பட்டியலும் நகைச்சுவை கலந்து தந்திருப்பது ரசிக்கத்தக்கது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s