சுஜாதாவின் “சிவாஜி” பட அனுபவங்கள்


சுஜாதா பற்றி ஷங்கர் கூறுகிறார்……

https://i0.wp.com/www.hindu.com/mp/2005/04/28/images/2005042800540101.jpghttps://balhanuman.files.wordpress.com/2010/10/shankar.jpg?w=276

நான் கதைகள், புத்தகங்கள் என படிக்க ஆரம்பித்தது சுஜாதாவின் புத்தகங்களிலிருந்துதான். பின்னர் நான் திரைப்படங்களில் பணியாற்றத் துவங்கியபோது, இந்தியன் படத்துக்காக அவரை வசனம் எழுத வைக்க வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் போனோம். அப்போது அவர் குமுதம் ஆசிரியராக இருந்தார்.

பெரிய எழுத்தாளராச்சே என்ற யோசனையுடன் போன எனக்கு அவரது எளிமையும் சுலபமான அணுகுமுறையும் ஆச்சரியம் தந்தது.  விஷயத்தைச் சொன்னதும், ‘ஓ பண்ணலாமே… ஒரு நாளைக்கு கதை சொல்லிடுங்க… வேலையை ஆரம்பிச்சிடலாம்’ என்றார். தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கூட அவர் என்னிடம் கேட்கவில்லை. அது பற்றி கேட்டபோது, ‘உங்க முந்திய படத்து டயலாக் ரைட்டருக்கு என்ன கொடுத்தீங்களோ, அதையே கொடுங்க போதும்’ என்றார்.

என் படங்களுக்கு அவர் எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் சிம்பிளாக இருக்கும்… ஆனால் பெரிய பிரமிப்பைத் தரும்.

அவர் எழுதின எல்லா வசனங்களுமே அற்புதமானவை. சிவாஜி படத்துல ரஜினி சார் அமெரிக்காவுல இருந்து வர்ற காட்சியில, சென்னையின் முன்னேற்றத்தைப் பார்த்து வியப்பார். அப்போ, சிக்னல்ல ஒரு பிச்சைக்காரப் பெண் கார் கதவைத் தட்டும்போது, ‘எல்லாம் வந்துடுச்சி.. ஆனா இது (வறுமை) இன்னும் போகலை’ என்பார்.

எல்லாத்தையும் இழந்த பிறகு, வக்கீலிடம் ரஜினி சார் பேசும், ‘நான் நடக்கப் பழகிக்கறேன் சார்’ என்ற ஒரு வரி வசனத்தில் எல்லாத்தையும் சொல்லிவிடுவார் சுஜாதா சார். பக்கம் பக்கமா பேச வேண்டிய அவசியமில்லாம, பளிச்சின்னு ரெண்டே வரியில, முடிஞ்சா ரெண்டு வார்த்தையில் சொல்லிடணும் என்பது அவர் கற்றுக் கொடுத்த பாடம்தான்.

எதையும் என்கிட்ட சொல்லாதே… எழுத்துல கொண்டாந்துடு..’ என்பார். அதேபோல எழுதுறதுல ரொம்ப சிக்கனமா இருக்கச் சொல்வார். பக்கம் பக்கமா எழுதாதே. ஒரு காட்சிக்கான வசனம் ஒரு பக்கத்துக்குள்ளதான் இருக்கணும். முடிஞ்சா அதையும் குறைக்கணும் என்பார். அதுதான் பவர்புல் என்பதைப் புரிந்து கொண்டேன்.

 • https://i2.wp.com/img.indiaglitz.com/tamil/gallery/Movies/sivaji/sivaji010607_3.jpg
 • சிவாஜி‘ படத்தின் வசனகர்த்தா, எழுத்தாளர் சுஜாதா டைரக்டர் ஷங்கரோடு முன்பே சில படங்களில் பணிபுரிந்தவர் என்பதால் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்திருக்கிறது.  கதையை முடிவு செய்ய தேக்கடி,  ஹைதராபாத்தில் கிட்டத்தட்ட ஒண்ணரை மாதம் இரண்டு பேரும் விவாதித்தார்கள்.  கதையின் ‘லைன் ஆர்டர்‘  முடிவாயிற்று.  அதை மையமாக வைத்து மேலும் மேலும் விவாதித்தபோது கதையின் முழுமையான கருத்துருவாக்கம் கிடைத்துவிட்டது.
 • https://i1.wp.com/nowrunning.com/comingsoon/Sivaji/stills/Sivaji19.jpg

சுஜாதா – ஷங்கர் ஒரு படத்தில் பணியாற்றுகிறார்கள் என்றால் அவர்களது ‘வொர்க்கிங் ஸ்டைல்‘  இப்படித்தான் இருக்கும்.

