சுஜாதா — கணையாழி கடைசிப் பக்கங்கள்


சுஜாதா கணையாழியில் 30ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல், வேடிக்கைகள் என விரியும் இப்பத்திகள், வெளிவந்த காலத்தில் பரவலாகப் படிக்கப்பட்டவை; விவாதிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்.என்ற பெயரிலும் சுஜாதா என்ற பெயரிலும் ‘நீர்க்குமிழிகள்‘, ‘பெட்டி‘, ‘கடைசிப்பக்கங்கள்‘ எனப் பல தலைப்புகளில் இவை எழுதப்பட்டன. சுஜாதா என்ற ஆளுமையின் பல்வேறு தோற்றங்களையும் அந்தந்தக் காலகட்டத்தின் பதிவுகளையும் கொண்ட இந்நூல் ஓர் அரியஆவணமாகத் திகழ்கிறது.

என்ன சொல்வது இந்தப் புத்தகத்தைப் பற்றி, கற்றதும் பெற்றதுமின் ஓல்ட் வெர்ஷன். பொதுமக்களுக்காக இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம்(சில ஆயிரங்கள்) கணையாழி வாசகர்களுக்காக எழுதியதால் கற்றதும் பெற்றதுமைவிட நன்றாகவே வந்திருக்கிறது. மற்றபடிக்கு, சுயபுலம்பல்கள், நேம் டிராப்பிங்கள், ரோடே போடும் அளவிற்கு திறமையிருந்தாலும் ஜல்லியடித்திருப்பது என கற்றதும் பெற்றதுமின் பல விஷயங்களை முன்நாட்களிலேயே செய்திருக்கிறார் சுஜாதா கணையாழி கடைசி பக்கங்களில்.

“சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு…”, “ஜப்பானிய பத்திரிகைகள் எல்லாமே கணையாழி போல. கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள்…”, “‘எழுதினால் பிரசுரிக்க ஆள் இருக்கிறது என்று எதையும் எழுதும்’ சலுகை, கடிதம் எழுதினவருக்கும் கிடைத்திருப்பதால் புன்னகையுடன் மன்னிப்போம்”

போன்ற உதாரணங்கள் எல்லாம் போதும் என்று நினைக்கிறேன்.

மனிதர் கருணாநிதியில் ஆரம்பித்து, கமலஹாசன், ராஜீவ்காந்தி என்று பெயர்களை நீளமாக அடுக்குகிறார். கூடவே,

“…இந்தத் தரமான வாசகர் கூட்டத்தைக் கொச்சைப்படுத்தாதே என்று ஆதவன் கோபப்பட…”, “…இந்திரா பார்த்தசாரதி கிரிக்கெட் ஸ்கோர் என்ன என்று கேட்டார்…”, “…என்.எஸ்.ஜே. எனக்கு விஷன் இருக்கிறதா என்று கேட்டார்…”, “…வாசந்தி கணேஷ் வசந்த் கதை கணையாழிக்கு எழுதுவீர்களா? என்றார்…”

பெயர்கள், பெயர்கள் மீண்டும் பெயர்கள். மற்றும் நக்கலாக கடைசி நிறுத்தற்குறி வேறு, “…நண்பர் ஜெயராமன் தன் ஒரு வயது பையனுக்கு ‘தோபார்ளு இன்டலக்சுவல்’ என்று வேடிக்கை காட்ட(ம்) கூட்டம் தொடர்ந்தது…”

மற்றபடிக்கு, அதே பக்கத்தில் இருக்கும்

“…ஒரு இரண்டாயிரம் இன்டலெக்சுவல் வாசகர்களுக்கா, லட்சக்கணக்கான சாதாரண வாசகர்களுக்கா எழுதுகிறான்…”

“‘நீ பிரபலமாயிருக்கிறாய், அதனால் உன்னால் இலக்கியம் படைக்க முடியாது.’ இப்படிச் சிந்தாந்தத்தை நான் அடிக்கடி சந்தித்துவிட்டேன்.”

“…இந்தத் தருணத்தில் சாகாத இலக்கியம் படைக்கப்போகிறேன் என்று கெடிகாரத்தை பார்த்துக் கொண்டு எழுத முடியாது…”

போன்றவைகள் யோசிக்க வைக்கின்றன.

சுஜாதா எழுதிய ஒரு சைனீஸ் கவிதை

மன்னாரு மெதுவாக வந்து சேர்ந்தான்
மணி பார்த்தான், உட்கார்ந்தான், படுத்துக் கொண்டான்
சென்னை விட்டுத் திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்
சீக்கிரமே அவ்விடத்தில் கடந்து செல்லும்.

