கு’பேர’ ராஜ்ஜியம்


நண்பர் திருமலை ராஜன் பகிர்ந்து கொண்ட இந்தியா டுடே கவர் ஸ்டோரி….

டீ வி சேனல் சினிமா தயாரிப்பு வரை ஒட்டுமொத்த மீடியா உலகமும் கருணாநிதி குடும்பத்தின் ஆளுகைக்குள் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.  இது நல்லது தானா ?

1970 களில் தனது மகன் மு.க. முத்துவை  எம்.ஜி.ஆருக்கு எதிராக உருவாக்க நினைத்த கருணாநிதியின் முயற்சி தோற்றிருக்கலாம்.  ஆனால் இன்று அவரது குடும்பத்துக்கும், சினிமாவுக்குமான உறவு பிரிக்க முடியாதது.

கருணாநிதி குடும்பத்தினர் தயாரிக்கும் படங்களுக்கு உள்ள சாதகமான அம்சம், அவர்களது டீ.வி சானல்களில் அப்படங்களுக்குக் கிடைக்கும் அதிக பட்ச விளம்பரங்களும் திரைப்பட தர வரிசையில் முதலிடமும்தான்.

கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா ?  கலைஞருக்கு பேரன்  இருக்கக் கூடாதா ?  அவர்கள் திரைப்படத்துறையில் ஈடுபடக்கூடாதா ?

IndiaTodayinside – Cover Story

வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தத் துறையிலே ஈடுபட்டது கிடையாதா ?  என்றார் மு. கருணாநிதி.

Advertisements

4 thoughts on “கு’பேர’ ராஜ்ஜியம்

 1. ராஜன் September 10, 2010 at 1:04 PM Reply

  இதற்கெல்லாம் ஒரு வழி இருக்கிறது. நேர்மை நியாயம் போன்றவற்றில் நம்பிக்கைக் கொண்டுள்ள ஒவ்வொருவரும் இந்த ரூலிங் மாஃபியாக்களின் எந்தவொரு பொருளையும், சேவையையும் வாங்கக் கூடாது. சன் நெட்வொர்க்குக்கு சப்ஸ்க்ரிப்ஷனை உடனே ரத்து செய்ய வேண்டும். இந்தக் குடும்பத்துடன் சம்பந்தம் உள்ள எந்தப் பொருளையும் புறக்கணிக்க வேண்டும். இவர்கள் நடத்தும் ஸ்பைஸ் ஜெட்டில் பயணிக்கக் கூடாது. இவர்கள் நடத்தும் சன், கே, கலைஞர், உதயா போன்ற எந்தச் சானலையும் பார்க்கக் கூடாது பணம் கட்டக் கூடாது. இவர்கள் கேபிளைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் நடத்தும் பத்திரிகைகளை புறக்கணிக்க வேண்டும் இந்தக் குடும்பம் நடத்தும் எந்த சினிமாவையும் பார்க்கக் கூடாது அப்படியே பார்த்துத் தொலைக்க வேண்டிய அரிப்பு யாருக்கேனும் இருப்பின் திருட்டு வி சி டியில் மட்டுமே பார்க்க வேண்டும். முக்கியமாக வரவிருக்கும் எந்திரன் சினிமாவை ஒவ்வொரு மானமுள்ள, அக்கறையுள்ள தமிழனும் புறக்கணிக்க வேண்டும். இதையெல்லாம் நான் செய்கிறேன் செய்வேன். வெறுமே வாயளவில் நீதி, நேர்மை நியாயம் பேசி விட்டு ரஜினிகாந்த படம் ஷங்கர் படம் என்று இந்த மாஃபியாக்களுக்கு நமது காசைக் கொடுத்து அவர்களை மேலும் வளர்த்து விடக் கூடாது. இதை ஒரு உறுதி மொழியாகவே ஒவ்வொரு அக்கறையுள்ள தமிழனும் செய்ய வேண்டும். செய்வார்களா? செய்வீர்களா?

