எந்திரன் – ஒரு சிறப்புப் பார்வை


https://i0.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/robo5.jpg
சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் ‘எந்திரன்’. கமலுக்காக எழுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!
https://i0.wp.com/www.envazhi.com/wp-content/uploads/2010/02/mr-d1202-1024x681.jpg

சுஜாதாவின் எந்திரன் வசனங்கள் பற்றி டைரக்டர் ஷங்கர் கூறுகிறார்….

https://balhanuman.files.wordpress.com/2010/10/endhiran-stills-001.jpg?w=300

எந்திரன் படத்தில அவரது வசனங்கள் பல இடங்களில் என்னை வியக்க வைத்தவை. நகைச்சுவையை அவரளவுக்கு வேறு யாராலும் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு அத்தனை சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு இந்தப் படத்துல ஒரு காட்சி…

நீண்ட நாள் கழிச்சு ஹீரோ ரஜினி சார், வீடு திரும்புகிறார், தாடி மீசையோட… கதவைத் திறந்ததும், அவரது அம்மா, அவரது நீளமான முடியையும், தாடியையும் பார்த்து பேசும் வசனம் இது.

‘என்னப்பா, லீவுக்கு வந்த ரிஷி மாதிரி இருக்க? ‘

எனக்கு இந்த சின்ன வசனமும், அதில் இருக்கிற பிரமாண்டமான நகைச்சுவையும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் படம் பார்க்கும்போது இதுபோன்ற நிறைய வசனங்களை உணர முடியும். இப்படி ஒரு படைப்பாளி இப்போது நம்மிடையே இல்லையேன்னு வருத்தப்படுவீங்க.

என் படங்களுக்கு அவர் எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் சிம்பிளாக இருக்கும்… ஆனால் பெரிய பிரமிப்பைத் தரும்.

‘எதையும் என்கிட்ட சொல்லாதே… எழுத்துல கொண்டாந்துடு..’ என்பார். அதேபோல எழுதுறதுல ரொம்ப சிக்கனமா இருக்கச் சொல்வார். பக்கம் பக்கமா எழுதாதே. ஒரு காட்சிக்கான வசனம் ஒரு பக்கத்துக்குள்ளதான் இருக்கணும். முடிஞ்சா அதையும் குறைக்கணும் என்பார். அதுதான் பவர்ஃபுல் என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த படத்தில் ஒரு எலெக்ட்ரானிக் கொசு நடித்திருக்கிறது. அதற்கு எழுத்தாளர் சுஜாதா ரங்குஸ்கி என்று பெயர் வைத்திருக்கிறார். சின்ன வயதில் அவரை அவரது நண்பர்கள் அப்படி அழைப்பார்களாம்.

https://i2.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/robo3.jpg
நண்பர் சரவணகுமரன் கூறுகிறார்….
என் இனிய இயந்திரா’வில் ஆங்காங்கே இருக்கும் பொறிகள், கமர்ஷியல் திரைப்பட வடிவத்திற்கேற்ப மாற்றமடைந்திருக்கிறது. ஐஸ்வர்யா ராயிடம் சிட்டி கேரக்டர் முத்தம் கேட்கும்போதும், ரோபோ பார்ட் பார்ட்டாக பிய்த்தெறியும் போதும் எனக்கு ஜீனோ தான் நினைவுக்கு வந்தது.ஆனந்த விகடனில் ஜீனோ இப்படி கழட்டப்பட்ட அத்தியாயம் வந்த வாரத்திற்கு பிறகு, சுஜாதாவிற்கு நிறைய கடிதங்கள் சோகமாக எழுதப்பட்டதாம். பல வருடங்கள் கழித்து, அதே உணர்வு ரசிகர்களுக்கு இன்று வந்திருக்கும்.
https://i2.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/robo7.jpg
நண்பர் கிரி கூறுகிறார்….
ரோபோவாக வரும் சிட்டி வந்ததில் இருந்து படம் கலகலப்பாக போகிறது. அவர் சிரிக்காமல் பேசும் வசனங்களுக்கு திரையரங்கில் உள்ளவர்கள் சிரிக்காமல் இருக்க முடியாது. குழந்தைகளை இந்த சிட்டி ரோபோ வெகுவாக கவருவார் என்பதில் சந்தேகமில்லை.இந்தப்படத்திற்கு மூலக்காரணமே அமரர் சுஜாதா அவர்கள் தான் ஆனால் பட துவக்கத்தில் அவருக்கு தகுந்த மரியாதை செய்யவில்லை (வழக்கமான வசனம் பகுதி தவிர). நான் கவனித்த வரை ஒன்றுமில்லை ஒருவேளை ரசிகர்கள் கலாட்டாவில் நான் சரியாக கவனிக்கவில்லையா என்று தெரியவில்லை. அப்படி இல்லை என்றால் ஷங்கர் செய்தது மன்னிக்க முடியாதது.
https://i1.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/enthiran19.jpg
இட்லி வடை விமர்சனம்…
படம் முழுக்க ரஜினி வருகிறார் ஆனால் நமக்கு தெரிந்த ஸ்டைல் ரஜினி இல்லை. ரோபோ ரஜினி. ஓபனிங் சீனில் சுவிங்கம் போட்டுக்கொண்டு புழுதி பறக்க அடிக்கும் சீன் கிடையாது.https://i1.wp.com/www.findnearyou.com/moviegallery/Enthiran/Enthiran_4316.jpg
ரஜினியா இது என்று வியக்கும் அளவிற்கு கிட்டார் வைத்துக்கொண்டு அவர் பாடும் பாடல் ஒன்றுக்கே காதல் மன்னன் என்ற பட்டத்தை இவருக்குக் கொடுத்துவிடலாம். இந்த Casual ஸ்டைல் எல்லாம் அவர் எங்கே கற்றுக்கொண்டார்?பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு யாராவது சுத்திப் போட வேண்டும்.  கேமரா ரத்னவேல்; கலை சாபு சிரில் அருமையாக செய்திருக்கிறார்கள்.

https://i2.wp.com/narumugai.com/wp-content/uploads/2010/09/enthiran-images-2.jpg

கடைசியாக ரோபோ ரஜினி தன்னைத் தானே… காட்சி பிரமாதம். சிட்டி எல்லோரையும் கலங்கடிக்கிறார் நடிப்பு வசனம் எல்லாவற்றிலும்.

நண்பர் சரவணகார்த்திகேயன் பெங்களூரிலிருந்து…

படத்தின் பட்ஜெட் விஷுவல்களில் பல்லிளிக்காமல் புன்னகைக்கிறது. உதாரணம் : இரும்பாயுதங்களை ஈர்த்துக் கொண்டு ஓர் அவதாரம் போல் ரோபோ ரஜினி  நிற்கும் அற்புதக் காட்சி. DOT.
https://i1.wp.com/www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/10/endhiran2.jpg
படத்தின் இயக்கம் பற்றித் தனியே கதைக்க வேண்டியதில்லை. பிரித்து மேய்ந்திருக்கிறார் ஷ‌ங்கர். படம் நெடுக பாடல்கள் உட்பட சின்னச் சின்ன அழகான காட்சிகள் பலவற்றில் இன்னமும் இந்தியன் காலத்து ஷ‌ங்கர் பளீரிடுகிறார். எண்டர்டெய்னர் இயக்குநர்களில் இந்தியாவில் ஷ‌ங்கருக்கு இணையாய்க் கூட அல்ல, அவருக்கு அடுத்தது யார் என்று கூட யோசித்துப் பார்க்கக் தயக்க‌மாகத் தான் இருக்கிற‌து. ஷ‌ங்கர் – ஷ‌ங்கர் தான். DOT.

https://i2.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/07/Rajini1-199x300.jpg

அதிலும் கடைசி 30 நிமிடங்களின் மொத்தத் திரைக்கதையையே ஒற்‌றை வார்த்தையாகத் தான் ஷங்கர் எழுதிருக்கக்கூடும் – “ஆக் ஷன்  ப்ளாக்“.

