நிர்வாண நகரம் – சுஜாதா


நிர்வாண நகரம்‘ கதாநாயகன் பெயர் சிவராஜன்.  அவன் சென்னை நகரத்தின் மீது பழி வாங்கத் தீர்மானிக்கிறான்.  எப்படி அதைச் செய்கிறான் என்பதை சுஜாதாவின் இந்த விறுவிறுப்பான நாவல் விவரிக்கிறது.  கணேஷ் – வசந்த் இதன் பிற்பகுதியில் தோன்றி இதைத் தீர்த்து வைக்கும் பகுதிகள் மிகவும் சுவாரஸ்யமானவை. இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும்

சுஜாதாவின் முன்னுரை – சென்னை மார்ச், 2004 :

நிர்வாண நகரம்‘  திரு. சாவி அவர்கள் தினமணி கதிர் பத்திரிகையிலிருந்து வந்து குங்குமம் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்ற போது அந்தப் பத்திரிகையில் எழுதப்பட்டது.  இதன் கதாநாயகனின் பெயர் சிவராஜ்.  எனக்கு பிற்காலத்தில் சில வாசகர் கேள்விகளை எழுப்பியது.  சாவி அவர்கள் ஒவ்வொரு முறை பத்திரிகை தாவும் போதும் அவருக்கு தொடர்கதை எழுதித் தந்திருக்கிறேன்.

நில்லுங்கள் ராஜாவே

தினமணி கதிரில் ஜேகே குங்குமத்தில் நிர்வாண நகரம் சாவியில் நில்லுங்கள் ராஜாவே.

.

கதைச் சுருக்கம்:
சென்னை நகர இளைஞன் ஒருவன் கோபத்தாலும், இயலாமையாலும் சென்னையைப் பழி வாங்க வேண்டுமென நினைக்கிறான். சில கொலைகளைச் செய்யப் போவதாக வரிசையாக காவல்துறைக்குக் கடிதங்கள் எழுதுகிறான்.பெயர் சிவராஜன், திருவல்லிக்கேணி மேன்ஷன் வாசி. ஆனால் தான் கொல்லப் போகிறவர்களின் அடையாளங்களைத் தெளிவாகக் குறிப்பிடுவதில்லை.ஒவ்வொரு கடிதத்திற்குப் பிறகும் குறிப்பிட்டபடி ஒவ்வொருத்தராக கொல்லப் படுகிறார்கள். போலீஸ் இவனைத் தேடுகின்றனர். கணேஷ் வசந்த் இங்கிருந்துதான் வருகிறார்கள். அவர்களும் இவனைத் தேடுகின்றனர். இதற்கிடையில் இவனுக்கு காதலியுடன் கல்யாணம் நிச்சயமாகிறது.கல்யாணத்துக்கு முந்தைய நாள் கணேஷ் வசந்த் இவனைக் கண்டுபிடிக்கின்றனர். அங்கு ஒரு திருப்பத்துடன் கதை முடிகிறது.சிவராஜன் என்ற பெயரால் சில பிரச்சினைகள் வந்ததாக சுஜாதா ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.
இனி இந்த நாவலில் இருந்து சில பகுதிகள்….

====
லிஃப்டுக்காகக் காத்திருக்குபோது அண்டை அலுவலகத்திலிருந்து ஒரு பெண் சேர்ந்து கொண்டாள்.  பனியன் அணிந்து சூயிங் கம் மென்று கொண்டு கையில் பன்ச் கார்ட் அடுக்கு ஒன்று வைத்திருந்தாள்.  அந்தப் பெண் அந்த இடத்தில் சிவராஜே இல்லை போல மேல் பார்வை பார்த்துக் கொண்டே மென்று கொண்டிருக்க சிவராஜ் புதுக் கவிதை செய்தான்.

லிஃப்டில் நுழைந்து
இறங்குகையில்
நானும்
ஒரு பன்ச் கார்ட்
பெண்ணும் தனியே
அவளைக்
‘காதலிப்பதா….
கற்பழிப்பதா’  என்று
யோசிப்பதற்குள்
கீழே
வந்து
வெளியே சென்றுவிட்டாள்.