அதாவது ஒரு காட்சியை ஷங்கர் மனத்தில் உருவாக்கிவிட்டால் அதை அப்படியே ஒரு டேப்பில் விவரித்து ஒலிப்பதிவு செய்து அந்த டேப்பை சுஜாதாவுக்கு அனுப்புவார்.  ரொம்பவும் அவசியமாக ஒரு வசனம் அதில் இடம் பெற விரும்பினால் அந்த ‘கீ டயலாக்‘ கையும் ஷங்கரே அந்த டேப்பில் சொல்லியிருப்பார்.

அந்த டேப்பைப் போட்டுக் கேட்டு ஷங்கர் விவரித்திருக்கும் காட்சியை ஒரு சினிமாவாக மனத்தில் பார்த்து அதற்கான வசனங்களை எழுதி அதை ஷங்கருக்கு அனுப்புவார்.

ஷங்கர் படித்துப் பார்த்து ஏதேனும் யோசனைகள் இருந்தால் அவற்றைக் குறிப்பிட்டு அது மீண்டும் சுஜாதாவுக்கு வரும்.

அந்த யோசனைகளை மனத்தில் கொண்டு சுஜாதா இறுதி வடிவம் கொடுப்பார்.

அதற்குப் பிறகு தொண்ணூத்தைந்து சதவிகிதம் அந்த வசனங்களில் மாற்றமிருக்காது.  அப்படியே படத்தில் இடம் பெறும்.

‘இப்படியே எங்களுக்குள் பழக்கமாகிவிட்டதால் ஷங்கருடன் பணிபுரிவது எனக்குச் சௌகரியமாக இருக்கிறது’  என்பார் சுஜாதா.

 • https://balhanuman.files.wordpress.com/2010/10/9.jpg?w=300
 • சிவாஜி‘ கதை முடிவானதும் ‘ரொம்பவும் பவர்ஃபுல்லாக வந்திருக்கிறது’  என்று ஷங்கர் – சுஜாதா இருவருமே கருதினார்கள்.  கதையின் போக்கில் சூப்பர் ஸ்டாரை எந்த அளவுக்கு அதிகபட்சமாகப் பயன்படுத்த முடியுமோ அப்படிப் பயன் படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.
 • https://i0.wp.com/img.indiaglitz.com/tamil/gallery/Movies/sivaji/sivaji290306_2.jpg
 • சுஜாதா எப்போதுமே சுருக்கமாக எழுதுபவர்.  சிவாஜியில் வசனங்கள்கூட ரொம்ப சுருக்கம்தான்.  ‘படத்தில் ஒரு ‘பாரா’வுக்கு மேல் வசனங்கள் வரும் இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்‘  என்கிறார் சுஜாதா.
 • https://i0.wp.com/im.sify.com/entertainment/movies/images/aug2007/14463573_sivaji004.jpg
 • கடைசியில் வில்லன் மீது ஒரு ரூபாய் நாணயத்தைச சுண்டிவிட்டு ‘இதைக் கூட நீ உன்னுடன் எடுத்துக்கொண்டு போக முடியாது‘  என்று சிவாஜி ஒரு வசனம் பேசுவார்.  அந்த வசன வரிகளை ரஜினி மிகவும் பாராட்டி மகிழ்ந்தார்.
 • படத்துக்கான மொத்த வசனத்தையும் 45 நாள்களில் சுஜாதா எழுதி முடித்து விட்டார்.  படப்பிடிப்பின் போது ‘செட்‘ டுக்குப் போய் அங்கே எழுதுவது, மாற்றித் தருவது இதெல்லாம் ஏதும் இல்லை.  வசனங்கள் தயாரான பின்புதான் படத்தின் படப்பிடிப்பே தொடங்கியது.
 • https://i2.wp.com/mimg.sulekha.com/tamil/sivaji/stills/sivaji200009.jpg
  • நான் ‘செட்‘ பக்கம் போனது அதிகபட்சம் இரண்டு முறை என்று நினைக்கிறேன்’  அது கூட யூனிட்டுக்கு வாழ்த்துச் சொல்வதற்குத்தான்’  என்கிறார் சுஜாதா.
 • https://balhanuman.files.wordpress.com/2010/10/6.jpg?w=300
  • பல இடங்களில் காட்சியின் தன்மைக்காக மெனக்கெட்டிருக்கிறார்கள்.  ஷாக் அடித்தால் எத்தனை நிமிடம் ஒருவன் துடிப்பான் என்பது போன்ற விவரங்களையும், டாக்டர்கள் உள்ளிட்ட பலதுறை நிபுணர்களைக் கலந்தாலோசித்து துல்லியமாகத் தெரிந்துகொண்ட பின்னரே வசனங்கள் கையாளப்பட்டன.  அதேபோல, ‘மணி லாண்டரிங்‘ எனப்படும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் விவகாரங்கள் பற்றி ‘இணையத்தளம்‘  உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விவரம் பெற்றுத்தான் வசனங்கள் எழுதப்பட்டுள்ளன.
 • https://balhanuman.files.wordpress.com/2010/10/2.jpg?w=300
வசனகர்த்தா சுஜாதா பற்றி ரஜினி கூறுகிறார்….