படத்தில் நிறைய நல்ல வசன‌ங்கள் இருக்கின்றன. ஆனாலும் விமர்சகன் மனம் எப்போதும் ஒப்பீட்டிலக்கியம் எழுதவே விரும்புகிறது. அவ்வகையில் சுஜாதா பங்காற்றிய ஷ‌ங்கரின் முந்தைய படங்களான இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன் போன்றவற்றோடு ஒப்பிடும் போது இது சறுக்கல் தான். ஆனால் அதே கூட்டணியின் சிவாஜியின் வசன‌ங்களோடு ஒப்பிடும் போது எந்திரன் நிச்சயம் பெட்டர். DOT.

https://balhanuman.files.wordpress.com/2010/10/enthiran2.jpg?w=300

நா.முத்துக்குமாரின் மிலிட்டரி கவிதையும், Robotic Conference வசன‌ங்களும் (குறிப்பாய்க் கடவுள் பற்றிய வசனம்), “நான் துரோகம் செய்வதை விட‌ நீயே தியாகம் செய்து விடு” என்கிற தொனியிலான சிட்டியின் வசனமும் deserve mentioning. அதே போல் சிட்டியின் Natural Language Processing சார்ந்த‌ Comedy of Errors எல்லாம் rib-tickling வகையறா. DOT.”பாய் ஃப்ரெண்ட், டாய் ஃப்ரெண்ட்” வசனம் ஷ‌ங்கருடையது, சலூன் கடை வசன‌ங்கள், கிராஃபிக்ஸ் கொசு வசனங்கள், ARID டெஸ்ட் வசன‌ங்கள் சுஜாதாவால் எழுதப்பட்டவை,  சிட்டி வெர்ஷன் 2.0 வருவ‌திலிருந்து க்ளைமேக்ஸ் வரையிலான வசன‌ங்கள், ஹனீஃபா ரஜினியிடையேயான வசன‌ங்கள் மதன் கார்க்கியால் எழுதப்பட்டவை என அவரது ட்வீட்கள் மூலம் தெரிகிறது – இந்த DOT வசனம் கூட கார்க்கியுடையதே. DOT.

https://i0.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/7.jpg

பொதுவாய் எல்லா வசன‌ங்களுமே படத்துக்கு ஒரு சுஜாதாத்தனத்தை வழங்க முயற்சிக்கின்றன‌. அவ்வகையில் படத்திலிருக்கும் நல்ல வசனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சுஜாதா நேரடியாக‌ எழுதியவை; மற்றது சுஜாதாவின் மறைமுக‌ பாதிப்பில் (சூட்சம ரூபம்?) மற்ற இருவரும் எழுதிச் சேர்த்தவை. DOT.

https://i1.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/20.jpg

இந்த வயர், உயிர் வசனங்கள் மட்டும் படத்தில் மூன்று இடங்களில் வருகிறது – ஐஸ்வர்யா ராய் கருணாஸ் சந்தானம் சந்திப்பில், புதிய மனிதா பாடலில், அப்புறம் அரிமா அரிமா பாடலில். ஷங்கர் போன்ற ஒரு பெர்ஃபெக்ஷனிஸ்டின் படத்தில் எப்படி இம்மாதிரி repetition போன்ற silly-mistakeஐ அனுமதிக்கிறார்கள் எனப்புரியவில்லை. DOT.

https://i1.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/21.jpg

ஆரம்பத்தில் எழுதப்பட்ட போது சுஜாதாவின் பங்கு திரைக்கதையிலும், வசன‌ங்களிலும் (அவரே முன்பு எழுதிய சிறுகதைகள், நாவல்கள் சார்ந்து கூட) கணிசமான அளவில் இருந்திருக்க வேண்டும். 2008ல் ரஜினி ஹீரோவெனெ முடிவானதும் (பின் கொஞ்ச நாட்களிலேயே சுஜாதா மரணித்து விடுகிறார்) படத்தின் உள்ளடக்கம் சார்ந்து நிகழ்ந்த‌ வளர்சிதை மாற்றங்களினால் (வளர்ச்சியா? சிதைவா? மாற்றமா?) அவர் எழுதிய பகுதிகளில் நிறைய வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதுவே எந்திரன் படத்தில் சுஜாதாவின் பங்க‌ளிப்பு பற்றி உணர்ச்சிவசப்படாத தர்க்க ரீதியான என் அவதானிப்பு. DOT.

https://i2.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/robo8.jpg

அதன் காரணமாகவே தற்போதைய படத்தில் அவரது பெயரை வசனகர்த்தாக்களில் ஒருவராகப் போடுவதோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி, நினைவாஞ்சலிக் குறிப்பாக‌ படத்தின் ஆரம்பத்தில் அவர் பெயரைப் போட்டிருக்க வேண்டும் போன்ற ஆதங்கங்க‌ள் எல்லாம் தேவையற்றவை என்பதே என் நிலைப்பாடு. சுஜாதாவை கிட்டதட்ட தன் தந்தை என்பது போலவே ஷங்கர் பேசி வந்திருக்கிறார். அதனால் அவரது பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டிய நிலையோ, நிர்ப்பந்தமோ ஷங்கருக்கு இல்லை. அதற்கு மேல் இந்த under-quality எழுத்தில் அவர் பெயரை அதிகப்படி associate செய்வது பாவம் என்று கூட விட்டிருக்கலாம். தப்பில்லை என்று தான் தோன்றுகிறது. DOT.

https://i0.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/enthiran15.jpg

எந்திரன் – speed 1THz  Memory 1ZB
எந்திரன் படத்தைப் பொறுத்தவரையில் ரஜினியின் பன்ச் டயலாக்கில் ஒரு குழப்பம் நிலவுகிறது.  சரியானது – “ஸ்பீட் ஒன் டெராஹெர்ட்ஸ், மெமெரி ஒன் ஸிடாபைட்” (அது ஜிகாபைட் அல்ல – ரஜினியின் வசன உச்சரிப்பு அப்படி!). அதாவது இத்தகைய திறன் கொண்ட பிராசசரைத் தயாரிக்க இன்னமும் சில பத்தாண்டுகள் ஆகலாம் (Moore’s Law); அதை அட்வான்ஸாக இப்போதே சயின்டிஸ்ட் வசீகரன் தயாரிக்கிறார் என்பது தான் அவர்கள் உணர்த்த நினைப்பது. DOT.

https://i1.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/enthiran7.jpg

இதைச் சுலபமாகப் புரிந்து கொள்ள என் லேப்டாப்பின் Intel Pentium M பிராசசரை சிட்டியின் Pentium Ultra Core Millennia பிராசசரோடு ஒப்பீடு செய்யலாம். ஸ்பீட் என படத்தில் குறிப்பிடப்படும் Clock Rate என் லேப்டாப்பில் 1.73 GHz; சிட்டியினுடையது 1THz – அதாவது என்னுடையதை விட கிட்டதட்ட‌ 600 மடங்கு அதிகம். அதே போல் மெமரி எனக்குறிப்பிடுவது CPU RAMன் அளவை என நினைக்கிறேன். அது என்னுடையது 2 GB; சிட்டியினுடையது 1 ZB – அதாவது என்னுடையதை விட 50 கோடி மடங்கு அதிகம். DOT.

https://i2.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/37.jpg

சிவாஜியில் அமெரிக்க ரிட்டர்ன் ரஜினி அடிக்கடி COOL என்று சொல்வது போல் எந்திரன் சயின்டிஸ்ட் ரஜினி சில சமயம் வாக்கியங்களின் முடிவில் DOT என்கிறார். சிவாஜியின் போது ரஜினியைப் பின்பற்றி பல ஆர்வக்கோளாறுகள் அடிக்கடி தேவையின்றி COOL என்று பயன்படுத்த ஆரம்பித்தனர் (குறிப்பாய் மென்பொருள் நிறுவனங்களில்). இப்போது DOT என்பதைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் – அதை நினைத்தாலே குமட்டுகிறது. DOT.
160 கோடி ரூபாய் செலவில் ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். ஒரே நாளில் உலக அளவில் 3000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறார்கள். முதல் நாள் வசூல் மட்டும் 200 கோடி ரூபாயைத் தொடுகிறது. படத்தையொட்டிய மொத்தப் பணப்புழக்கம் மட்டும் ரூ. 1600 கோடி இருக்கும் என மதிப்பிட்டிருக்கிறார்கள். இதெல்லாம் சாதித்திருப்பது அல்லது சாதிக்கவிருப்பது ஒரு தமிழ்ப்படம் என்பது இங்கு முக்கியமாகிறது. அப்படி என்ன தான் எடுத்து வைத்திருக்கிறார்கள் என ஒரு நடை போய்ப் பார்த்து விட்டு வாருங்கள். DOT.
ஹரன் பிரசன்னாவின் விமர்சனம்…
https://i2.wp.com/www.tamilpaper.net/paper/wp-content/uploads/2010/10/endhiran3.jpg
அறிவியல் புனைகதை என்னும் அடித்தளத்தை அமைத்துக்கொண்டு, தனது ஆதர்ச சூப்பர் ஹீரோவான ரஜினியை என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதையெல்லாம் செய்து பார்க்க ஆசை கொண்ட ஷங்கர், அதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார். ஒன்றிரண்டு காட்சிகளில் அந்த ஆசை கொஞ்சம் மீறிப்போய், விட்டலாச்சாரியா படங்களுக்கு அருகில் சென்றாலும்கூட, தொழில்நுட்ப வல்லமையைக் கொண்டு அதனைச் சமன் செய்கிறார். பொதுவாக இதைப் போன்ற படங்களையெல்லாம் கமலை வைத்து மட்டுமே பார்த்துப் பழகிப் போன ரஜினி ரசிகர்கள் தங்கள் தலைவர் இப்படி வருவதைப் பார்த்து எந்தக் காட்சியில் கை தட்டவேண்டும் என்பதைக் கூட அறியாமல் மெய்ம்மறந்து பார்க்கிறார்கள்.

