திருடா திருடா பற்றி சுஜாதா….



திருடா திருடா திரைப்படம் 1993 –ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த், பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுஜாதா கூறுகிறார்……
மணிரத்னம் பெங்களூர் வரும்போது சிலசமயம் என்னை வந்து சந்திப்பார்.  தன் புதிய படங்களின் கதையை ஒரு முறை என்னிடம் சொல்லி கருத்து கேட்பார்.  இந்த ஐடியா பிடித்திருக்கிறதா என்று கேட்டார்.

“கிராமத்தில் இரண்டு திருடர்கள்…..  ஒரு முடிவில்லாத சேஸ்.  இது பிடித்திருக்கிறதா ?”  என்றார்.
“பிடித்திருக்கிறது.  எழுதலாம்”  என்றேன்.

File:Album thirudathiruda cover.jpg
திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் கதிரும் (ஆனந்த்) அழகும் (பிரசாந்த்) இணைபிரியாத நண்பர்கள்   மேலும் இவர்களின் தோழியான ராசாத்தியும் இவர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றாள்.  காவல் துறையினரிடமிருந்து பலமுறை தப்பிச் செல்லும் இவர்கள் நடனமாடும் பெண்ணொருத்தியைச் சந்திக்கின்றனர்.  மேலும் அவளின் கூற்றுப்போல 1000 கோடிகள் மதிப்புடைய பணத்தினைத் தேடியும் செல்கின்றனர்.  இதன் பிறகு அவள் சர்வதேச அளவிலான திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் திருட்டுக் கும்பலில் ஒருத்தியெனவும் மேலும் அவள் வைத்திருக்கும் அடையாள அட்டை ஒன்றின் மூலமே அக்கும்பல்களின் தலைவனால் கடத்தப்பட்டுச் செல்லப்படும் பணத்தினைப் பெற முடியும் என்பதனையும் அறிகின்றனர்.  இவற்றைத் தெரிந்து கொள்ளும் அத்திருடர்களின் தலைவன் அவனுடைய காடையர் கூட்டத்துடன் தனக்குத் துரோகம் செய்தவளைத் தேடுகின்றான்.  பின்னர் அவர்கள் அப்பணத்தை எடுத்தார்களா இல்லை கதிரும் அழகும் அப்பணத்தைப் பெற்றனரா என்பதே கதையின் முடிவாகும்.
https://i1.wp.com/i33.tinypic.com/2rw0xmu.gif
  • இத்திரைப்படமே இந்தியாவின் அகேலா கிரேன் மூலம் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாகும்.
  • ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு சோர் சோர் என வெளியிடப்பட்டது
  • திருடா திருடா படத்தின் திரைக்கதை ராம்கோபால் வர்மா.
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் கூறுகிறார்….
[RamBW2-1.jpg]
மணி ரத்தினத்தின் ‘திருடா திருடா‘ (1993) படப் பிடிப்பின்போது, திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் சில வேண்டாத சம்பவங்கள் நிகழ்ந்தன. திருவட்டார், நாகர் கோவில்-கேரளா பார்டருக்கு மிக சமீபம். சாப்பாட்டில் அரிசி முழுசாக முறைத்துப் பார்க்கும். ஜனவரி வெயில் அங்கே கன்னங்கரேர் என்று ஆளைக் கருக்க வைக்கும்.
பிரமாதமான, புராதனக் கோவில். எக்கச்சக்கமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த பெரிய பிரகாரம். பிரம்மாண்டமான பெருமாளை தரிசனம் பண்ணுவதற்கே மூன்று வாசல்கள். அனந்தசயனமாகப் பாம்பின் மேல் படுத்திருக்கும் பெருமாளை தலை, தொப்புள், கால் என்று மூன்று வாசல்களிலும் உள்ளே போய் தரிசிக்க வேண்டும்.
காமெராமேன் P.C.ஸ்ரீராம், இயக்குனர் மணி போன்றவர்கள் கோவிலுக்குப் போகப் பிடிக்காத ஜாதிக்காரர்கள் என்பதால், நானும், பிரசாந்தும் மட்டும் போய் ஸ்வாமி தரிசனம் செய்தோம்.
கோவில் வெளிப் பிரகாரத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த படப்பிடிப்பை நிறுத்துமாறு திடீரென்று கலாட்டா செய்தார்கள் ஒரு உள்ளூர் கோஷ்டியினர். ‘சுத்த பத்தமில்லாத சினிமாக்காரர்களை கோவிலுக்குள் படமெடுக்க யார் அனுமதி கொடுத்தது?’ என்று யாரோ அதிரடி ஆன்மீகச் செம்மல் துள்ளல் சத்தம் போட, ஒரு பிரச்னை பூதாகாரமாக வெடித்தது. சிறிது நேரத்தில், அது உள்ளூர் அரசியல் கலாட்டாவாக (VHP vs Congress) உருவெடுத்தது. கிட்டத்தட்ட காமெரா, லைட் உபகரணங்கள், படப்பிடிப்பு சாதனங்கள் எல்லாமே உடைந்து சேதமாகும் நிலை வந்து விட்டது.
அந்த புராதனக் கோவிலில் விலை மதிப்பற்ற ஸ்வாமி நகைகள் பலவும் சமீபத்தில் திருடு போயிருக்கின்ற விபரமும் எங்களை திடுக்கிடச் செய்தது.
வழக்கம்போல் அவசர போலீஸ் கையைப் பிசைந்து கொண்டு நின்றது.

நேரம் ஆக ஆக, கூட்டம் தீவிரமாகி, கோஷங்கள், “அடிங்கடா, உதைங்கடா” ரேஞ்சுக்குப் போனதும், அன்றைய படப்பிடிப்பு கேன்சல் செய்யப்பட்டது.  நாங்களும் வேறு ஒரு லொகேஷனுக்கு போய்ச் சேர்ந்து, படப்பிடிப்பு வேலைகளைத் தொடர்ந்தோம்.

கொஞ்சம் நிலவு…..

தீ  தீ  தித்திக்கும் தீ…..

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்……


One thought on “திருடா திருடா பற்றி சுஜாதா….

  1. BaalHanuman March 30, 2011 at 3:15 AM Reply

    இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க முடியும். நடுவாசலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார்.பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது. இதனால் இவரை வணங்கினால், மறுபிறப்பு கிடையாது என்பது ஐதீகம். கருவறையில் கருடன், சூரியன், பஞ்சாயுத புருஷர்கள், மதுகைடபர் என்னும் அரக்கர்கள் உள்ளனர். சிரசின் அருகே ஹாதலேய மகரிஷி மண்டியிட்டு அமர்ந்துள்ளார்.ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s