சிவாஜி’  பூஜையன்று சுஜாதா என்னிடம் ‘ரஜினி !  இது இன்னொரு பாட்ஷா.  வேண்டுமானால் டபுள் பாட்ஷா என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நாங்கள் கிளைமாக்ஸ் வரை எல்லாவற்றையும் தயார் செய்து விட்டோம்.  நீங்கள் வந்து நடித்துக் கொடுக்க வேண்டியதுதான்!

அவர் அப்படிச் சொன்னபோது எனக்கு அவ்வளவு நம்பிக்கை ஏற்படவில்லை.

ஆனால்,  படத்தின் இரண்டாவது பகுதியில் நான் மொட்டை பாஸாக வரும் காட்சிகள் படமாக்கப்பட்ட போதுதான் ‘ஆஹா….சுஜாதா ஸார் சொன்னது சரிதான்‘  என்று தோன்றியது.

சிவாஜி : சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை

https://i2.wp.com/www.behindwoods.com/image-gallery-stills/photos-1/sivaji-gallery/images/bw-sivaji-02.jpg
சிவாஜி படம் திட்டமிட  ஆரம்பித்த நாள் தொடங்கி வெள்ளித்திரைக்கு வந்தது வரையிலான விஷயங்களை கிழக்கு பதிப்பகத்துடன் இணைந்து ஏவி.எம் நிறுவனம் ஒரு புத்தகமாகக்  கொண்டு வந்திருக்கிறது.
https://i2.wp.com/behindwoods.com/image-gallery-stills/photos-1/sivaji-mottai/sivaji-01.jpg
சிவாஜி படமாக்கப்பட்ட விஷயங்களை சுவாரசியத்தோடு  விளக்கும் இந்தப்புத்தகத்தின் முக்கியமான ஹைலைட் சூப்பர் ஸ்டாரின் பேட்டிதான்.

சிவாஜி படம் ஆரம்பமானது முதல் வெளியாகி வெற்றி பெறும் வரை எந்தவொரு பத்திரிக்கையிலும் சூப்பர் ஸ்டாரின் பேட்டி வெளியானது இல்லை. முதல் முறையாக சிவாஜியின் வெற்றி குறித்தும் வெற்றிக்கு பின்னணியாக இருந்தவர்கள் குறித்தும் சூப்பர் ஸ்டார் தனது அனுபவங்களை விவரித்துள்ளார்.

சிவாஜியில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்ப உதவியாளர்கள் வரை படத்தோடு சம்பந்தப்பட்டவர்களின் பேட்டி, சூப்பர் ஸ்டார் உடனான அனுபவங்களை புத்தகமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.
புத்தகத்தை எழுதியிருப்பது ராணி மைந்தன். தமிழகத்தின் முன்னணி புத்தக வெளியீட்டு நிறுவனமான கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள சூப்பர் ஸ்டாரின் அலுவலகத்தில் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஏ,வி,எம் சரவணன், எஸ்.பி. முத்துராமன முன்னிலையில் புத்தகத்தின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் வெளியிட கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி பெற்றுக்கொண்டார்.

சூப்பர் ஸ்டாருடன் படத்தின் தயாரிப்பாளர் ஏவி. எம். சரவணன், அவரது மகன் எம்.எஸ். குகன், கிழக்கு பதிப்பக பதிவாளர் பத்ரி சேஷாத்ரி, நூலாசிரியர் ராணி மைந்தன், இணை தயாரிப்பாளர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோர் உள்ளனர்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s