https://i2.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/robo1.jpg

ஏற்கெனவே பல நேர்காணல்களில் ரஜினி சொன்னது போல எதிர்பாத்திரம் அவரை அதிகம் ஈர்க்கிறது என்பதை இப்படத்திலும் காணமுடிகிறது. கடைசி 45 நிமிடங்கள் ரஜினி எடுக்கும் விஸ்வரூபம் அசரச் செய்கிறது. ரஜினிக்கு இணையாக அக்காட்சிகளில் தொழில்நுட்பமும் இசையும் கொள்ளும் எழுச்சி, நாம் ஓர் இந்தியப் படத்தை, அதுவும் தமிழ்ப்படத்தைப் பார்க்கிறோமா அல்லது அமெரிக்கத் தரத்திலான ஹாலிவுட் படத்தைப் பார்க்கிறோமா என்னும் சந்தேகத்தை ஏற்படுத்திவிடுகிறது.

https://i0.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/23.jpg

திரைக்கதையின் வேகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருக்கும் ஷங்கர் இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளின் வேகம் பிரமிப்பைத் தருகிறது. நிர்வாணமான பெண்ணை ரோபோ தூக்கி வரும் காட்சி ஒரு எடுத்துக்காட்டு. ரோபோவின் நம்பகத்தன்மை நிமிடத்துக்கு நிமிடம் மாறும் காட்சி அது. அதேபோல் இன்னொரு கவிதையான காட்சி என்றால், ரோபோ கவிதை சொல்லும் காட்சி.

https://i1.wp.com/www.giriblog.com/wp-content/uploads/2010/01/enthiran14.jpg

நம்மை அசர வைக்கும் காட்சிகளும் உண்டு. திரையெங்கும் ரஜினி உருவங்கள் ஆக்கிரமிக்கும் காட்சி, நல்ல ரோபோவாக ரஜினி விகல்பமில்லாமல் நடிக்கும் காட்சிகள் போன்றவை. அதிலும் மறக்கமுடியாத ஓரிடம், ரஜினியின் உடலைச் சுற்றி அம்மன் போல வேல் கத்தி சூலம் போன்றவை நிற்கும் காட்சி. ஷங்கரின் கற்பனை உச்சத்தைத் தொட்ட இடம் இது.

பெரிய மாஸ் ஓப்பனிங் இல்லாமல், ஓப்பனிங் பாடல் இல்லாமல், பஞ்ச் டயலாகுகள் இல்லாமல் இந்நாட்களில் ஒரு ரஜினி படம் வரமுடியும் என நிரூபித்திருக்கிறது இப்படம். வில்லனை எதிர்த்து சண்டை போடாமல் ரஜினி ஓடும் காட்சியும் கூட இதே ரகம்தான். எல்லாவற்றையும் ரஜினி ரசிகர்களுக்காக வட்டியும் முதலுமாகச் செய்து தீர்க்கிறார் ரோபோ ரஜினி.

https://balhanuman.files.wordpress.com/2010/10/rajini27srobomoviestills03.jpg?w=300

ரோபோ கெட்டவனாக மாறும்போது, மாறும் ரஜினியின் நிறமும் அவரது உடல்மொழியும் மிரட்டுகின்றன. ரஜினியை சூப்பர் மேனாகப் பார்க்கும் சிறுவர்கள் இந்தப் படத்தை தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்காமல் வைத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

அங்கங்கே தனித்துத் தெரியும் பளிச் வசனங்கள் சுஜாதாவை நினைவூட்டுகின்றன. ரோபோஸெப்பியன்ஸ், நக்கல்-நிக்கல் போன்றவை சில உதாரணங்கள். ரோபோவை அறிமுகப்படுத்தும் காட்சியில் சட்டென ஒரு ராகத்தைப் பாடும் ஒரு முதியவரும், கடவுள் இருக்காரா இல்லையா என ஒலிக்கும் குரலும் சந்தேகமேயின்றி சுஜாதாவேதான்.  ஏ.ஆர். ரகுமானின் இசையும், ரத்னவேலுவின் ஒளிப்பதிவும், ஓர் உலகத்தரமுள்ள திரைப்படத்துக்கு எப்படி ஒத்துழைக்கவேண்டுமோ அப்படி அமைந்திருக்கின்றன.

மொத்தத்தில் எந்திரன் – தி மாஸ்.

தமிழ் ஹிந்து விமர்சனம்…

https://i0.wp.com/www.envazhi.com/wp-content/uploads/2010/07/endhiran-01-1024x741.jpg
மனிதனைப் போன்றே ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகிறார் வசீகரன் எனப்படும் ரஜினி, பொறாமையின் காரணமாக இதைப்போன்ற ரோபோக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவின் தலைவரும், ரஜினியின் குருவுமானவர் அதை நிராகரித்துவிட இயந்திர மனிதனுக்கு உணர்வையும் அளிக்கிறார் ரஜினி. ஆனால் அது ரஜினியின் வாழ்க்கையிலேயே விளையாட ( ரஜினியின் காதலியையே காதலிக்க) அதை அழித்து விடுகிறார் ரஜினி. அதை வில்லன் கைப்பற்றி அதற்கு வன்முறைக்குணங்களை ஞாபகத்திரையில் ஏற்றி அதை தீவிரவாதிகளுக்கு விற்க முயல்கிறார். ஆனால் உணர்வுகள் கொண்ட அந்த ரோபோ, அதைப்போன்றே சிலநூறு ரோபோக்களை உருவாக்கிக் கொண்டு , அதை தனது உருவாக்கிய வில்லனையே அழித்துவிட்டு சானா என்ற ஐஸ்வர்யாவை திருமணம் செய்ய அலைகிறது. அந்த ரோபோவையும், அது உருவாக்கிய சிலநூறு ரோபோக்களையும் எப்படி ரஜினி மீண்டும் அழித்து ஐஸ்வர்யாவைக் கைப்பிடிக்கிறார் என்பதே ரோபோ.
https://i2.wp.com/www.envazhi.com/wp-content/uploads/2010/10/robowall09.jpg
படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ரஜினி மிக அழகாகத் தெரிகிறார். பழைய ரஜினியே மீண்டு வந்ததைப் போல. படத்தில் அவரது ட்ரேட்மார்க் எண்ட்ரி இல்லாதது ஒரு குறையே. வசீகரன் ரஜினியை விட ரோபோ ரஜினிதான் படத்தில் கலக்குகிறார். இயந்திர ரோபோ குழுவில் வசீகரன் ரஜினி அவர்களைப்போலவே உள்நுழைந்ததைக் கண்டுபிடிக்கும் சிட்டி ரோபோ செய்யும் வில்லத்தனமான செயல்கள் கலக்கல் காமெடி. மிக நன்றாய்ச் செய்திருக்கிறார் ரஜினி. வில்லன் ரஜினியிடம் பழைய ரஜினி எட்டிப் பார்க்கிறார்.
https://i1.wp.com/www.envazhi.com/wp-content/uploads/2010/09/Robot-Movie-Stills-0009.jpg
பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள விதம் அருமை. ரஜினியின் உடைகளும், ஸ்டைலும் கலக்கல்.கிளிமாஞ்சாரோ பாடலும், காதல் அணுக்கள், ரோபோடா பாடலும் குறிப்பிட்டுச் சொல்லும்படி அருமை. நடனத்திற்கு மிகவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. ரஜினி வழக்கமாக ஆடும் எக்ஸெர்சைஸ் எல்லாம் இல்லாமல் நிஜமாகவே கலக்கலாக டான்ஸ் ஆடுகிறார்.

இசையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும். மிக நன்றாய் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பின்னணி இசையும் அருமை.தெளிவான ஒளிப்பதிவு.