======
வேலையின்றி,  தைரியமின்றி,  பணமின்றி,  ஒரு பெண்ணைக் காதலிக்க மார்க்கமின்றி,   கோபிக்கத் திராணியின்றி,  அப்பா அம்மா இன்றி,  இந்த நிமிஷம் இறந்து போனால் ஒரு சொட்டுக் கண்ணீர் விட நண்பர்கள் இன்றி….

நான் ஒரு பரிபூர்ண Nonperson .

இந்த நகரம் என்னை முழுமையாக விழுங்குகிறது.  இதன் இரைச்சல் ராட்சத வேகம்.  இதன் அலட்சியம் படித்த, புத்திசாலித்தனமான மற்றோரைவிட பல விதங்களில் உயர்ந்த ஓர் இளைஞனைச் சுத்தமாக சைபராக மாற்றுகிறது….

சிவராஜ் சென்னை நகரத்தைப் பழிவாங்கத் தீர்மானித்து விட்டான்.
========

“உங்க பேரு ?” என்றான் வசந்த்.

“கயல்”

“மொத்தப் பேரே அவ்வளவு தானா ?  இல்லை கண்ணுக்கு மட்டுமா ?”

how sweet ”  என்று சிரித்தாள்.

“நீங்க எந்த காலேஜ் ?”

“எத்திராஜ்.”

“என் சிஸ்டர் கூட எத்திராஜ் தான்!”

கணேஷ்: அவனுக்கு சிஸ்டரே கிடையாது.  நீங்க மேலே சொல்லுங்க.”

கயல் சுதந்திரமாக உட்கார்ந்தாள்.  புத்தகக் குழல் அலமாரியைச் சுழற்றினாள்.  ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தாள்.  “ஹோலி பைபிள்.”

“நீங்க பைபிள் கூடப் படிப்பீங்களா ?”

“அது என்னது ?”  என்றான் வசந்த்.

பிரித்தாள்.  முதல் பக்கத்தில் அழகாக அச்சிட்டிருந்தது.

“இந்த பைபிள் கிறிஸ்டியன் சங்கத்தினரால் இந்த ஹோட்டல் அறையில் வைக்கப்பட்டிருக்கிறது.”

அதன் கீழ் பேனாவில்,

“இந்த பைபிள் ஆர். வசந்த் என்பவரால் அந்த ஹோட்டல் அறையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.”

வசந்த்தைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்ன செய்யறது ?  எனக்குப் புஸ்தகம்னா அவ்வளவு இஷ்டம்.”

===========

“புதுக்கவிதைங்கறது  என்ன ” என்றார் அழகரசன்.

கணேஷ்: “வசந்த்!  புதுக்கவிதை ”

வசந்த்: “ஓ எஸ்.  புதுக்கவிதைங்கறது பாரதியின் வசன கவிதை.  கு.ப.ராவின் சுயேச்சா கவிதை.  இவைகளிலிருந்து புறப்பட்ட நவீன கவிதை இயக்கம்.  மரபுக்கவிதைகளிலிருந்தும் ,  சந்தம், தளை, சீர் இவைகளின் கட்டுப்பாடுகளிலிருந்தும், சொல்லப்படும் விஷயங்களின் சம்பிரதாய அமைப்பிலிருந்தும் விடுபட்டு எதைப் பற்றி வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுத அனுமதிக்கும் ஒரு இயக்கம்.  இது சிவப்புச் சிந்தனைக்கு மிகவும் ஏற்றதாகியிருக்கும் விஷயம்,  முதல் புதுக் கவிதைத் தொகுதி சி.சு. செல்லப்பாவின் புதுக் குரல்கள்….”

“ஓகே. ஓகே. போதும்….”

“சரியான உதவியாளர்யா  உங்களுக்கு.”