டைம் பத்திரிகையில் வந்த ஒரு வாசகம் தன்னைக் கவர்ந்ததாகச் சொல்கிறார் படித்துப் பார்த்தால் கொஞ்ச நாள் கழித்து தான் உல்டா செய்த அதே வாக்கியம்,

In the future everybody will be famous for at least fifteen minutes.

சரி போதும் கடைசியாக இதைப்பற்றி,

“கற்றதனாலாய பயனென்கொல் கற்றவனைக்
கட்டி அணைக்கா விடின்” இது என் ஜல்லி கிடையாது, தக்ஷிணாமூர்த்தி ‘திவ்ய தரிசனம்‘ இல் எழுதியதாக சுஜாதா சொன்னது.

மற்றபடிக்கு, நிறைய திரைப்படங்களை அறிமுகப்படுத்துகிறார், அதற்கு மொழி பாகுபாடு கிடையாது. கன்னடா, மலையாளம், தெலுகு, ஒரியா, குஜராத்தி என நீள்கிறது அந்த வரிசை. ஜப்பானுக்கு சென்று வந்ததைப் பற்றி, பாரதியின் சுயசரிதைக் கவிதை பற்றி, ஹைக்கூவை ஸ்கேலால் அளப்பது பற்றி, மணிப்பிரவாளப் பேச்சைப்பற்றி இப்படி நிறைய விஷயங்கள்.

நிச்சயமாய் முப்பதாண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை சுஜாதாவின் கண்கொண்டு நிச்சயமாய்ப் பார்க்கலாம் இந்த கணையாழி கடைசிபக்கங்களில். சுவாரஸியமாய் இருந்தது. எனக்கு. சுஜாதாவின் ஃ பேமஸான நக்கல் மொழியுடனும், ஒரு ஹைக்கூ மற்றும் ஒரு பசுவய்யா(சுரா) கவிதையுடனும் முடிக்கிறேன்.

“ஜப்பானில் பத்து நாட்கள் தங்கிவிட்டு சென்னை வந்த போது கஸ்டம்ஸ் அதிகாரிகளையும், எண்ணெய் போடாமல் முனகும் ஏர்போர்ட் கன்வேயரையும் பார்த்த பொழுது ‘திரும்ப ஜப்பான் போகலாமா?’ என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம் ஜப்பானில் ஜப்பானியர்களால் தான் இருக்க முடியும். இந்திய தேசத்தில் சுபிட்சம், சந்தோஷம் இவற்றுக்கெல்லாம் அர்த்தம் வேறு.

எந்த நாட்டில் மாதம் முப்பது ரூபாய்க்கு வேலைக்காரச் சிறுவன் கிடைப்பான்?

எந்த நாட்டில் நினைத்த மாத்திரத்தில் சுவர்களில் சுதந்திரமாக எழுத முடியும் நம்பர் ஒன் போகமுடியும்?

எந்த நாட்டில் லஞ்சத்தால் பெருமாளையே வாங்க முடியும்?

மேரா பாரத் மஹான்.”

சில ஹைக்கூகள்.

மூங்கில் நிழல் இரவெல்லாம்
மாடிப்படி பெருக்கிற்று
தூசுகள் அகலவில்லை

மரியாதை செலுத்த விரும்பும்பொழுது
பெற்றோர்
இறந்து விட்டனர்

கூந்தல் போர்த்த உடல்
நெய்யும் தறியில்
காஞ்சிப் பட்டு

—————–

பசுவய்யா கவிதை

வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிந்தது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம் போல
ஆயுளின் கடைசித் தேசல் போல
இனி ஆயத்தங்களைத் தின்று சாகும் என்
முதுமை…
பின்னும் உயிர்வாழும் கானல்…

மோகன் தாஸ்

தொடர்புடைய பதிவு..
கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா

கணையாழி கடைசிப் பக்கங்கள் (1965-1998) – லேகா

கணையாழியின் கடைசி பக்கங்கள் – சுஜாதா

Advertisements

One thought on “சுஜாதா — கணையாழி கடைசிப் பக்கங்கள்

  1. BaalHanuman January 11, 2011 at 1:05 AM Reply

    பா.ராகவனின் நிரந்தர விருப்பத்துக்குரிய நூல்களின் பட்டியலில்’கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’ இடம் பெற்றிருக்கிறது.

    http://www.writerpara.com/paper/?p=385

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s