படம் முழுக்க ரிச் ஆகத் தெரிய மெனக்கெட்டது வீண்போகவில்லை. எல்லா இடத்திலும் பிரம்மாண்டம். பிரம்மாண்டம் மட்டுமே.சாதாரணமான  இடம் இப்படத்தில் வருவது பெருங்குடி குப்பைமேடு மட்டுமே. படம் முழுக்க அல்ட்ரா மாடர்னாகவே இருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் கூறுகிறார்….
[RamBW2-1.jpg]
ஷாருக், கமல், ஐங்கரன், சன் பிக்சர்ஸ், கிளிமஞ்சாரோ, 150 கோடி, தீபாவளி ரிலீஸ் தான், இல்லை இல்லை அதற்கும் முன்பே என்று மீடியாவில் ஏதாவது எல்லோருக்கும் தினந்தோறும் தீனி போட்டுக் கொண்டிருந்த ‘எந்திரன்‘ வந்தே விட்டது!

இரண்டு மூன்று நாட்களாக, வழக்கமான கட்அவுட் பாலாபிஷேக கோலாகலங்கள் தமிழ்நாடெங்கும் நன்றாகவே நடைபெற்று முடிந்ததாகப் பத்திரிகைகள் சொல்கின்றன. ‘எல்லே’யில் வழக்கமாகப் படத்தை ஓட்டும் நபர்கள் கிட்டக்கூட நெருங்க முடியாத அளவுக்குப் படத்தின் வெளிநாட்டு விநியோக விலை ஏற்றப்பட்டதாகவும், அதைச் சரிகட்டும் முயற்சியாகவே டிக்கெட் விலைகளும் ஏற்றப்பட்டதாகவும் சால்ஜாப்பு சொன்னார்கள். நியூயார்க்கில் $50, லாஸ் ஏஞ்சல்சில் $30 என்று டிக்கெட் விலைகள் எக்குத்தப்பாய் இருந்தாலும், எந்திரன் பார்க்காமல் என்னால் இருந்துவிட முடியுமா?

Enthiran1

ஞாயிறு இரவு ஷோ என்பதாலா அல்லது மேற்சொன்ன டிக்கெட் விலை காரணமா, தெரியவில்லை: தியேட்டரில் 30 பேர் கூடத் தேறவில்லை. மற்ற தியேட்டர்களிலும் கூட்டம் குறைவென்றே சொன்னார்கள்.

”நீர் பட்டர் பாப்கார்ன் சாப்பிட்டது, பாத்ரூம் போனது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், படம் எப்படி?” என்கிறீர்களா?

வருகிறேன், வருகிறேன். அங்கேதானே வந்து கொண்டிருக்கிறேன்!

ஹிந்திக்காரர் ஒருவர் கௌண்டரில் “ஹிந்தி வர்ஷன் பார்க்கத்தானே நான் வந்தேன், அது எப்படி தமிழ் ப்ரிண்ட் ஆனது? சப் டைடில் உண்டா? ஆர் யூ ஷ்யூர்? அது என்ன மொழியில்?, ஏன் எல்லாமே ஆனை விலை, குதிரை விலை? இதெல்லாம் ரஜினிக்குத் தெரியுமா? யஹான் க்யா ஹோ ரஹா ஹை?” என்று அனத்தோ அனத்தென்று அனத்தி, சத்தம் போட்டு, வெள்ளைக்கார கௌண்டர் கிளார்க்கிடம் மயிர்பிடி சண்டை + அவர் மனைவி தலையில் அடித்துக்கொண்ட கலர்ஃபுல் ட்ரெய்லர் பார்த்தபோதே எனக்கு சந்தோஷம் பீறிட்டுக்கொள்ள ஆரம்பித்தது.

எல்லா ஜனங்களும் ‘ஹா’வென்று இந்த ஃப்ரீ ஷோவைப் பார்த்திருக்கையில், “உமக்கு வேண்டாமென்றால் அந்த டிக்கெட்களை என்னிடம் கொடும்” என்று என் மனைவி அந்த அனத்தருக்கு முன்னால் பாய்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, மிஸஸ். தலையடியுடன் அவர் ஹிந்தியில் தொடர்ந்து திட்டியபடியே உள்ளே நுழைந்தார்.

ரிஷி தாடியுடன் ரஜினி ரோபோவை ரிப்பேர் செய்வதாக பாவ்லா, சந்தானம், கருணாசின் சப்பை காமெடி என்று படம் ஆரம்பத்தில் நத்தையாய் நெளிந்தாலும், ஐஸ் வந்தவுடன் திடீரென்று ஒரு ஜிலீர் சுறுசுறுப்பு பெற்று அதிர ஆரம்பித்தது.

அப்போது ஆரம்பித்த வேகம் தான், கடைசி வரையில் அந்த வேகம் குறையவே இல்லை. போலீஸ் மீட்டிங்கள், கோர்ட் காட்சிகள் என்று தமிழ் சினிமாவின் அரதப்பழசு இழுவை காட்சிகளைக்கூட ஸ்பீட் ராம்பிங், ஃப்ரேம்ஸ் அட்ஜஸ்ட்மெண்ட் மூலம் வேகமோ வேகப்படுத்தி இருப்பதே ஒரு விஷுவல் ஸ்டைல். ரத்னவேலுவுக்கு ஒரு சபாஷ்!

இது முழுக்க முழுக்க ரஜினி படம், ரஜினியின் ஸ்டைலே வேகம், எனவே எல்லாமே படு ஃபாஸ்ட் என்று முதலிலேயே இயக்குனர் ஷங்கர் புத்திசாலித்தனமான முடிவெடுத்திருக்கிறார். எடிட்டிங்கிலும் அதுவே தாரக மந்திரம்.

சுஜாதா அடிக்கடி சொல்லுவார்: “திரைக்கதையை What if? என்று ஒரே வரியில் சுருக்கிச் சொல்லமுடியுமானால் அது வெற்றி பெற சாத்தியம் அதிகம்” என்று.

எந்திரனில் What If: ஒரு ரோபோவுக்கு மனித உணர்ச்சிகளை உண்டாக்க முடிந்தால் என்ன நடக்கும் என்பதே. அப்பாவி சமர்த்து மெஷின் அசகாயசூரன் ஆகிறது, அடிதடி சாம்பியன் ஆகிறது. “நானே நினைச்சாலும் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணமுடியாது” ரேஞ்சுக்கு ஆட்டம் போடுகிறது.

அழுத்தமான களம் அமைந்துவிட்டதால் CGI, VFX என்று சீனுக்கு சீன் அட்டகாசம் செய்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை ஏதோ ஒரு ஊறுகாய் மாதிரி ஓரமாகக் காட்டாமல், படம் முழுக்கவே காட்டி இருப்பதில் படம் நிறைவாக இருக்கிறது. “அதெப்படி இந்தப் பொண்ணு மட்டும் இன்னும் அப்படியே இருபது வருஷமா இளமையாவே இருக்குது?” என்று பெண் ரசிகைகளின் காதிலெல்லாம் பொறாமைப் புகை!

க்ளைமேக்ஸ் காட்சிகள் சற்றே அதிகமென்று நினைத்தாலும், அந்த விருவிருப்பு, அவசரம், தடாலடி, நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது.

ரஹ்மானின் இசையில் இன்னும் எதிர்பார்த்து ஏமாந்தேன். சண்டைக்காட்சிகளில் பின்னணி இசையில் கிளிமாஞ்சாரோ, கிளிமாஞ்சாரோ என்றெல்லாம் கத்தி இப்படி ஒரு கற்பனை வரட்சியைக் காட்டவேண்டுமா?

படம் முழுக்கவே திகட்டத்திகட்ட ரஜினியும் ஐசும் தான்! வேறென்ன வேண்டும் ரஜினி ரசிகர்களுக்கு? அக்டோபரிலேயே தீபாவளி!

பல வட இந்திய, மற்றும் தமிழ் பத்திரிகைகளில் எந்திரனுக்கு 5 க்கு 3 அல்லது 3.5 என்று மார்க் போட்டிருந்தார்கள். ஏன் இந்த கஞ்சத்தனம்?

படம் சூப்பர், பாஸ்! 90 சதவீதத்துக்கும் மேலே!

Lazygeek என்றால் இணையத்தில் உள்ளோர் சட்டென்று அடையாளம் காணக்கூடிய குரு சுப்பிரமணியம் என்கிற சுப்புடு கூறுகிறார்….

