401 காதல் கவிதைகள் – குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்


தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.

இந்தப் புத்தகம் எதைப் பற்றி?

பெயரே விளக்குவது போல, எட்டுதொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையின் 401 பாடல்களுக்கும் எளிய தமிழ் கவிதை வடிவம் தந்திருக்கிறார். ஒவ்வொரு செய்யுளின் தலைப்பு ( தலைவன்/தலைவி/தோழி/கண்டோர்/செவிலித்தாய் கூற்று + திணை), அதை தொடர்ந்து செய்யுள், பிறகு தலைப்புடன் கூடிய ஒரு எளிய கவிதை, என ஒவ்வொரு செய்யுளுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது. வள வள கதைகள் இல்லை.

என்ன கிடைக்கும் இந்த புத்தகத்தில்?

தரமான காதல் கவிதைகள், சில பிரமிக்க வைக்கும் உவமைகள், சில தமிழ் சொற்களின் வேறு அர்த்தங்கள் ( உதாரணம், காமம் – பொய்)

என்ன கிடைக்காது இந்த புத்தகத்தில்?

மா – பெரிய போன்ற வார்த்தைக்கு வார்த்தை பொருள் விளக்குதல்.

யாரெல்லாம் படிக்கலாம்?

தமிழ் ஆர்வமுடையவர்கள், சங்க இலக்கியத்தை விரும்புபவர்கள், “நேற்று நீ எங்கள் தெருவில் நடந்து போனதால் தானோ என்னவோ” போன்ற காதல் கவிதைகளை படித்து சலித்தவர்கள், சங்க இலக்கியம் – திணை – குறுந்தொகை பற்றி அறியாமல் போனாலும் நல்ல ரசனையுடைவர்கள்.

யாரெல்லாம் தவிர்க்கலாம்?

ஒரு சின்னக் கவிதையை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்ய விரும்பாதவர்கள், சீக்கிரம் முயற்சியை கைவிடுபவர்கள்

எப்படி படிக்கலாம்?

தினம் காலையில் ஒரு செய்யுள், இரவு தூங்குவதற்கு முன் ஒன்று அல்லது தோன்றுகிற போதெல்லாம். ஒரு நாள் தலைவன் கூற்றை மட்டும் படித்தபடி வரலாம். ஒரு நாள் பாலைத் திணை மட்டும். எளிய கவிதையை படித்து விட்டு மீண்டும் செய்யுளை படித்து பார்க்கலாம். என்னென்ன வார்த்தைக்கு எப்படி அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்று ஆராயலாம்.

என்ன விளங்கும்?

தமிழ் இலக்கியம் எத்தனை செழுமையானது என்பதும், அதை எவ்வளவு சுலபமாக மறந்துவிட்டோமென்பதும், இன்றைக்கு எழுதப்படும் அழகிய காதல் கவிதைகள் எல்லாமே குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பதும். ( அந்த காலத்தில் எல்லாம் பெண்களின் தோள்களும் மூங்கில் போல இருந்தது என்பதும் ;) )

என்ன விளங்காது?

சில கவிதைகள், பாடலில் வருகிற சில பூக்கள்.

அடிக்கடி புத்தகத்தில் வருவது?

ஆண்மானும் பெண்மானும் சேர்ந்து குட்டையில் நீர் பருகுவது, தலைவியின் பசலை நோய்

மிகப்பெரிய பலம்?

பிரமிக்க வைக்கிற நெகிழ வைக்கிற கவிதைகள், எத்தனை முறை வேண்டுமானாலாம் படிக்கலாம்.

மிகப்பெரிய பலவீனம்?

அது நம்மை பொறுத்தது. எனக்கு – போதிய தமிழறிவின்மை.

எப்படி உன்னை நம்புவது?

எனக்கு மிகவும் பிடித்த ஏராளமனவற்றில் கண்ணை மூடிக் கொண்டு தேர்ந்தெடுத்த ஒரு தலைவன், தலைவி மற்றும் தோழி கூற்று, இங்கே.

பெரிய வயல், ஒரே ஒரு ஏர்

அசைகின்ற மூங்கில் போன்ற தோள்கள்
சண்டையிடும் கண்கள்
கொண்ட காதலி
வெகு தூரத்தில் இருக்கிறாள்.
பசுமையான அகன்ற வயலிருந்தும்
ஒரே ஒரு ஏருள்ள உழவன்போல
அவசரத்தில் தவிக்கிறேன்

(பாலை – தலைவன் கூற்று, பாடல் 131 – ஒரேருழவனார்)

கழுத்துமணி சப்தம்:

துளித்துளியாகக் கண்ணீருடன்
நான் புலம்புவதைக் கேட்பவர்
வேறு யாரும் உளரோ?
மழைத்தூரலில் வாடைக்காற்று வீசும்
குளிர் காலத்தில்
ஈயின் தொந்தரவு தாங்காமல்
எருது தலையசைக்க
கழுத்துமணியின் சப்தம் கேட்கும்
நள்ளிரவில்!

(குறிஞ்சி – தலைவி கூற்று, பாடல் 86 – வெண்கொற்றன்)

எப்படி தப்புவார்?

பூமியைத் தோண்டிப் புகுந்துகொள்ள முடியாது
வானத்தில் ஏற முடியாது
கடல்மேல் நடந்து செல்ல முடியாது
நாடு நாடாக, ஊர் ஊராக
வீடு வீடாகத் தேடினால்
அகப்படாமல் தப்பிவிடுவார
உன் காதலர்?

(பாலை – தோழி கூற்று, பாடல் 130, வெள்ளிவீதியார்)

நன்றி – அரவிந்த் (சிறுமழை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s