காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம்


பெரியவர் எனப் போற்றப்படும் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நினைவைப் போற்றும் வகையில் மிகப் பெரிய நினைவு மண்டபம் ஒன்று காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் எழுப்பப்பட்டுள்ளது.

செங்கல், சிமெண்ட், கம்பி போன்ற நவீனப் பொருட்கள் ஏதுமில்லாது முழுக்க   முழுக்க சில்ப சாஸ்திர அடிப்படையில் உருவான மண்டபம் இது.

தலைமைச் சிற்பி திரு. S.M. கணபதி ஸ்தபதி தலைமையில் 250-க்கும் மேற்பட்ட   சிற்பிகளின் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உழைத்து மணிமண்டபத்தை உருவாக்கியுள்ளனர்.

கருவறை விமானம் 100 அடி உயரத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கால் மகா மண்டபம், பாதுகா மண்டபம், ருத்ராட்ச மண்டபம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.  நுழைவாயிலின்  இருபுறமும் அழகிய யானைகள் வரவேற்கின்றன. மண்டபத்தின் இரு புறத்தையும் காலச்சக்கரம் தாங்குகிறது. அவற்றில் 12 ராசிகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

தூண்களில் உள்ள யாளியின் வாயினுள் உருளும் பந்தை வெளியில் எடுக்க முடியாதபடி அமைந்திருப்பது அற்புதம். கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி, சிவபெருமான் பிரதோஷ தாண்டவம், தட்சிணாமூர்த்தி, ஆதிசங்கரர்,   சங்கரமடம் பீடாதிபதிகள், மகாபெரியவர். மூன்றரை ஏக்கர் பரப்பளவில் 250 அடி நீளம், 100 அடி அகலத்தில் கம்பீரமாக நிற்கிறது மணிமண்டபம். முன்புறம் காணப்படும் நந்தி, தஞ்சாவூர் பெரியகோவில் நந்தியை விட மூன்று அங்குலம் உயரம் அதிகம். ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட இந்நந்தி,  17.5 அடி நீளமும், 7.5 அடி அகலமும், 11 அடி உயரமும் கொண்டது.   தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம், திருபுவனம் கோவில் விமானங்களை விட, இந்த மணிமண்டபத்தின் விமானம் பெரிது என்பது மற்றொரு சிறப்பு.

–நன்றி தென்றல் மாத இதழ் (மார்ச், 2011)

தொடர்புடைய பதிவு:

Must-See Maha Periyava Manimantapam Video


Advertisements

2 thoughts on “காஞ்சிப் பெரியவர் மணிமண்டபம்

 1. Madhurabharati-Chief Editor-Thendral March 1, 2014 at 4:24 AM Reply

  ஓரிக்கையில் மஹா பெரியவருக்கு மணிமண்டபம் கட்டியவர் திரு. S.M. கணபதி ஸ்தபதி. அவர் இன்னும் உயிரோடிருக்கிறார். மேலே கண்ட தகவல் அவரைப்பற்றியது. நீங்கள் வெளியிட்டிருக்கும் படம் திரு. வை. கணபதி ஸ்தபதி அவர்களுடையது. அவர்தான் இறைவனடி சேர்ந்தவர். இவருடைய நேர்காணல் மார்ச், 2009ல் தென்றலில் வெளியானது.

  மதுரபாரதி ::: முதன்மை ஆசிரியர் ::: தென்றல் ::: அமெரிக்கத் தமிழ் மாத இதழ்

  • BaalHanuman March 1, 2014 at 5:00 AM Reply

   அன்புள்ள மதுரபாரதி சார்,

   உங்கள் வருகைக்கும், தகவலுக்கும் நன்றி. இப்போது தவறைச் சரி செய்து விட்டேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s