கதையில் ஆங்காங்குதான் சுஜாதா தெரிகிறார் என்று எழுதியவர்களுக்கு – எனக்குத் தெரிந்து படம் முழுக்க வியாபித்திருக்கிறார். தலை நிறைய சடாமுடியுடன் முடிவெட்ட வரும் ரஜினியிடம், “என்ன சார் ஐயப்பாவா?” என்று கேட்கும் நாவிதனிடம், “வேலைப்பா” என்பதும், ராகம் திருத்தும் ரோபோவும், கொசு ரங்குஸ்கியிலும், “என்னங்க இது போரிட வாங்கன்னா பொயட்டரி சொல்லுது இந்த ரோபோ” என்று சொல்லும் ஆர்மி ஆஃபிஸர் வரை சுஜாதாலஜி.

விகடன் விமர்சனம்

ரும்புக்குள் ஒரு இதயம் முளைத்து, ‘எந்திரன்’… தந்திரன் ஆனால், என்ன நடக்கும்?

அச்சுப்பிச்சுப் பாடல்கள், பில்ட்-அப் பிஸ்கோத்து, டூமாங்கோலி டபுள் ஆக்ட்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த கிராஃபிக்ஸ் கலையை, கச்சிதமாக ஒரு திரைக்கதைக்குள் பூட்டி, ரஜினி எனும் மாஸ்க் மாட்டி மாஸ் மார்க்கெட்டுக்கு விருந்துவைத்து இருக்கிறார் ஷங்கர்!சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் பிரமாண்டமான முதல் தயாரிப்பு.அனைத்துக்கும் முன்… தொழில்நுட்ப நேர்த்தியில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை சர்வதேசத் தளத்துக்குள் அழைத்துச் சென்று இருக்கும் இயக்குநர் ஷங்கர் குழுவினரின் அசுர உழைப்புக்கு ஒரு ‘ரோபோ ஹேண்ட் ஷேக்’!

ஒரே ஒரு எஸ்.எம்.எஸ். வரிக் கதை! விஞ்ஞானி ரஜினி உருவாக்கும் ‘சிட்டி’ ரோபோவுக்கு, ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராய் மீது காதல் அரும்புகிறது. இயந்திர-மனித வித்தியாசங்களைக் கடந்து ஐஸ்வர்யாவை அடைய, எந்த எல்லை வரை அந்த ரோபோ செல்கிறது என்பதே எந்திரன் படத்துக்கான புரொகிராம்!

ரஜினியே ஒரு சூப்பர் ஹீரோ. அதிலும், ‘ஸ்பீட் ஒன் டெரா பைட்ஸ், மெமரி ஒன் ஜெட்டா பைட்ஸ்’ சக்திகொண்ட ரோபோவாக ரஜினி நடிக்கும்போது, திரையில் எப்படி எல்லாம் பட்டாசு வெடிக்கும்? படபடா தடதடா!

கோயில் திருவிழாவில் ரவுடிகளை மிரட்ட ‘மேக்னடிக் மோட்‘ ஆக்டிவேட் செய்து ‘ஆயுத அய்யனார்‘ அவதாரம் எடுப்பது, டிரெயின் தகராறில் வூடு கட்டி அடிப்பது, ஒரே பாடலில் விதவிதமான நடனங்கள் ஆடி அசத்துவது, ‘பின்னாடி பார்த்து ஓட்டு‘ என்றதும், சடாரெனக் கழுத்துக்கு மேல் தலையைப் பின்புறம் திருப்பி கார் ஓட்டுவது, ஐஸ்வர்யா பிறந்த நாளுக்கு ஸ்டைல் ஹேர்ஸ்டைல்ஸ் பொருத்தி அழகு பார்ப்பது, ‘அவள் இடுப்பு… குழந்தைகள் உட்காரும் குட்டி நாற்காலி‘ என்று மிலிட்டரி அதிகாரிகள் முன்னிலையில் கையெறி குண்டுக்குள் ரோஜா காம்பு சொருகிக் காதலில் உருகுவது… என ரோபோ ரஜினியின் கையே படம் முழுக்க ஓங்கி இருக்கிறது.

ஓப்பனிங் பாடல், இன்ட்ரோ பில்ட் – அப்ஸ், பஞ்ச் டயலாக், பறந்து பறந்து அடிப்பது, காலைச் சுற்றும் காதலி என எதுவும் இல்லாமல் ரஜினியின் இமேஜையே புரட்டிப் போட்டு இருக்கும் படம். சொல்லப்போனால், விஞ்ஞானி ரஜினி, உதை வாங்கிக்கொண்டு அமைதியாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராயிடம் வம்பு பண்ணும் காட்டானை பெண்டு நிமிர்த்துவதற்குப் பதிலாக, பதறிப்போய் போலீஸைக் கூப்பிட போனை எடுக்கிறார். ரஜினி, தன் ரசிகர்களை மட்டுமே திருப்திப்படுத்துகிற வழக்கமான ஃபார்முலாக்களைத் தாண்டி, இறங்கி வந்து உழைத்து இருக்கிறார். ‘என்னை அழிச்சுராதீங்க டாக்டர்… நான் வாழணும்‘ என்று கை, கால்கள் பிய்ந்து தொங்கிய நிலையில், தரையில் பின்னோக்கித் தவழ்ந்தபடி ரோபோ ரஜினி கெஞ்சுவதுபோன்ற காட்சிகள் இயக்குநருக்கு முழுசாக அவர் கொடுத்து இருக்கும் ஸ்பெஷல் ஸ்பேஸ்!

கொச கொச‘ தாடி விஞ்ஞானி, ‘பளபளா‘ நிக்கல் சிட்டி, ‘மின்னல்‘ கிருதா வில்லன் என மூன்று கெட்-அப்களையும் வித்தியாசப்படுத்தி வெளுத்துக் கட்டுகிறார் ரஜினி. அதிலும் சிட்டி… செம ஸ்வீட்டி. ஆனாலும், அதகளம் பண்ணி, அடித்து நொறுக்குவது நிக்கல் மீது தோல் போர்த்திய இயந்திரம் என்பதும், அதை அடக்குவதற்குப் படாத பாடுபடுவதுதான் ஒரிஜினல் ரஜினி என்பதும் விசில் பார்ட்டி ரசிகர்களின் உற்சாகத்துக்குக் கொஞ்சம் மைனஸ் போடுகிறது!

எந்திரன் கும்பலுக்குள் ஊடுருவிவிட்ட விஞ்ஞானி ரஜினியை ‘ஹூ இஸ் த ப்ளாக் ஷீப்?‘ என்று கண்டுபிடிக்கத் தேடும்போது, ‘ரோபோவ்வ்வ்‘ என்று பழிப்புக் காட்டுவதும், ‘ம்ம்ம்ம்மே‘ என்று ஆடு கணக்காக ராகம் போடுவதுமாக… அபூர்வமாக வெளிப்படும் ரஜினி ஸ்டைல்கள்!

ஓர் இயந்திரத்துக்கே காதல் பூக்கவைக்கும் அழகி கேரக்டரில் ஐஸ்வர்யா… அழகு. பாடல் காட்சிகளில் பல ஃப்ரேம்களில் ரஜினி பக்கம் பார்வையே செல்லவிடாதபடி அதிர்ந்து இழுக்கின்றன ஐஸ்வர்யாவின் அசைவுகள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பாடல்களுக்கு எலெக்ட்ரானிக் துடிப்பையும் பின்னணிக்குப் பதற்றப் பரபரப்பையும் நிரப்புகிறது. ‘புதிய மனிதா பூமிக்கு வா‘, ‘அரிமா அரிமா ஆயிரம் அரிமா‘ என வைரமுத்துவின் கம்பீரத் தமிழ், ‘பூம்… பூம் ரோபோடா‘ எனும் கார்க்கியின் தொழில்நுட்பத் தமிழ், ‘கிளிமாஞ்சாரோ‘ எனும் பா.விஜய்யின் கன்னித் தமிழ் என அத்தனையும் அபார சொல் விளையாட்டுகள். ரோபோவின் பார்வையில் பயணிக்கும் ரத்னவேலுவின் கேமரா கோணங்களும், அதோடு பின்னிப் பிணையும் கிராஃபிக்ஸ் மிரட்டல்களும் தமிழுக்குப் புதுசு. ரோபோவின் நட்டு, போல்ட் துவங்கி அதிநவீன ஆராய்ச்சிக் கூடங்கள் வரை படத்துக்கு பிரமாண்டம் சேர்த்ததில் சாபு சிரிலின் கலை இயக்கத்துக்கு அபார பங்கு உண்டு. ‘மனுஷன் படைச்சதுலேயே உருப்படியான ரெண்டே விஷயம், ஒண்ணு… நான். இன்னொண்ணு… நீ!‘, ‘இது இயற்கைக்கு எதிரானது இல்லை; இது இயற்கைக்குப் புதுசு‘, ‘எல்லா மனுஷங்களுக்கு உள்ளேயும் ஒரு ரெட் சிப் இருக்கு. அதை எடுத்துட்டா எந்தப் பிரச்னையும் இல்லை‘ என்று ஓரிரு வரிகளில் கடக்கும் வசனங்கள் ‘வாரே வாவ்‘ ரகம். ‘சுஜாதா, ஷங்கர், மதன் கார்க்கி‘க்குச் சேர்கிறது பெருமை.