வசந்த் கயலைப் பார்த்துச் சிரித்தான்.
============

“காப்பி” என்றாள் வனஜாவின் தங்கை.  அச்சடித்தாற்போல் இரண்டு வருஷம் இளைய வனஜா.  சிவராஜை பயத்துடன் பார்த்தாள்.  “நீ என்ன படிக்கறே ?”  என்றான்.

“மச்சினியை ரொம்ப விசாரிக்க வேண்டாம்”  என்றாள் வனஜா.

============

இருவரும் அறையில் நுழைந்தார்கள்.  அலமாரி யெல்லாம் புத்தகங்கள்.  மேஜை. கவிழ்ந்த டம்ளர்.  மூடிய பானை.  காலண்டரில் ரேகா.

Confucius says man marrying at sixty is like buying book for somebody else to read என்று சுவரில் வாசகம் !

வசந்த டிராயர்களைத் திறந்தான்.  அலமாரிகளை ஆராய்ந்தான். புத்தகங்களை நகர்த்தினான்.  கணேஷ் அடுக்கடுக்காக வைத்திருந்த செய்தித் தாள்களைப் புரட்டு புரட்டென்று புரட்டினான்….

===========

வசந்த் வனஜாவின் தங்கையிடம் “நீங்க என்ன படிக்கறீங்க ?”  என்றான்.

“ஏற்கனவே நான் கேட்டாச்சு,  பதில் வரலை”  என்றான் பாலு.

“உங்களுக்கு பதில் வராது.  உங்களுக்குத் தலைமயிர் போதாது.  என்ன மிஸ் ?”  என்றான் வசந்த்.

“பி.ஏ.” என்றாள் வனஜாவின் தங்கை சிரித்துக் கொண்டே.

“எத்திராஜா ?”

“இல்லை. க்யூ. எம். சி..”

“என் சிஸ்டர் கூட க்யூ. எம். சி. தான்.”

வசந்திற்கு விவஸ்தையே கிடையாது.
=================

Advertisements

4 thoughts on “நிர்வாண நகரம் – சுஜாதா

 1. sathish October 6, 2010 at 1:44 PM Reply

  Dear uppili,

  Thanks lot for posting about sujatha and his novels. I was thinking to buy some of his books thru udumalai.com.But the shipping cost kills me:)- (double than the book cost!!?)

  One thing I always observe in this blog is, whatever you post is quite intresting and new. (like when Saavi was bit upset with Sujatha) I am regular reader of balahanuman everyday.The post on Enthiran was so nice. Its not a review on Enthiran but review on reviews!! I felt bit bad when some one wrote that Sujatha was not recognized well for his effort on Enthiran.

  regards
  sathish

 2. Ravi October 8, 2010 at 5:32 AM Reply

  சுஜாதாவின் one of the top punch வர்ணனையான “சினிமா தியேட்டரில் எனக்கு முன்னால் நிற்பவன் மட்டும் குடம் குடமாய்” இந்த நாவலில் தான் இடம் பெறும்? வேறு எந்த எழுத்தாளர் அதிர்ஷ்டமின்மை பற்றி இவ்வளவு எளிமையாகச் சொல்ல முடியும்?

 3. vidya (@kalkirasikai) January 18, 2012 at 5:30 PM Reply

  கமலின் உன்னைப் போல் ஒருவனில் சுஜாதாவின் நிர்வாண நகரத்தின் சாயல் தெரிகிறதை யாராவது கவனித்தார்களா என்று தெரியவில்லை. (காபி என்று சொல்லவில்லை) அதிலும் க்ளைமாக்ஸில் கமல் மோஹன்லாலிடம் தம்மை அறிமுகம் செய்து கொள்ளும் வசனத்தில் இந்த nonperson என்ற conceptஐத்தான் சொல்கிறார்.(பழைய பதிவை இப்போதுதான் படித்தேன்.)

 4. BaalHanuman January 20, 2012 at 2:56 AM Reply

  அன்புள்ள வித்யா,

  நீங்கள் சொன்னதும்தான் தெரிகிறது. நல்ல observation.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s