எந்தப் படம் வெற்றி பெறும் ? — சுஜாதா


“எந்தப் படம் வெற்றி பெறும் ?  என்பதை சினிமா உலகில் யாராலும் படம் வெளி வருவதற்கு முன்பே சொல்ல முடிவதில்லை.  எத்தனையோ தொடர்பற்ற காரணங்களுக்காகப் படங்கள் வெற்றியடையலாம்.   போட்டிக்கு வேறு படம் இல்லாதது.   க்ளைமாக்ஸில்  ஒரு நல்ல உணர்ச்சி,   ஒரே ஒரு நல்ல பாட்டு,  காமெடி ட்ராக் என்று ஏதாவது ஒரு சிறப்பே சில சமயம் போதுமானதாக இருக்கும்.

காதல் கோட்டைகண்ணெதிரே தோன்றினாள் போன்ற படங்கள் வலுவான இறுதிக் காட்சியால்,   படத்தை விட்டு வெளியே வரும்போது ஏற்பட்ட மன நிறைவினால் வெற்றி பெற்றன.

இது முக்கியம்.  ஏறக்குறைய மூன்று மணிநேரம் படம் பார்த்துவிட்டு படம் ஆரம்பித்த போது இருந்த மன நிலையிலேயே பார்வையாளன் இருந்தால் அந்தப் படம் நிச்சயம் தோல்வி அடையும்.

https://i0.wp.com/www.goodtamil.com/wp-content/uploads/2009/04/heyramkamaltamilwatchonline.jpg
ஹே ராம் ஓர் உதாரணம்.

https://i0.wp.com/img142.imageshack.us/img142/5779/thumbs20090904152705.png
படத்தின் ஆரம்பத்தில் காந்தியைக் கொல்ல தன்னைத் தயார் செய்துகொண்ட கதாநாயகன் இறுதியில் காந்தியைக் கொல்லாமலே திரும்பிவிடுகிறான்.  இதற்கு எதற்கு மூன்று மணி நேரம் ? என்ற கேள்வி இயற்கையாக இயல்பாக எல்லார் மனதிலும் எழுந்தது.   இத்தனைக்கும் ஹே ராம் படத்தில் மிகச் சிறந்த நடிப்பு,  படப்பிடிப்பு,  ஆஷா போன்ஸ்லே போன்றவர்கள் பாடிய இனிய கானங்கள். ம்ஹூம் போதவில்லை.  ‘கதையைச் சொல்லுங்கடா !’  என்று அதட்டினார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s