முதல் பாதி முழுக்க பரபரவெனக் கதை நகரும் விறுவிறுப்புக்கு, நேர் எதிர் பின் பாதி! அதிலும் பல நூறு வில்லன் ரோபோக்கள் விதவிதமாக உருவம் மாற்றி ‘அசுரன்‘ வடிவில் ஓடி வரும் காட்சிகள் ஒட்டுமொத்த எந்திரமயமாக இருப்பதால்… ஆவ்வ்வ்வ்வ் அயர்ச்சி! கொசுவோடு ரஜினி பேசுவது காமெடியா? ஸாரி! சந்தானம், கருணாஸுக்கும் காமெடியில் தோல்வியே! கோடரியால் வெட்டினாலே கை பிளந்துகொள்கிற ரோபோவுக்கு, லாரிகளை இழுத்து வளைப்பதற்கும், காரைத் தூக்குவதற்கும் எங்கே இருந்து அந்தப் பலம் வந்தது என்பதற்கு சுஜாதா இருந்தால், லைட்டாக விஞ்ஞான விளக்கம் தொட்டுக் கொடுத்திருப்பாரோ?!

தனது கை, கால்களைக் கழற்றிக்கொண்டே சிட்டி ‘பை பை உரை‘ நிகழ்த்தும் அந்த இறுதிக் காட்சிதான் சென்ட்டிமென்ட்டுக்கும் டெக்னாலஜிக்குமான பக்கா பார்ட்னர்ஷிப். ஒவ்வொரு வசனமும் மனதை நெகிழ்த்த, துளியும் அசங்காத அனிமேட்ரானிக்ஸ் கிராஃபிக்ஸ் புருவத்தை உயர்த்துகிறது.

படம் முழுக்கத் தெரியும் பிரமாண்டத்தில், நம்மையும் பாத்திரங்களோடு ஒருவராக்கி, மனசைத் தொட்டுப் பார்க்கிற சென்டிமென்ட் கதை இல்லை எந்திரன். இது எட்ட நின்று வியக்கவைக்கிற ஹாலிவுட் பாணி மந்திரன்!

 • எண்ணிக்கையில் ரஜினியின் 154-வது படம், ஷங்கரின் இயக்கத்தில் 10-வது படம், ஐஸ்வர்யா ராயின் 5-வது தமிழ் படம். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் முதல் படம்..
 • இந்தியன்’ பட வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், ப்ரீத்தி ஜிந்தாவை வைத்து ‘ரோபோ’ என்ற பெயரில் படம் எடுக்க ஆரம்பித்தார் ஷங்கர். சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர், ‘ரோபோ’வை ஷாருக்கான் நடித்து தயாரிக்கப் போவதாக செய்திகள் வெளிவரத் தொடங்கின. 2007ம் ஆண்டு ஷாருக்கானும் ஷங்கரும் தாங்கள் இப்படத்தை கை விட்டுவிட்டதாக அறிவித்தனர். தனக்கு இந்தக் கதை பொருத்தமாக இருக்காது என்பது ஷாருக்கானின் எண்ணம்.
 • ரஜினி – ஷங்கர் இணைந்த ‘சிவாஜி’ படத்தின் வெற்றியை அடுத்து, தனது ‘ரோபோ’வில் ரஜினி நடிக்கிறார் என்று 2008-ம் ஆண்டு அறிவித்தார் ஷங்கர். ‘ரோபோ’ கதை ரஜினிக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டு, இப்போது எந்திரனாக வருகிறது.
 • எந்திரனை முதலில் ஐங்கரன், EROS நிறுவனங்கள் கூட்டாக தயாரித்தன. ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, EROS அப்போது வாங்கி விநியோகம் செய்த படங்களும், ஐங்கரன் தயாரித்த படங்களும் தொடர் தோல்வியடைய, எந்திரன் படத் தயாரிப்பில் சிக்கல் வந்தது. பின்னர், இந்த இரண்டு நிறுவனங்களிடமிருந்து எந்திரன் படத்தை வாங்கி, தானே தயாரித்தது சன் பிக்சர்ஸ்.
 • எந்திரன் படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா ராய் வாங்கிய சம்பளம் ரூ.6 கோடி. படத்தில் வில்லனாக நடித்து இருப்பவர், Danny Denzongpa.
 • ரஜினி நடித்த சந்திரமுகி, சிவாஜி படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் வலம் வந்தவர்கள் வடிவேலு மற்றும் விவேக். ஆனால், எந்திரனில் ரஜினியுடன் காமெடி செய்திருப்பதோ சந்தானம் மற்றும் கருணாஸ்.
 • Men in Black Series படங்களுக்கு காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்றிய Mary E. Vogt, எந்திரனில் மனிஷ் மல்கோத்ராவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். Mary E. Vogt பணியாற்றிய முதல் இந்திய திரைப்படம் இதுவே!
 • உலக அளவில் சூப்பர் ஹிட் படங்களான The Matrix, Crouching Tiger and Hidden Dragon ஆகிய படங்களுக்கு சண்டைக் காட்சிகள் வடிவமைத்த Yuen Woo Ping இப்படத்துக்கு பீட்டர் ஹெய்னுடன் இணைந்து சண்டை காட்சிகள் அமைத்திருக்கிறார்.
 • Avatar, Star Wars, Titanic ஆகிய படங்களுக்கு ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் செய்த Industrial Light & Magic நிறுவனம், இப்படத்தில் பணியாற்றியுள்ளது. இந்த நிறுவனம் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் பிரிவில் இதுவரை 15 முறை ஆஸ்கர் விருதுகளை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 • Aliens, Terminator 2 மற்றும் Jurassic Park ஆகிய படங்களுக்கு Animatronics செய்த Stan Winston Studios இப்படத்தில் பணியாற்றியுள்ளது.
 • ரஜினியின் மேக்கப்புக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.3 கோடி. சிகை அலங்காரத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் தமிழில் ஒரு படமே தயாரிக்கலாம்!
 • எந்திரன் படத்தில் நடித்ததற்காக ரஜினி இதுவரை சம்பளம் வாங்கவே இல்லை. ரீலிஸ் ஆகும் தினத்தில் சம்பளம் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.
 • எந்திரன் படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ..’ எனும் பாடலை மிச்சு பிச்சு என்ற இடத்தில் படமாக்கி இருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படமான ‘Quantum of Solace’ படத்துக்கு கூட அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கவில்லை. அங்கு நடந்த முதல் சினிமா ஷுட்டிங் ‘எந்திரன்’ தான்!

Filmmaker Shankar speaks about ‘Endhiran’

Advertisements

9 thoughts on “எந்திரன் – ஒரு சிறப்புப் பார்வை

 1. ஜெகதீஸ்வரன் October 5, 2010 at 9:17 AM Reply

  சகோதரன் விமர்சனம் (http://sagotharan.wordpress.com/)

  கதையில் பெரியதாக புதுமை உள்ளது போல தெரியவில்லை. 10 வருடத்திற்கு முன் யோசித்த கதை என்பதால் விட்டுவிடலாம். பிரம்மாணடத்திற்கு சங்கர் உழைத்த உழைப்பு நிச்சயம் பாராட்டுக்குறியது. அடுத்த கட்டத்திற்கு தமிழ் சினிமா கூட்டி செல்வார் என நினைத்தேன். டெக்னாலஜி விசயத்தில் இது சாத்தியப்பட்டிருந்தாலும், கதைவிசயத்தில் இல்லை.அதே முக்கோண காதல், வேறுகதாநாயகனுக்குப் பதிலாக ரோபோ. என்னை ஏமாற்றி விட்டார் சங்கர்.