  அன்புடன்
  ராஜன்

 2. BaalHanuman September 17, 2010 at 6:23 AM Reply

  திரைப்படத் துறையை முழுக்கவே ஜீரணம் செய்தாகிவிட்டது. ரியல் எஸ்டேட் பாதி விழுங்கப்பட்டு விட்டது. சேட்டிலைட் சேனல், கேபிள் டி.வி-க்கள்பற்றிச் சொல்லவே வேண்டாம். ‘எங்கெங்கு காணினும்வாரிசு களடா!’ என்ற நிலையால், மக்கள் எரிச்சலில் இருக் கிறார்கள். தவிர, மாநிலத்தின் பெரிய பிரச்னைகள் எதையும் இந்த அரசு தீர்த்ததாகத் தெரியவில்லை. இலவசங்களைத் தங்கள் சாதனைகள் என்று இவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ள முடியாது.

  “தனது ஐந்தாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பருவத்தில் இருக்கிறார் கருணாநிதி. இந்த ஆட்சியின் ப்ளஸ், மைனஸ்களைப் பட்டியல் இடுங்களேன்?”

  “இது தனது குடும்பத்துக்கு என கலைஞரால் டெடிகேட் செய்யப்பட்ட ஐந்தாண்டு காலம். கலைஞரின் குடும்பத்தினர் மென்மேலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள். பல பதவிகளை அடைந்திருக்கிறார்கள். செல்வம் பெருகியிருக்கிறது. ஆக, ஐந்தாவது முறை முதலமைச்சர் பதவிக் காலம் என்பது, கலைஞரின் குடும்பத்துக்கு மிகச் சிறப்பான ஒன்றா கவே கடந்திருக்கிறது!”

  “அப்போ இந்த ஆட்சியில் ப்ளஸ் பாயின்ட் என்று எதுவுமே இல்லையா?”

  “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க? நான் சொன்னது ப்ளஸ் பாயின்ட் இல்லையா? ஒரு குடும்பம் செழிக்கிறது சார். அது எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்?! மாபெரும் குடும்பம் அது. அதற்குப் பல கிளைகள். அவை அனைத்தும் செழிக்கின்றன. அதை எப்படி ப்ளஸ் இல்லைன்னு சொல்ல முடியும்? இதுக்கு மேல் என்ன ப்ளஸ், மைனஸ் அடுக்கி மார்க் போடுறது. போதும் சார்!”

  நன்றி – விகடன் 22-09-2010 (சோவுடன் ஒரு சந்திப்பு…)

 3. BaalHanuman September 17, 2010 at 10:51 AM Reply

  ஈரோடு அதிபன் கூறுகிறார்…..

  “கருணாநிதியின் வாரிசுகள் வரிசையாக சினிமாவுக்கு வந்துவிட்டார்களே ?”

  “அதானே … இனி கலைஞர் டி.வி..யில் பட வரிசை பத்தில் எல்லாப் படங்களுமே நம்பர் ஒன்னில் இருக்குமோ ?”

  நன்றி – விகடன் 22-09-2010 (நானே கேள்வி… நானே பதில்!)

 4. BaalHanuman September 21, 2010 at 1:09 AM Reply

  22 – 9 – 2010 துக்ளக் கேள்வி பதில் பகுதியில் இருந்து…

  கே: ‘குடிக்கிற தண்ணீரில் ஆரம்பித்து, சினிமா தயாரிப்பு வரை கருணாநிதி குடும்பத்தாரின் சாம்ராஜ்யம் பெருகிக் கொண்டே வருகிறது’ — என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறியுள்ளது பற்றி ?

  ப: அநியாயமாகப் பேசக் கூடாது. தெரு ஓர இட்லிக் கடைகள்; பீடா — பீடிக் கடைகள்; கட்டை வண்டியில் காய்கறி வியாபாரம் போன்றவற்றை இன்னமும் முதல்வரின் குடும்பம் விட்டு வைத்திருக்கிறது. அந்தப் பெருந்தன்மையை பாண்டியன் பாராட்ட வேண்டாமா ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s