  ரஜினியை பாராட்டியே ஆகவேண்டும். எல்லோரும் பாராட்டி விட்டார்கள். குறிப்பாக அந்த கருப்பு ஆடு காட்சியும், வில்லத்தனமான சிரிப்பும் அதிரவைக்கிறார். கதையமைப்பினை தவற வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. சுஜாதா இருந்திருந்தால் இன்னும் படம் மெருகேறியிருக்கும் என்பது உண்மை.

  ரோபோ தீயிலிருந்து பெண்ணை நிர்வாணமாக கூட்டி வருவது சிரிதும் ஆபாசமில்லாம் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எல்லோரும் பார்த்துவிட்டார்கள் என்பதற்காக அந்தப் பெண் செத்துபோவதுபோல காட்சியமைப்பு இருக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். இன்னும் எத்தனைகாலம்தான் மானத்தினை காக்கச் சொல்லி பெண்களை சாகடிக்கச் சொல்லப் போகின்றார்களோ என தெரியவில்லை. ஆபத்துகாலத்தில் கூட நிர்வாணத்தினை ஏற்றுக்கொள்ளாத சமூகம் சீர்கெட்டது என்பது புரிந்துகொள்வார்களா என தெரியவில்லை.

  காதல், மானம் என்று தமிழ்ப் படங்களுக்காக யோசிப்பதை எந்திரனோடாவது விட்டுவிடுங்களேன். ப்ளீஸ்.

 2. ஜெகதீஸ்வரன் October 5, 2010 at 9:17 AM Reply

  என் பங்கிற்கு நானும் சேர்ந்துகொண்டேன்.

 3. BaalHanuman October 5, 2010 at 2:48 PM Reply

  மிகவும் நன்றி ஜெகதீஸ்வரன் உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு….

 4. கிரி October 11, 2010 at 2:39 AM Reply

  என்னுடைய தளத்தை குறிப்பிட்டதற்கு நன்றி

  //அவர் எழுதிய பகுதிகளில் நிறைய வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதுவே எந்திரன் படத்தில் சுஜாதாவின் பங்க‌ளிப்பு பற்றி உணர்ச்சிவசப்படாத தர்க்கரீதியான என் அவதானிப்பு. சுஜாதாவை கிட்டதட்ட தன் தந்தை என்பது போலவே ஷங்கர் பேசி வந்திருக்கிறார். அதனால் அவரது பெயரை இருட்டடிப்பு செய்ய வேண்டிய நிலையோ, நிர்ப்பந்தமோ ஷங்கருக்கு இல்லை. அதற்கு மேல் இந்த under-quality எழுத்தில் அவர் பெயரை அதிகப்படி associate செய்வது பாவம் என்று கூட விட்டிருக்கலாம். தப்பில்லை என்று தான் தோன்றுகிறது. //

  ஏற்றுக்கொள்ளும் படி உள்ளது.. ஆனால் அவரது கதைக்காகவது மரியாதை கொடுத்து இருக்கலாம்.

  //சிவாஜியில் அமெரிக்க ரிட்டர்ன் ரஜினி அடிக்கடி COOL என்று சொல்வது போல்எந்திரன் சயின்டிஸ்ட் ரஜினி சில சமயம் வாக்கியங்களின் முடிவில் DOTஎன்கிறார். சிவாஜியின் போது ரஜினியைப் பின்பற்றி பல ஆர்வக்கோளாறுகள் அடிக்கடி தேவையின்றி COOL என்று பயன்படுத்த ஆரம்பித்தனர் (குறிப்பாய் மென்பொருள் நிறுவனங்களில்). இப்போது DOT என்பதைப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள் – அதை நினைத்தாலே குமட்டுகிறது//

  🙂 ஹா ஹா ஹா நான் கூட எழுதும் போது DOT என்று குறிப்பிடுகிறேன் உங்களைப்போல… நீங்க சொன்னால் தான் குமுட்டுகிறது என்று கூறியதால்.. இது அப்ப ஓகே 😉

 5. BaalHanuman October 12, 2010 at 2:56 AM Reply

  கிரி,

  நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சுஜாதாவைப் பற்றிக் குறிப்பிடாத விமர்சனமே இல்லை. விகடன் விமர்சனம் உட்பட.

  சுஜாதாவின் வார்த்தைகளிலேயே சொல்வதானால்,
  (நிறமற்ற வானவில் – சுஜாதா நாவலில் இருந்து….)

  “இறந்து போயிட்டாங்கன்னு சொல்றதில அர்த்தமேயில்லை..”

  “எப்படி ?”

  “நம்ம மனசிலே அவங்களைப் பத்திய நினைப்புகள் இருக்கிற வரைக்கும் தே டோன்ட் டை !”

 6. “தமிழைவிட இந்திப் படங்களின் ரீச் அதிகம். ஆனால், அதை இப்போ ‘எந்திரன்‘ அடிச்சு உடைச்சிருச்சு. எந்த பட்ஜெட்டில், எந்த மொழியில் படம் எடுத்தாலும் பெருசா வியாபாரம் பண்ண முடியும்னு ‘எந்திரன்‘ நிரூபிச்சிருச்சு.

 7. Srinivas Uppili October 18, 2010 at 4:11 PM Reply

  எந்திரன் தந்த எனர்ஜி…. நெகிழ்கிறார் இயக்குநர் ஷங்கர்!
  =====================================================
  ‘எந்திரன்’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பும் பாராட்டுகளும் தனக்குப் புத்துணர்வைத் தந்துள்ளது என நெகிழ்கிறார் இயக்குனர் ஷங்கர்!

  படத்தைத் தொடங்கியதில் இருந்து இசை வெளியீடு வரை அவ்வப்போது தனது எண்ணங்களையும் அனுபவங்களையும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலமாக பதிவு செய்து வந்த இயக்குனர் ஷங்கர், எந்திரன் ரியாக் ஷன்களைக் கோர்த்து நன்றி நவில்கிறார்.

  “எந்திரன் படத்தை பார்த்து ரசித்து ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. விமர்சனம் செய்து பாராட்டிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

  தெற்கு, வடக்கையும் தாண்டி, உலக அளவில் ‘பாக்ஸ்-ஆபிஸ்’ சாதனையை நிகழ்த்தியிருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

  எந்திரனைப் பார்த்த பிறகு, என்னை நேரடியாகவும் போன் மூலமும் தொடர்புகொண்டு இந்தியத் திரையுலகின் முக்கியக் கலைஞர்கள் பாராட்டினர்.

  அமீர் கான் படத்தை பார்த்து விட்டு, என்னை வீட்டுக்கு அழைத்துப் பாராட்டியதில் நெகிழ்ந்துபோனேன். நான், அமீர்கான், அவருடைய மனைவி கிரண் ராவ் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் எந்திரன் படத்தை பற்றி விடிய விடிய பேசினோம்.

  எந்திரனை ரசித்துவிட்டு தனது பரவசத்தைப் பகிர்ந்துகொண்டார், ஹிர்த்திக் ரோஷன். பூச்செண்டுடன் அழகான வாழ்த்துச் செய்தியையும் அனுப்பி அசத்தினார், நடிகர் கமல்ஹாசன்.

  கன்னட நடிகர் உபேந்திரா, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் இயக்குனர்கள், நடிகர்கள் பலரும் தங்களது பாராட்டைப் பகிர்ந்து கொண்டனர்.

  இயக்குனர் பாலச்சந்தரிடம் இருந்து வந்த வாழ்த்துச் செய்தியைக் கண்டு வியந்துவிட்டேன். திரையுலகில் 30 ஆண்டுகளாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும் அவரே எனக்கு ரோல் மாடல். அவரைப் போல் 15 ஆண்டுகளேனும் இயக்குனராக நிலைக்க வேண்டும் என்பதே எனது லட்சியம்.

  அவரது வாழ்த்துக் கடிதத்தைப் படித்தபோது, உணர்வெழுச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டேன். கடித்ததை முழுவதும் படித்து முடித்த அந்தத் தருணத்தில், எனது கண்ணீரை அடக்க முடியவில்லை. எனது தொழிலில் பணிவுடனுடம், கூடுதல் எனர்ஜியுடனும் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது,” என்று நெகிழ்ந்திருக்கிறார் ஷங்கர்.

  எந்திரன் படத்தை ‘இந்தியாவின் அவதார்’ என இயக்குனர் பாலச்சந்தர் தனது வாழ்த்துக் கடிதத்தில் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 8. BaalHanuman October 19, 2010 at 2:21 AM Reply

  ஷங்கரைப் பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதத்தில், எந்திரன் படத்தை இந்தியாவின் அவதார் என்றும், இயக்குநர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றும் வர்ணித்துள்ளார்.

  ஆங்கிலத்தில் இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், “ரஜினியை நான்தான் அறிமுகப்படுத்தினேன். நடிகராக்கினேன். இன்னும் சில இயக்குநர்கள் அவரை ஹீரோவாக்கினார்கள். மணிரத்னமும் சுரேஷ் கிருஷ்ணாவும் அவரை பெரிய கமர்ஷியல் நாயகனாக்கினார்கள். ஆனால், சினிமாவின் பன்முகப் பரிமாணங்களிலும் ஜொலிப்பவராக நீங்கள் ரஜினியை மாற்றுயுள்ளீர்கள். உங்கள் எந்திரனுக்கு தலை வணங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

  அந்தக் கடிதம்:

  Dear Shankar,

  A craftsman uses his tools, an engineer his learning, a painter his talent, a musician his gifts, a singer his skills, a politician his experience, a philosopher his knowledge, a swami his faith, a priest his prayers, a businessman his resources, – but you use all these – but more important you use the opportunities too, with all your mind, heart and soul.

  If somebody had given me the opportunity to make a film with Rajinikanth and Aishwarya, given me unlimited resources, given me the permission to use whatever canvas or geography I choose too – I certainly would not know what to do!

  I would probably in the end, made a film, which may have made the audience applaud – but I certainly could not have made a film that makes a eighty years old man like me- clap his hands in glee!

  The most saleable star in the country, the most beautiful woman in the world, the most acclaimed composer in all music, and a discerning knowledgeable producer, with deep endless pockets is the sort of gauntlet that not many people would take-up because it is like walking a knife – edged precipice to doom – but you have accepted the challenge with your characteristic courage – and have come out rocking and smelling of roses.

  I can modestly say that I know Rajnikanth. Infact I christened him. And also converted him into an actor. After me, a few other directors made him a hero. After that Manirathnam and Sureshkrishna made him a commercial certainty. But you have made him into a cinema conglomerate.

  I introduced Rajini as a bad man. You have made him worse. Wonderfully worse.

  The scene where Chitti dismantles himself brought a lump to my throat. I turned to see my grandson sobbing and my son also casually wipe his eyes. You can make three generations dance to your tunes? Are we in the same business, the same profession superman?

  But then I forget that cinema is not a mere business for you. It is like a beast inside, which chases your obsession for creativity and pushes your imagination and drives your horizons, to greater and wider geographies.

  When I see the crowds that throng the theatres all over the world, when I have personally experienced their reactions inside, it seems that you are the Pied piper, who has taken cinema back to it magic and its fascination.

  And finally- atleast for cinema’s sake, may the SUN never set on the Maran empire, or lights ever fade, or curtains ever fall on Shankar film ever.

  Bravo brave boy – I bow to your courage, conviction and commitment.

  Bravo – I bow to you for ENTHIRAN.

  A POST SCRIPT LITERALLY WILL IT BE TOO MUCH IF I SAY ENTHIRAN IS “AVATHAR”

  YOU ARE OUR JAMES CAMERON

  AND SUN PICTURES OUR MGM..?

  WHY NOT?

  Yours Sincerely,

  K.Balachander

  -இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 9. Harish Ragunathan October 4, 2011 at 11:47 PM Reply

  சுஜாதா

  இப்பொழுது சுஜாதா இருந்திருந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார். அவரின் விஞ்ஞானக் கதைகள் இந்த அளவுக்கு அருமையாக திரை வடிவில் வந்ததில்லை. கதை ஷங்கருடையது என்றாலும் அதன் உருவாக்கத்தில் பெரும் பங்கு சுஜாதாவுக்கே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தக் கதை அவரின் ‘என் இனிய இயந்திராவை‘ ஞாபகப்படுத்துகிறது. நிச்சயம் இது ஒரு மைல் கல். இந்த படக்கதை நாவலாக வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் படிப்பதற்கு.

  ரஜினி

  அடடா, எவ்வளவு நாளாயிற்று ரஜினியின் வில்லன் நடிப்பைப் பார்த்து! அதுவும் இதில் ஒன்றுக்கு இரண்டு, இல்லை இல்லை நூறு ரஜினிகள்….களைகட்டுகிறது ஆட்டம். நிச்சயமாக என் வோட்டு சிட்டிக்கே. விஞ்ஞானி ரஜினி அடக்கமான பாத்திரம். ஆராய்ச்சி, காதல் என்ற இரண்டு வட்டங்கள் அவருக்கு. சிட்டி என்கிற ரோபோட்டாக வரும் இரண்டாம் ரஜினி தூள் கிளப்புகிறார். ஒரு இயந்திரத்தின் நடை, பாவனை, பேச்சு எல்லாம் அப்படியே தத்ரூபமாக இருக்கிறது. முதல் முதலாக சிட்டி வரும் போதே விசில் பறக்கிறது. அதற்கு மேல் எல்லா குத்தகையும் சிட்டிக்கே! டிவியை ‘போடுவதிலிருந்து‘ கார் ஓட்டுவதில் இருந்து ஐஸ்வர்யாவை டாவடிப்பது, விஞ்ஞானி ரஜினியைக் கலாய்ப்பது, என்று முதல் பாதியில் அவரின் ஆட்டம் அபாரம்.

  இரண்டாம் பாதியில் வரும் சிட்டி…ஆஹா…அட்டகாசமான வில்லன்! கண்ணாடியில் தன்னை பார்த்து சிரிக்கும் அந்த சிரிப்பு, தெனாவட்டாக சவால் விடும் அந்த தன்னம்பிக்கை, அசால்ட்டாக எல்லாவற்றையும் அடித்து நொறுக்கும் அந்த குரூரம், சபாஷ்!

  இவ்வளவு இருந்தும் முதல் பாதியில் வரும் சிட்டி மீதி இரண்டு ரஜினிகளையும் தூக்கி சாப்பிடுகிறார். இறுதியில் மானிடத்தைப் பற்றி சிட்டி சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நிஜம். ரஜினிக்கு இது மறக்க முடியாத படம்.

  ஐஸ்வர்யா

  இந்த கதையே அவரை சுற்றிதான் இருக்கிறது. வசீகரனும் சிட்டியும் போட்டி போட்டுக்கொண்டு ஐஸைக் காதலிக்கும் இடங்கள் நல்ல romance. அதிலும் உணர்ச்சிகள் வந்த பிறகு சிட்டி அவருக்காக செய்யும் வேலைகள் தூள் ரகம். ஐஸ்வர்யாவுக்காக கொசு என்ன, மலையைக் கூட கொண்டு வரலாம். அவ்வளவு அழகு. வெறும் பொம்மையாக இல்லாமல் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிட்டிக்காக வசீகரனிடம் வாதாடுவது, சிட்டியின் பிடியில் இருந்தும் அவனுக்காக பரிதாபப்படுவது, முதல் முதலாக சிட்டி மேடை ஏறி பேசும் பொது சந்தோஷப்படுவது, தமாஷாக Toy Friend என்று அவனைக் கலாய்ப்பது என்று ஐஸ்வர்யா புகுந்து விளையாடிருக்கிறார்

  ஷங்கர்

  நான் அநேகமாக ஷங்கரின் எல்லா படங்களையும் பார்த்து இருக்கிறேன். எல்லாவற்றிலும் நல்ல கருத்துகளோடு பிரம்மாண்டம் இருக்கும். எந்திரன் அவரின் முந்தைய படங்களில் ஒரு திருப்புமுனை. குறிப்பாக இறுதி முப்பது நிமிடங்கள் அட்டகாசம். சண்டைகாட்சிகள் நம்மை once more கேட்க வைக்கும். A good entertaining, message oriented film.

  ரஹ்மான்

  இப்படி ஒரு கதைக்கு எப்படி இசை தர வேண்டுமோ அப்படி தந்திருக்கிறார் இசைப் புயல். குறிப்பாக காதல் அணுக்கள் பாட்டு நல்ல மெலடி. இடைவெளிக்கு பிறகு வரும் இரண்டாவுது சிட்டி அறிமுகமாகும் போது பின்னணி இசை ஜோர் ரகம். சிட்டி-சனா ஆடும் அந்த நடனம் நம்மை தாளம் போட வைக்கும். உறுத்தாத இசை.

  கவிப்பேரசு வைரமுத்து இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ரஜினியை மந்திரவாதி என்றார். அது மிகையல்ல. ரஜினி மந்திரம் நம்மை முழுவது ஆட்டுவிக்கிறது.

  நிச்சயம் பார்க்க வேண்டிய படம். குறிப்பாக குழந்தைகள் ரசிப்பார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s